தனது இறப்புக்கு அரசு விடுமுறை விட்டு விடக் கூடாது அப்துல் கலாம்


சென்னை: 2020ல் இந்தியா வல்லரசாகும் என்று 15 ஆண்டுகளுக்கு முன்பே கனவு கண்ட முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், தனது இறப்புக்கு அரசு விடுமுறை விட்டு விடக் கூடாது என்று தான் வாழ்ந்த போதே வலியுறுத்தியுள்ளார். தன்னுடைய மரணத்தினால் எந்த இழப்பும் ஏற்படக்கூடாது கூடுதலாக வேலை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். குடியரசு முன்னாள் தலைவர் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (84) மாரடைப்பால் திங்கள் கிழமை இரவு உயிரிழந்தார். இந்த இழப்பை தாங்க முடியாமல் தேசமே கண்ணீரில் மிதக்கிறது. மத்திய அரசு 7 நாள் துக்கம் அறிவித்துள்ளது. குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மக்கள் ஜனாதிபதி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் அப்துல்கலாம். நாடு முழுக்கவுள்ள பள்ளி, கல்லுரி மாணவ - மாணவிகளை சந்திப்பது மட்டும்தான் அவரது ஒரே நோக்கம். அதன் மூலம் வலுவான இளைய தலைமுறை நாட்டை வல்லசாக்கவுள்ள இளைய தலைமுறையினரை உருவாக்க வேண்டும் என்பது அவரது கனவு. நாட்டுக்கு நல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாவார்கள். பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும்விதத்தில் இருந்துதான் நல்ல சமுதாயம் நாட்டுக்கு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். விடுமுறை விட வேண்டாம் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதுதான் அவரது இலக்காக இருந்தது. தான் இறந்தால் கூட, அந்த வகையில் நாட்டுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு விடக் கூடாது. அதனால் நாட்டில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கூட அவர் குறியாக இருந்தார். பள்ளிகளில் இரங்கல் அப்துல் கலாமின் மறைவுக்கு புதுச்சேரி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட வில்லை. சென்னையில் பிரபல பள்ளிகளில் அப்துல் கலாம் மறைவிற்கு பிரார்தனை கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெறுகின்றன.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...