நடுத்தர வருமானத்தினருக்கான உச்சநீதிமன்ற சட்ட உதவித்திட்டம்********************. இத்திட்டச் செயல்பாடுகள்நடுத்தர வருமானமுள்ளவர்களுக்குச், சட்ட உதவிகளைச் செய்யும் நோக்கத்துடன் நடுத்தர வருமானத்தினருக்கான உச்சநீதிமன்ற சட்ட உதவித் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தின் மொத்த வருமானம் ரூ.20.000/- அல்லது ஆண்டு வருமானம் 2,40,000/- க்கு மிகாமலும் இருக்கும் குடிமக்கள் நடுத்தர வருமானமுடையவர்களாகக் கருதப்படுகின்றனர்; தகுதியுடைய சிலருக்கு மாதவருமானம் ரூ.25,000/- அல்லது ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- இருப்பினும் அவர்களும் நடுத்தர வருமானமுடையவர்களாகவே கருதப்படுகின்றனர். சுய சார்புடைய இத்திட்டத்தின் ஆரம்ப முதலீடு முதல் நிர்வாகக் குழுவினரால் (First Executive Committee) தரப்படும்.இத்திட்டத்தின் கீழ்வரும் வழக்குகள் • உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட இருக்கும் வழக்குகள். • உச்சநீதிமன்றத்தின் சட்ட எல்லைக்குள் பின்வரும் வழக்குகள் வராது. a) சுங்கச்சட்டம் 1962 (custom act 1962) பிரிவு 130A இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள். b) மத்திய மற்றும் தீர்வை மற்றும் உப்புச்சட்டம் 1944 (Central and Excise and Salt Act, 1944) பிரிவு 35 இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள் c) தங்க (கட்டுபாடு) சட்டம் 1968, பிரிவு 82C இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள் d) தனியுரிமை வர்த்தக நடைமுறைக்கட்டுப்பாடு ( M.R.T.P. Act) 1969 பிரிவு 7(2) இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள்.k) மத்திய தீர்வை மற்றும் உப்பு 1944 சட்டத்தின் பிரிவு 35 L இன் கீழ்வரும் மேல் முறையீடு.e) வருமான வரி சட்டம் 1961 (Income Tax Act, 1961) பிரிவு 25 J இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள். f) அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 317 (1) இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள். g) குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் சட்டம் 1952 பகுதி 3 இன் தேர்தல் குறித்த வழக்குகள். h) பாராளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் குறித்த வழக்குகள். i) தனியுரிமை வர்த்தக நடைமுறைக்கட்டுப்பாடு சட்டம் 1969 (M.R.T.P. Act, 1969) இன் கீழ் வரும் மேல் முறையீடு. j) சுங்கச் சட்டம் 1962 பிரிவு 130 E, உட்பிரிவு (b) இன் கீழ் வரும் மேல் முறையீடு. l) செய்திகளை மறு ஆய்வு செய்தல் உதவிபெற அணுகும் சமயம் (When to approach for aid)• உச்சநீதிமன்ற நடுத்தர வருமானத்தினரின் சமுதாயம், பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞரையும் உறுப்பினராகக் கொண்ட வழக்கறிஞர் குழுவினை (panel of Advocates) கொண்டுள்ளது. இக்குழுவினை உருவாக்கும்போது ஒரு வழக்கறிஞரை, ஆனால் இரண்டுக்கு மேற்படாத வழக்கு நடைபெறும் நீதிமன்ற மாநிலத்தின் வட்டாரமொழி தெரிந்த வழக்கறிஞரை உறுப்பினராகக் கொள்ள வேண்டும் என்பது கவனத்தில் கொள்ளப்படுகிறது.உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடுக்கவோ, எதிர்த்து வழக்காடவோ நேரிடும் சூழல்களில், மத்தியதர வருமான சமுதாயத்தை வழக்காடுபவர் அணுகலாம்; அச்சூழல்கள் பின்வருவனவற்றையும் தன்னுள் கொண்டிருக்கும்; a) மேல் முறையீடு/சிறப்பு விடுமுறை மனுக்கள், உரிமையியல் அல்லது குற்றவியல், உயர் நீதிமன்ற ஆணைக்கு எதிரான வழக்கு, b) நீதிப்பேராணை மனு (Writ Petition)/ஆட்கொணர்வு மனு (Habeas Corpus) c) உரிமையியல் அல்லது குற்றவியல் வழக்கு ஒரு மாநிலத்தில் தேங்கி இருக்குமானால் அதனை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரும் மனு மற்றும் d) உச்சநீதிமன்ற சட்டச்செயல்பாடுகள் குறித்த சட்ட ஆலோசனை. செயல்படும் முறை (How it works) • வழக்கறிஞர்கள் குழு, ஒரு வழக்கில் பங்குபெறும்போது இத்திட்டத்தின், சட்டங்களுக்கு உட்படுவதாக எழுத்து மூலம் உறுதியளிக்கிறது.