கர்ப்பிணிகளுக்கான மனநலன் விழிப்புணர்வு நெலாக்கோட்டை

 நெலாக்கோட்டை அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் ஆல் தி சில்ரன் அமைப்பு ஆகியன சார்பில் கர்ப்பிணிகளுக்கான மனநலன் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


நிகழ்ச்சியில் 

மருத்துவர் தபாசியா, ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நெலாக்கோட்டை அரசு சமுதாய சுகாதார நிலைய

மருத்துவ அலுவலர் திருநாவுக்கரசு தலைமை தாங்கி பேசும்போது கர்ப்பிணிகள் நலமுடன் இருக்க முறையான மருத்துவ பரிசோதனைகள், ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் மனநலன் சமநிலையில் இருக்காது. எனவே அதனை சரிசெய்து கொள்ள வேண்டும். கர்ப்பிணிகளுக்கு தற்போது காய்ச்சல் அதிகம் தாக்கும் சூழல் உள்ளதால் லேசான காய்ச்சல் இருந்தாலும் உடனடியாக மருத்துவர்களை அணுகி தகுந்த மாத்திரை எடுத்துக்கொண்டால் தாய் சேய் பாதுகாப்பு பெறலாம் என்றார். 


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது கர்ப்ப காலத்தில் தாய் சேய் நலம் காக்க மனநிலை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டியது அவசியம்.

சோகம், துக்கம், கவலை போன்றவற்றை தவிர்த்து விட்டு எப்போதும் புத்தகம் படித்தல் பாடல் கேட்டல் தோட்டங்களில் சிறு சிறு வேலைகள் செய்தல் போன்றவற்றின் மனதை மாற்றிக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் எளிமையான வேலைகள் செய்வது, உடற்பயிற்சி செய்து கொள்ளுதல் போன்றவை பிரசவ காலத்துக்கு உதவியாக அமையும். உணவுகளை நான்கு வேளையாக பிரித்து உண்ணுதல், காய்கறி, பழங்கள், கீரைகள் ஆகியவற்றை உணவில் எடுத்துக் கொள்ளுதல் உடல் ஆரோக்கியம் தரும் என்றார்.


நிகழ்ச்சியில் கர்ப்பிணிகள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தீயணைப்பு துறை மாவட்ட நுகர்வோர் காலாண்டு கூட்டம்

 உதகை தீயணைப்பு துறை மாவட்ட தீயணைப்பு அலுவலர் அலுவலகத்தில்

துறை ரீதியான நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது.


நீலகிரி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்ற நுகர்வோர் காலாண்டு கூட்டத்திற்கு மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.


கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், நிர்வாகி மகேந்திர பூபதி, கோத்தகிரி புளூமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் முகமது சலீம், நிர்வாகி இஸ்மாயில், 

கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், உதகை தொகுதி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் அமீர்கான் ஆகியோர் கலந்துகொண்டு பேசும்போது 

பந்தலூர், குந்தா வட்டங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். கூடலூர் பகுதியில் விபத்து நேரங்களில் தீயணைப்பு வாகனங்கள் தண்ணீர் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது - இனிவரும் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள், வணிக நிறுவனங்களில் தீயணைப்பு முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். கோத்தகிரியில் தற்போது உள்ள தீயணைப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் மற்றும் மாணவர்கள் இடையே தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தவேண்டும் என்றனர்.


பதில் அளித்த மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வெங்கடேஷ் பேசும்போது பந்தலூர், குந்தா, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் தீயணைப்பு துறைக்கான இடவசதி கிடைத்தால் அல்லது அரசு நிலம் ஒதுக்கி தந்தால் புதிய கட்டிடம் கட்டிட நடவடிக்கை எடுக்கப்படும். மலைப்பகுதியில் தீயணைப்பு, பேரிடர் மீட்பு குறித்த பயிற்சி அளிப்பதற்கான பயிற்சி மையம் அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே அரசு சார்பில் சுமார் 10 முதல் 15 ஏக்கர் நிலம் ஒதுக்கி தந்தால் பேரிடர் மீட்பு பயிற்சி மையம் அமைக்படும். இதன்மூலம் மாநிலத்தில் இருந்து பலரும் மலைப்பகுதியில் பேரிடர் மீட்பு குறித்து பயிற்சி பெற ஏதுவாக அமையும். நுகர்வோர் அமைப்புகள் நிலம் கிடைக்க முயற்சி செய்து தர வேண்டும். மேலும் தீயணைப்பு நிலையத்தில் ஒரு லாரியில்

