*தடை உத்தரவு என்றால் என்ன*
தடை உத்தரவு வகைகள் என்ன?
யாரெல்லாம் தடை உத்தரவை பெறலாம்?
எந்தெந்த சூழ்நிலையில் தடை உத்தரவு பெறமுடியாது?
*(இன்ஜெக்ஷன் ஆர்டர்-injunction order*)
மக்கள் ஆபத்தான அத்துமீறிய செயல்கள் நடக்கும் போது பயன் படுத்தும் வார்த்தை தான் தடை உத்தரவு இதை இன்ஜெக்ஷன் ஆர்டர்(injunction order) என்றும் உறுத்துக்கட்டளை என்றும் வேறு பெயரில் மக்கள் தெரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். குறிப்பாக உங்களது புரிதலுக்கு வேண்டி தான் இப்படி விரிவான விளக்கத்தை கொடுக்கிறேன்.
அதாவது இன்ஜெக்ஷன் ஆர்டர்-(injunction order) என்ற சட்டத்தை உறுத்துக்கட்டளை என்று தமிழில் சொல்லலாம் ஆனால் நமது பழக்கத்தில் இதை தடை உத்தரவு ஸ்டே ஆர்டர் (stay order) என்றெல்லாம் பல பெயரில் அழைக்கிறோம் ஆனால் உண்மையில் உறுத்துக்கட்டளை என சொல்வதே சட்ட நடைமுறையில் சரியானதாக இருக்கும்.
இன்ஜெக்ஷன் (Injunction Order) என்ற தடை உத்தரவு என்பது எந்த நடைமுறைக்கு பயன் படுத்தப்படுகிறது.
தடை உத்தரவு என்றால் ஒருசில செயல்களை ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு தரப்பினர் செய்யக் கூடாது என்றும், செய்ய வேண்டும் என்றும் அந்த நபர் அல்லது அந்த தரப்பினர்க்கு எதிராக வழங்கப் படுவதாகும்.
*தடை உத்தரவு வகைகள் என்ன*
*What-is-an-injunction-order*
(தடை உத்தரவு என்பதை இதில் உறுத்துக்கட்டளை என்று பொருள் புரிந்துகொள்ளுங்கள்)
1) இடைக்கால (தற்காலிக) உறுத்துக் கட்டளை
(Interim Injunction or Temporary Injunction)
2) செயலுறுத்து கட்டளை
(Mandatory Injunction)
3) நிலைக்கால உறுத்துக்கட்டளை
(Perpetual Injunction)
4) தடை உறுத்துக்கட்டளை
(Prohibitory Injunction)
என்று நான்கு வகைகளாக நடைமுறையில் இருக்கிறது.
*இடைக்கால (தற்காலிக) உறுத்துக்* *கட்டளை என்றால் என்ன?*
மறு உத்தரவு வரும்வரை நீதிமன்றம் இடும் கட்டளைக்கு இடைக்கால உறுத்துக்கட்டளை என்று பெயர்.
*செயலுறுத்து கட்டளை என்றால் என்ன*
ஒரு செயலை ஒருவர் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் இடும் கட்டளைக்கு செயலுறுத்துக் கட்டளை என்று பெயர்.
*நிலைக்கால உறுத்துக்கட்டளை* *என்றால் என்ன*
ஒரு செயலை ஒருவர் செய்யக்கூடாது என நிரந்தரமாக தடை பெறுவதுதாகும். நிரந்தரத் தடை என்பது தீர்ப்பின் மூலம் வழங்கப்பட்ட ஒன்றாகும், அது இறுதியில் தடை வழக்கை நீக்குகிறது.
*தடை உறுத்துக்கட்டளை என்றால்* *என்ன*
ஒரு செயலை ஒருவர் செய்யக்கூடாது என்று நீதிமன்றம் இடும் கட்டளைக்கு தடையுறுத்துக் கட்டளை என்று பெயர்.
*யாரெல்லாம் தடை உத்தரவை* *பெறலாம்?*
தடை உத்தரவை ஒருவர் நீதிமன்றத்தில் பெறுவதற்கு அவர் தொடுத்த அல்லது அவர்மீது வேறு எவராவது தொடுத்த வழக்கு ஒன்று நிலுவையில் இருக்க வேண்டும்.
எந்தெந்த சூழ்நிலையில் தடை உத்தரவு பெறமுடியாது?
வழக்கு தாக்கல் செய்யப்படாமல் இருந்தாலோ அல்லது அந்த வழக்கு முடிவடைந்து விட்டாலோ தடை உத்தரவு என்ற உறுத்துக் கட்டளையை பெறமுடியாது.
தடை உத்தரவை வழங்குவதற்கு நீதிமன்றம் ஒன்றுக்கு அதிகாரம் இல்லாத போது அந்த வழக்கில் தடை உத்தரவு வழங்கக்கூடாது. பாகப்பிரிவினை சம்பந்தமான வழக்கில் தடை உத்தரவு பெற முடியாது.
ஒரு நிர்வாகமானது தன்னுடைய வேலையாளுக்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கைக்கு எதிராக தடை உத்தரவு பெறமுடியாது.
வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் சரியான முறையில் தாக்கல் செய்யாமல் இருக்கும்போது தடை உத்தரவு பெறமுடியாது.
எப்போது எதிர்தரப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டதோ அப்போது முதலே தடை உத்தரவு நடைமுறைக்கு வரும்.
ஒரு வழக்கில் தடை உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அந்த வழக்கு முடிந்தவுடன் தடை உத்தரவும் முடிவுக்கு வந்துவிடும்.
வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அந்த வழக்கில் தடை உத்தரவு பெற்றவர் முன்னிலை ஆக தவறிய காரணத்தால் வழக்கு தள்ளுபடி ஆகியிருந்தால், பெறப்பட்டிருந்த தடை உத்தரவும் தள்ளுபடி ஆகிவிடும்.
அந்த வழக்கு மீண்டும் கோப்பில் எடுக்கப்பட்டால் தடை உத்தரவும் தானாக கோப்பில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது
தடை உத்தரவை மீறுவது தண்டணைக்குரிய குற்றமாகும். எதிர்தரப்பினர் தடை உத்தரவை மீறுவதை தடை உத்தரவை பெற்றவர்தான் நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்.
No comments:
Post a Comment