• விருப்பமுள்ள வழக்குரைப்போர் உச்சநீதிமன்ற நடுத்தர வருமான குழுவினரின் சட்ட உதவி மையத்தின் செயலரை அணுகும் முன் மையத்தால் அளிக்கப்படும் ஒரு படிவத்தினை நிரப்பி அதற்குரிய ஆவணங்களோடு குழுவின் செயலரை அணுக வேண்டும். (விலாசம்:- Supreme Court Middle Income Group Legal Aid Society, 109- Lawyers Chambers, Post Office Wing, Supreme Court Compound, New Delhi-110001)• ஆணையத்திலுள்ள (Committee) 3 வழக்கறிஞர்கள், விருப்ப அடிப்படையில் குழுவிற்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். விண்ணப்பதாரர், வழக்குரைப்பவர் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் அல்லது வழக்காடும் ஆலோசகர் (arguing counsel) அல்லது உயர் ஆலோசகர் (Senior Counsel) இவர்களில் யாராவது மூவரைச் சுட்டிக்காட்டலாம். விண்ணப்பதாரரின் தேர்வினை குழு மதிக்க முயலும். • பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர், வழக்காடும் ஆலோசகர் மற்றும் உயர் ஆலோசகர் இவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் வழக்கினை அளிக்க குழுவினருக்கு உரிமையுண்டு. விண்ணப்பதாரரின் மனுவினை பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர், வழக்காடும் ஆலோசகர், உயர் ஆலோசகர் இவர்களின் யாருக்கு வேண்டுமானாலும் தரும் உரிமை உச்சநீதிமன்ற (நடுத்தர வருமானக்குழு) சட்ட உதவி சமுதாயத்திடம் (Supreme Court (Middle Income Group) உள்ளது. சட்ட உதவிக்காக அணுக வேண்டிய இடம். (Where to approach for legal aid) • மனுதாரரின் மனுவை வாங்கியப் பின் சட்ட உதவிக்குழுவானது (legal aid society) அம்மனுவினை பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞரிடம் கொடுத்து, அவ்வழக்கு மேற்கொண்டு ஆவன செய்வதற்கு ஏதுவானதா என்பதை ஆய்ந்தறிந்த பின்னரே, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.• விண்ணப்பங்களை அச்சிடுதல் மற்றும் இதர அலுவலகச் செலவுகளை இத்திட்டத்தின் ஆரம்பத்தொகை ஏற்றுக்கொள்ளும்• மனுதாரர் இத்திட்டத்தின் பயன்களை அனுபவிக்கலாம் என்று கற்றறிந்த, பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர் என்று கூறினால், மட்டுமே இத்திட்டத்தின் பயன்களை மனுதாரர் அனுபவிக்க முடியும். அவ்வாறு மனுதாரரின் விண்ணப்பத்தில்/ வழக்குத் தாள்களில் பதிவு செய்த வழக்கறிஞர் மேலொப்பமிட்ட பின், (endorsement) உச்சநீதிமன்ற நடுத்தர வருமான சட்ட உதவிக்குழு, (Supreme Court Middle Income Group Legal Aid Society) மனுதாரரின் மனுவினை மனுதாரரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு சேவை வரியாக ரூ.350/- மட்டுமே வசூலிக்கும். சட்ட உதவிக்கான கட்டணம் (Fee for legal aid) இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வழக்கிற்கேற்ப ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டணத்தை செயலர் சுட்டிக்காட்ட, அத்தொகையை மனுதாரர் செலுத்த வேண்டும். அக்கட்டணத்தை செலுத்திய பின்னரே செயலர், வழக்கினை, நடுத்தர வருமானக்குழுவின் சட்ட உதவித்திட்டத்தின் (MIG Legal Aid Scheme) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர் / வாதாடும் ஆலோசகர் / குழுவின் மூத்த ஆலோசகரிடம் வழக்கின் தன்மை குறித்து கேட்பார்.• ஏற்படக்கூடிய செலவுகளின் அடிப்படையில் செயலரால் கூறப்படும் தொகையை, விண்ணப்பதாரர் ரொக்கமாகவோ, காசோலையாகவோ செலுத்த வேண்டும்.
நடுத்தர வருமானத்தினருக்கான உச்சநீதிமன்ற சட்ட உதவித்திட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
உயில் நடைமுறைகள்
*பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...
-
:1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது? -மூன்று தொகுதிகளாக. 2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைக...
-
மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் / CONSUMER GRIEVANCE REDRESSAL FORUM ( CGRF ) ****************************************************** தமிழ்ந...
-
*#பணியிடத்தில்_பாலியல்_வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) #சட்டம், 2013* *#பாலியல்_வன்முறை_தடுப்பு* இந்தியாவில் பணியிடத்தில் பாலியல...
No comments:
Post a Comment