தண்ணீர் இருப்பு வைக்கப்படுகிறது. எனினும் அவசர நேரத்தில் உள்ளாட்சி மன்றங்கள் தண்ணீர் தந்து உதவினால் பயனளிக்கும் இனிவரும் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் ஏற்பாடு செய்து கொள்வோம். பேரிடர் மீட்பு குறித்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து கொடுத்தால் துறை சார்பில் பங்கேற்று பயிற்சி அளிப்போம் என்றார்.


நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை அலுவலர்கள் நுகர்வோர் பிரதிநிதிகள் பங்கேற்றனர்

மூட்டு – முதுகு – கழுத்து வலிக்கு இயற்கை வைத்தியம் மற்றும் பாட்டி வைத்தியம் ==

 மூட்டு – முதுகு – கழுத்து வலிக்கு இயற்கை வைத்தியம் மற்றும் பாட்டி வைத்தியம்

==


✅ 1. வெந்நீர் ஒத்தடம் (சூடான சுருக்கம்)


பாதிக்கப்பட்ட பகுதியில் 5-10 நிமிடம் வெந்நீர் பேக் வைத்து விடுங்கள்.


இரத்த ஓட்டம் சீராகி வலி குறையும்.


==

✅ 2. மஞ்சள் பால் (மஞ்சள் பால்)


ஒரு கிண்ணம் சூடான பாலில்

½ டீஸ்பூன் மஞ்சள் + ஒரு சிட்டிகை மிளகு


தினமும் இரவு குடித்தால் அழற்சி (Inflammation) குறையும்.

==


✅ 3. இஞ்சி – பூண்டு மசாலா


2 பூண்டு பற்கள்


ஒரு சின்ன துண்டு இஞ்சி


இரண்டையும் நசுக்கி, 1 டீஸ்பூன் நெய் சேர்த்து காலை சாப்பிடலாம்.


➡️ மூட்டு வலிக்கு சிறந்த பாதி வைத்தியம்.


==

✅ 4. எள்ளெண்ணெய் மசாஜ்


எள்ளெண்ணெயை லேசாக சூடாக்கி வலி இருக்கும் இடத்தில்

10 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்யுங்கள்.


எலும்பு – மூட்டு வலிக்கு இடைவெளி இல்லாமல் செய்கிறீர்கள் என்றால் நல்ல பலன்.

==

✅ 5. நெல்லிக்காய் + தேன்


1 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி + 1 டீஸ்பூன் தேன்


காலையிலும் இரவிலும் சாப்பிட்டால் அழற்சி குறையும்.

==


✅ 6. யோகா & ஸ்ட்ரெசிங் (மென்மையான நீட்சி


மஜ்ரி ஆசனம் (பூனை-மாடு)


புஜங்காசனம் (கோப்ரா போஸ்)


சைல்ட் போஸ் (குழந்தை போஸ்)

➡️ இதை 3-5 நிமிடம் தினமும் செய்தால் முதுகு & கழுத்து வலி குறையும்

==

✅ 7. வெந்தயம் நீர்


இரவு ஒரு டீஸ்பூன் மெந்தயத்தை ஊறவைத்து

காலை காலையில் தண்ணீரை குடிக்கவும்.

➡️ உடல் சூடு குறைத்து மூட்டு உயவு மேம்படும்.

==

✅ 8. சீரகம் – ஓமம் குடிநீர்


½ லிட்டர் தண்ணீரில்

1 டீஸ்பூன் சீரகம் + 1 டீஸ்பூன் ஓமம் கொதிக்க வைத்து

தினமும் 2 முறை குடிக்கலாம்.

➡️ உடல் வாயு, பட்டை வலி, முதுகு வலி குறையும்.

