https://kutumbapp.page.link/6egc1Zm4UsSdTSRi6
தகவல் ஆணையத்தின் முக்கிய தீர்ப்புகளின் தொகுப்புக்கள்.
1. *தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005பற்றி எனக்குத் தெரியாது எனப் பொதுத்தகவல் அலுவலர் கூறினால் அதை ஏற்க முடியாது என மத்தியத் தகவல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளன*. [மத்தியத் தகவல் ஆணையம் வழக்கு எண் (CIC/DS/A/2001/00050/2/04/2012) கேரள உயர்நீதிமன்றம் WP(C) NO&272 of 2007 (L)]
2. *மனுதாரர் ஆவணங்கள், கோப்புகளைப் பார்வையிட வரும்போது அவருக்கு உதவியாக இன்னொருவருக்கும் இசைவளிக்க வேண்டும் (மத்திய தகவல் ஆணையம் வழக்கு எண்* (CIC/SG/A/2009/000601)
3. *மொழிபெயர்ப்பாளரை மனுதாரர் அழைத்து வந்தால் அவருக்கும் இசைவளிக்க வேண்டும்*. (CIC/AD/A/2013/000761/4.4.2013)
4. *மாதிரிப் பொருட்களை மனுதாரர் கேட்டால் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் அல்லது பணி நிறைவடைந்தாலும் வழங்கவேண்டும்*. (CIC/WBA/A/00259/260/261/22.5.2006)
5. *மனுதாரருக்கு அனுப்பும் மறுமொழியில் அல்லது தகவலில் அல்லது கடிதப் போக்குவரத்தில் பொதுத் தகவல் அலுவலர் தனது சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டியதில்லை*. (CIC/691/SC/A/2006.F.NO.CIC/MA/A/2006/00146165/20.06.2006)
6. *பணியாளர் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பின் அவர் தொடர்பான குறிப்புக்கோப்பு படியைக்கேட்டாலும் தரவேண்டும்*. ;. (CIC/117/ICPM/2006/F.NO.PBA/061/94/28.9.2006)
7. *அரசு ஊழியரின் ஆண்டு மந்தன அறிக்கையினைத், தொடர்பான ஊழியர் கேட்டால் கட்டாயம் காண்பிக்கவேண்டும்*. (APPEAL NO.7631/2002/12.05.2008)
8. *மனுதாரர் கோரிய தகவல் தொடர்பான கோப்பு காணாமல் போய்விட்டது என அவருக்குத் தெரிவித்தால் உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கவேண்டும்*. [WP(C) NO.2132/2009,WP(C)NO.2143/2009/19.01.2006]
9. *ஆணையம் பலமுறை அழைப்பாணை அனுப்பியும் பொதுத்தகவல் அலுவலர் நேரில் வரவில்லை எனில் அவருக்குத் தண்டம் விதிக்கலாம்*. (WP.NO.44805/2012/10.1.2013)
10. *மனுதாரர் தகவல்கோரி அனுப்பி மனுவை அலுவலகத்தில் பெற்றுக்கொண்டபின், அது வரப்பெறவில்லையென்று பொதுத்தகவல் அலுவலர் தெரிவித்தால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். மேலும் மனுதாரருக்கு இழப்பீட்டுத்தொகையும் வழங்கவேண்டும்*.(CIC/SM/A/2012/001061)1.5.2013).
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
நீலகிரி மாவட்டம்
. https://kutumbapp.page.link/6egc1Zm4UsSdTSRi6
No comments:
Post a Comment