வழக்கு தொடர்வதற்கேற்ப நுகர் வோருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்

நுகர்வோரை ஏமாற்றும் வகையில் செயல்படும் நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்வதற்கேற்ப நுகர் வோருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தினார். இ-காமர்ஸ் எனப்படும் மின்னணு வர்த்தகம் அதிகரித்து வரும் சூழலில் நுகர் வோர் அமைப்புகள் மேலும் வலிமையான அமைப்பாக உரு வாக வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற நுகர்வோர் அமைப்புகளின் செயல் பாடுகள் குறித்த மாநாட்டில் அவர் பேசியது:
இப்போது நாளுக்கு நாள் மின்னணு முறையிலான இ-காமர்ஸ் வர்த்தகம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் வர்த்தகத்தின் போக்கே மாறி வருகிறது. இத்தகைய சூழலில் நுகர்வோர் அமைப்புகள் மிகவும் வலிமையானதாக மாற வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இ-காமர்ஸ் சந்தையில் வர்த்த கமாகும் பொருள்கள், வழக்கமான சந்தை நிலவரத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டது. வழக்கமான சட்ட விதிகளை இந்த சந்தை நீர்த்துப் போக வைத்துள்ளது. இத்தகைய சூழலில் நுகர்வோரின் நலனைக் காக்க சட்ட விதிகள், சட்ட குறுக் கீடுகள் அவசியமாகிறது அதற் கான நடவடிக்கைகள் இப்போது எடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.
நுகர்வோர் நலனைக் காக்க 1986-ம் ஆண்டு நுகர்வோர் பாது காப்பு சட்டம் கொண்டு வரப் பட்டது. இந்த சட்டமானது இ-காமர்ஸ் மூலம் பொருள் வாங் கும் நுகர்வோரின் நலனையும் காப்பதாக இருக்க வேண்டும்.
இணையதள வர்த்தகத்தில் பொருள் விற்பவருக்கும் வாங்கு பவருக்கும் நேரடியான தொடர்பு இருப்பதில்லை. இத்தகைய வர்த்தகத்தில் அடிப்படையில் பொருளை வாங்குபவரே அதன் தன்மை குறித்த விழிப் புணர்வு பெற்றிருக்க வேண்டும் என்பதாகும். அதாவது பொருளின் தன்மை, விற்பனைக்கு பிந்தைய சேவை ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் மக் களிடையே நுகர்வு கலாசாரம் அதிகரித்து செலவு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது. அதாவது நுகர்வோரே பாதிக்கப் படும்போது வழக்கு தொடரும் அளவுக்கு பாதுகாப்பு சட்ட விதிகள் மாற்றப்பட வேண்டியுள்ளது.
நுகர்வோர் வழக்கு தொடர் வதற்கான விதிமுறைகள் ஏற்கெனவே உள்ளன. ஆனால் அது இதுவரை பயன் படுத்தப்படவில்லை. இந்த விதி முறையின்படி ஒரு குழுவாக சேர்ந்து ஒரு குறிப்பிட்ட பொருள் மீது வழக்கு தொடர முடியும். அதாவது அந்த பொருள் பழுதானதாக இருந்தாலோ அல்லது மக்களை ஏமாற்றுவதாக இருந்தாலோ இத்தகைய விதி மூலம் வழக்கு தொடர முடியும்.
சர்வதேச அளவில் குழுவாக வழக்கு தொடரும் பழக்கம் நடை முறையில் உள்ளது. இந்த வகையில் நுகர்வோர் அமைப் புகள் வழக்கு தொடரலாம் என்று ஜேட்லி குறிப்பிட்டார்.
ஏற்கெனவே உள்ள நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் போதிய பாது காப்பை நுகர்வோருக்கு அளிக்கக் கூடியதாக உள்ளது. இருப்பினும் இப்போதைய சூழலில் இதில் மாற்றம் செய்ய வேண்டியதாக நுகர்வோர் அமைப்புகள் கருதி னால் அதை பரிந்துரைத்து இந்த சட்ட விதிகளை அடுத்த கட் டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நுகர்வோர் அமைப்புகளுக்கு உள்ளது என்றார் ஜேட்லி.
நுகர்வோர் சட்டத்தில் திருத்தங் கள் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து பரிந்து ரைகள் வந்துள்ளன.
இந்த சட்டம் நுகர்வோர் நலனை பாதுகாப்பதாகஉள்ளது. இப்போதைய சூழலில் நுகர்வோர் அமைப்புகளே சர்ச்சைகளை தீர்க்கும் அமைப்புகளை உரு வாக்கி நுகர்வோர் குறைகளைப் போக்க முடியும் என்று ஜேட்லி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...