==

🔥 மிகச் சிறப்பான பாட்டி வைத்தியம் (சிறந்த வைத்தியம்)


★ எலுமிச்சை + இஞ்சி மூட்டு லே


எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்


இஞ்சி சாறு 1 ஸ்பூன்


தேன் 1 ஸ்பூன்

➡️ தினமும் 1 முறை — மூட்டு விறைப்பு குறையும்.


★ வேப்பெண்ணை தடவி வெந்நீர் செக்யூ


வேப்பெண்ணை காய்ச்சி தடவி


அதன் மேல் வெந்நீர்த் தொட்டி 5 நிமிடம் வைத்தால்

➡️ மூட்டு வீக்கம் குறையும்.

==

❌❌❌

 செய்ய வேண்டியவற்றை தவிர்க்கவும்


குளிர்ந்த தண்ணீர் அதிகம்


ஜங்க்–ஃபுட்


நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது


கனமான எடையை தூக்குதல்


அதிக சர்க்கரை உணவு

💐💐🙏🙏💐💐💐

வாரிசு இல்லாமல் இறந்தவரின் சொத்து யாருக்கு? – சட்டம் சொல்வது என்ன

 வாரிசு இல்லாமல் இறந்தவரின் சொத்து யாருக்கு? – சட்டம் சொல்வது என்ன

 இதை 95% பேருக்கும் தெரியாது!

 இது 'Intestate Death' – வாரிசு பெயர் குறிப்பிடாமல் இறப்பது.

இந்த நிலையில் Hindu Succession Act / Indian Succession Act தானாகவே அமலில் வரும்.

 வகுப்பு-I சட்ட வாரிசுகள் (முதல் சுற்று வாரிசுகள்)

 தாயார்

 தந்தை

மனைவி / கணவர்

 மகன், மகள்

 மரணமடைந்த மகன்/மகளின் பிள்ளைகள்

 இவர்களில் யாராவது ஒருவரே இருந்தாலும் சொத்து முழுவதும் இவர்களுக்கே!

 Class-I இல்லையென்றால் → Class-II சட்ட வாரிசுகள்

வரிசை:

1. சகோதரர் / சகோதரி

2. அண்ணன், அக்கா, தங்கை, தம்பி

3. அவர்கள் பிள்ளைகள் (Mephews/Nieces)

4. தாத்தா, பாட்டி

5. மாமா, மாமி, சித்தப்பா, சித்தி

இந்த வரிசையில் இருப்பவர்களுக்கே சட்டப்படி சொத்து போகும்.

 அரசு ஊழியரின் பென்ஷன் யாருக்கு:

1. முதலில் – மனைவி / கணவர்

2. அடுத்து – மகன், மகள்

3. பின்னர் – தாய், தந்தை

4. இறுதியாக – சகோதரர், சகோதரி

 பென்ஷன் பொதுவாக Class-I வாரிசுகளுக்கே வழங்கப்படும்.

 வங்கி பணம் யாருக்கு

பரிந்துரைக்கப்பட்டவர் → அவர் முதலில் வாங்குவார்

ஆனால் 👉 உண்மையான உரிமை சட்ட வாரிசுகளுக்கு தான் (உச்ச நீதிமன்ற தீர்ப்பு)

 Nominee இல்லையென்றால் → Class-I → Class-II வரிசையில் செல்கிறது.

 நிலம் / வீட்டு சொத்து யாருக்கு

 Class-I இருந்தால் 100% அவர்களுக்கே

Class-I இல்லையெனில் Class-II

 யாரும் இல்லையெனில் → சொத்து அரசுக்கு Escheat செயல்முறை மூலம் சென்று விடும்

 5 வரிகளில் முழு சுருக்கம்:

 வாரிசு பெயர் இல்லாமல் இறந்தால் சட்ட வாரிசுத் தரவரிசை தானாக செயல்படும்.

வகுப்பு-I – மனைவி/கணவர், பிள்ளைகள், தந்தை, தாய்.

இவர்கள் இல்லையென்றால் Class-II – சகோதரர்கள், அண்ணன், தங்கை போன்றோர்.

 பென்ஷன் பிரதான மனைவி/கணவருக்கே.

வங்கி நாமினி → பெறுநர் மட்டும்; உரிமையாளர் அல்ல. உரிமை வாரிசுகள் க்கு

உயரதிகாரிகளை பழிவாங்க சகஅதிகாரிகளே குற்றங்கள் புனைவது கேவலமாக உள்ளது:

 உயரதிகாரிகளை பழிவாங்க சகஅதிகாரிகளே குற்றங்கள் புனைவது கேவலமாக உள்ளது: ஐகோர்ட் நீதிபதி ஸ்ரீமதி காட்டம்

திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துணை இயக்குனர் சரவணபாபுவை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்க அவரது அலுவலகத்தில் ரூ.2.50 லட்சம் பணம் மறைத்து வைத்து, பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் மூலம் சிக்க வைக்க முயன்ற வழக்கு சி.சி.டி.வி., காட்சிகள் மூலம் அம்பலமானது.

இது குறித்து துணை இயக்குனர் சரவணபாபு புகாரின் பேரில் பணம் வைத்த விஜய், உதவி முத்து சுடலை தீயணைப்பு வீரர்கள் ஆனந்த், முருகேஷ், மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய நபராக தேடப்படும்போது திருப்பூர் தீயணைப்பு அலுவலர் வீரராஜ் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். முன் ஜாமின் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நேற்று வழக்கு விசாரணை நடந்தது.

பாதிக்கப்பட்ட துணை இயக்குனர் சரவணபாபு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், உயர் அதிகாரியை சிக்க வைக்கும் குற்றநாடகத்தில் முக்கிய குற்றவாளியாக தீயணைப்பு அலுவலர் வீரராஜ் உள்ளார். அவர்தான் மற்ற தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோரை இணைத்து நெட்வொர்க்கை ஏற்படுத்தினார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தால் தான் முழுப்பின்னணியும் தெரியவரும். இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு என்பது தெரியும் என்றார்.

தீயணைப்பு அலுவலர் வீரராஜ் தரப்பில் வழக்கறிஞர் பழனிவேல் ராஜன் ஆஜரானார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மனோஜ் குமார் ஆஜரானார்.

இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி ஸ்ரீமதி, ''அரசு அதிகாரிகளை பதவி உயர்வு பெற விடாமல் தடுக்கும் நோக்கில் சக அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஏற்புடையதல்ல". கேவலமாக உள்ளது.

இவர்தான் இந்தத் திட்டத்தின் முக்கிய நபராக கருதப்படுவதால் அவரை போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டும். இதன் முழு பின்னணியும் தெரிய வேண்டும். எனவே முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன். ஜன. 2 ல் அவரை ஜாமின் கேட்டு மனு செய்யுங்கள் என்றார்

நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு கேபிள் டிவி துறை சார்பில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது.

 நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு கேபிள் டிவி துறை சார்பில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது.

உதகை கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு கேபிள் டிவி தனிவட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு கேபிள் டிவி தனிவட்டாட்சியர் ஆனந்தி தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட மேலாளர் நடராஜ் முன்னிலை வகித்தார்.


அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகளான கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் பொதுச்செயலாளர் சிவசுப்பிரமணியம், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன், புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் வாசுதேவன், உதகை நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் அமீர்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசும்போது

அரசு கேபிள் டிவி தரமான முறையில் சேவை வழங்க வேண்டும். நிர்ணயித்த கட்டணம் வசூலிப்பதை உறுதிபடுத்த வேண்டும். சேரம்பாடி எருமாடு உள்ளிட்ட பகுதிகளில் கேரளா மாநில இணைப்புகளை தமிழக அரசின் கேபிள் டிவி இணைப்புகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இ சேவை மையங்களில் கூடுதல் பணியாளர் நியமனம் செய்ய வேண்டும். ஆதார் சேவை மையங்களில் கட்டண பட்டியல் ஓட்ட வேண்டும். ஆதார் சேவை மையங்கள் முறையாக இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும். இ சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மையங்களில் பொதுமக்கள் அலைக்கழிக்க படாமல் முறையான சேவை வழங்க வேண்டும்.


பதில் அளித்த கேபிள் டிவி தனி வட்டாட்சியர் ஆனந்தி பேசும்போது 

அரசு கேபிள் டிவி இணைப்பு மூலம் தற்போது செய்தி, விளையாட்டு, திரைப்படம் பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து வகையைச் சேர்ந்த 268 சேனல்கள் ஒளிபரப்பப்படுகின்றன படுகிறது. தற்போது கட்டணமாக ஜிஎஸ்டி உட்பட 160 ரூபாய் பெறப்படுகிறது. இணைய வழியில் நேரடியாக கூட கட்டணம் செலுத்தும் வசதியும் உள்ளது. கட்டண காலம் முடிந்தவுடன் ஒளிபரப்பு தானாக நிறுத்தப்படும். புதிய இணைப்பு பெற SD இலவசமாகவும் HD இணைப்பு 500 முன்பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். கேரளா மாநில எல்லை பகுதிகளில் மலையாள பேக்கேஜ் அதிகம் கேட்பதால், இணைய வசதியுடன் கேபிள் சேவை வழங்குவது குறித்து ஏர்டெல் நிறுவனம் மற்றும் பி எஸ் என் எல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மாநில அரசு ஒப்பந்தம் மேற்கொண்டபின் தமிழக அரசு கேபிள் டிவி இணைப்புகள் வழங்கப்படும். இசேவை மையங்களில் ஒரு நபர் பணிக்கு ஏற்ப இருந்தால் கூடுதல் பணியாளர் நியமனம் செய்ய இயலாது. ஆதார் சேவை மையமும் தினசரி சராசரியாக 20 பதிவுகள் வருவதால் கூடுதல் மையங்கள் திறக்க இயலாது. மாநில அரசு மூலமே தனியார் இ சேவை மையங்கள் பதிவு பெற்று செயல்படுகின்றன. ஆதார் சேவைகள் தனியார் மையங்களில் முகவரி மாற்றம் மட்டுமே மேற்கொள்ள முடியும். இதர சேவைகளுக்கு அரசு கேபிள் டிவி நிறுவனம், எல்காட் மற்றும் அஞ்சலகம் ஆகிய சேவை மையங்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும். சேவை மையங்களின் பணிகள் குறித்து தொடர் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். கட்டண பட்டியல்கள் ஒட்டி வைக்கப்படும் என்றார்

தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கு

 தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கு



கூடலூர்: கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சியில் தேசிய நுகர்வோர் தின சிறப்பு நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. 
 
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆல் தி சில்ரன் அமைப்பு மற்றும் மைய குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் நடைபெற்றது நிகழ்வு விழிப்புணர்வு கருத்தரங்கில் பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜோர்ஜ் தலைமை தாங்கினார். ஆல் தி சில்ரன் அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் முன்னிலை வகித்தார் 

உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகுமார் பேசும்போது 
நாம் உணவில் உப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்டவை 5 முதல் 20 கிராம் வரையே நாளொன்றுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற நிலையில், குளிர்பானத்தில் 3000 பிபிஎம் அளவு சர்க்கரையும், சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளில் 1000 பிபிஎம் அளவுக்கு மேல் உப்பும் உள்ளது. இவை 10 மடங்கு அதிகம். அதுபோல்
நொறுக்குத்தீனி வகைகளில் சேர்க்கப்படும் எண்ணெய், உப்பு போன்றவை மீண்டும் தின்பதற்கு துண்டுதலை உருவாக்குகின்றன. இவை உடலில் பல்வேறு நோய்கள் அடித்தளமாக அமைகிறது.
உணவு பாதுகாப்பு சட்டப்படி 100 பிபிஎம் வரை சுவைக்கு அஜினமோட்டோ சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஆனால் உணவுகளில் இவை அதிகமாக உள்ளது சேர்க்கப்படுகிறது. உணவுப் பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ள மூலப்பொருட்களில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஒவ்வாமை உள்ளிட்ட தகவல்களைப் பார்த்து உணவுப் பொருட்கள் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும் என்றார்.

கூடலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் பேசும்போது
அனைவரும் நுகர்வோர் என்ற நிலையில் தரமான பொருட்களை நமது விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். ஆனால் நாம் என்ன பயன்படுத்த வேண்டும் என்பதை கார்ப்பரேட் விளம்பரம் தீர்மானிக்கிறது. 
இவர்களோடு போட்டி போட முடியாமல் தரமான பொருட்கள் மக்களிடம் சென்று சேர்க்க முடியாமல் முடங்கியுள்ளனர்.
மையோனாஸ், சபர்மா உள்ளிட்ட உணவுகள் ருசி கவர்ச்சியால் ஈர்ப்பது வியாபார தந்திரம். ஆனால் அவை நம்நாட்டு உணவுகள் அல்ல இவற்றால் ஆரோக்கியம் கேள்விக்குறியாக உள்ளது. இவற்றை தவிர்க்க வேண்டும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு கட்டுப்பாடுகளும் அவசியம் என்றார். 

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது நுகர்வோர் குறைகளை களைவதற்கு இணைய வழியில் புகார் அளிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஈ-தாக்கல் முறையில் நுகர்வு குறைதீர் ஆணையங்களில் புகார் அளிக்கலாம். மொபைல் ஆப்கள் மூலம் தர குறியீடுகளை அறிந்து கொண்டு தரமற்ற பொருட்களுக்கும், உணவு பொருட்கள் சார்ந்த குறைபாடுகளுக்கும் வாட்ஸ்அப் மற்றும் இணையம் வழியில் புகார்களை தெரிவிக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் நுகர்வோர் குறைகள் விரைவாக களைய முடிகிறது என்றார்.

நிகழ்ச்சியில் பயிற்சி மைய பயிற்றுநர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஓவேலி அரசு மேல்நிலை பள்ளியில் மின்சார சிக்கனம் விழிப்புணர்வு

 

கூடலூர் அருகே ஓவேலி அரசு மேல்நிலை பள்ளியில் மின்சார சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது 

தமிழ்நாடு மின்சார வாரியம் கூடலூர் கோட்டம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், பள்ளி ஆற்றல் மன்றம் ஆகியன சார்பில் தேசிய மின்சிக்கன வாரவிழாவை முன்னிட்டு மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) கவிதா தலைமை தாங்கினார். 

உதவி மின் பொறியாளர்கள் தமிழரசன்(கூடலூர்),  ஹரிபிரசாத்(தேவர்சோலை), ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித்,  பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் மகேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூடலூர் மின் கோட்ட செயற்பொறியாளர் முத்துகுமார் பேசும்போது மின்சார உற்பத்தி மேற்கொள்ள பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், மின்சார தேவைக்கு நிகரான உற்பத்தி மேற்கொள்ள மூல பொருட்களான யுரேனியம், நிலக்கரி, தண்ணீர் போன்றவை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் புவி வெப்பமயமாகிறது. எனவே மின்சாரம் சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள ஒவ்வொருவரும் உறுதி ஏற்று கொள்ளவேண்டும்.  தற்போது சூரியஒளி சோலார் மூலம் மின்உற்பத்தி மேற்கொள்ள அரசு மானியம் வழங்கி வருகிறது. மின்சார வாரியத்துடன் இணைந்து வீடுகளுக்கு சோலார் பேனல் அமைத்து மின்சார தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். என்றார்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது 
மின்சார சேமிப்பில் ஒவ்வொருவரும் ஒரு யூனிட் சேமிக்கும் போது மின்சார உற்பத்தி செலவினம் குறையும். ஆடம்பர மின்விளக்குகள் பயன்படுத்துதல், ஆளில்லா நேரத்திலும் மின்சாதன பொருட்களை இயக்க வைத்தல் போன்றவற்றை தவிர்க்கலாம். மேலும் பிஇஇ குறியீடு மற்றும் ஐஎஸ் ஐ தரமுத்திரை பெற்ற வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும். இயற்கையாக காற்றோட்டம், வெளிச்சம் வரும் வகையில் கட்டிட அமைப்புகள் மேற்கொள்வதன் மூலமும் மின்சார செலவினத்தை குறைக்க முடியும். என்றார். 

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கர்ப்பிணிகளுக்கான மனநலன் விழிப்புணர்வு நெலாக்கோட்டை

 நெலாக்கோட்டை அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் ஆல் தி சில்ரன் அமைப்பு ஆகியன ச...