கூடலூர் அரசு மேல் நிலை பள்ளியில்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், கூடலூர் அரசு மருத்துவமனை,
பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் 108 ஆம்புலன்ஸ்
ஆகியன சார்பில்
இரத்ததானம் மற்றும் 108 சேவைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம், கூடலூர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மகேஸ்வரன், ஆசிரியர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கூடலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் புகழேந்தி பேசும்போது
இரத்ததானம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றது. ஆனால் அதில் உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். சைவ உணவுகள், அசைவ உணவுகள், உடல் எடை பருமன், போன்றவைகளில் எப்படி இருந்தாலும் இரத்தம் ஒரே மாதிரியாகதான் இருக்கும்.
இரத்தம் மாற்று பொருள் அல்லது இரத்த உற்பத்திக்கு மாற்று வழிகள் ஏதும் கண்டறியபடவில்லை.
எனவே இரத்த தானம் மூலமே தேவைக்கான இரத்ததினை நிறைவு செய்ய முடியும்.
இரத்தம் தர தேவையான உடல் தகுதியை மாணவர்கள் தங்கள் ஊட்ட சத்தான உணவு பழக்கங்கள் மூலம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மயில்சாமி பேசும்போது.
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரத்த தானம் செய்ய முடியும். உடல் எடையளவு 45 கிலோவாகவும் எச்பி அளவு 12 சதவீதம் உள்ளவர்களும் இரத்தம் கொடுக்கலாம். இரத்த எடுக்கும்போது 300 மில்லி எடுக்கப்படும்.
இந்த இரத்தம் முறையாக பரிசோதித்த பின்னர் தேவையான நபர்களுக்கு வழங்கப்படும்.
இரத்தம் தானம் செய்பவர்களுக்கு பணம் வழங்கப்படாது. இரத்த தொற்று நோய்கள் உள்ளவர்களிடம் இரத்தம் எடுக்க மாட்டோம்.
கூடலூர் அரசு மருத்துவமனையில் தற்போது மாதம் 30 பேர் வரை இரத்தம் பெற்று பயன்அடைகின்றனர்.
சில நேரங்களில் இரத்த தேவைக்கு தன்னார்வலர்கள் இரத்த கொடையாளர்கள் தேவை இருக்கின்றது.
மாணவர்கள் வரும் காலங்களில் இரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்றார்.
108 வாகன சேவை குறித்து 108 மேற்பார்வையாளர் கற்பக வினாயகம் பேசும்போது
108 சேவை என்பது ஒரு உயிரை இலவசமாக எட்டு திசைகளிலும் உள்ள உயிர்களை காப்பாறுவதே முக்கிய நோக்கமாகும். மற்ற ஆம்புலன்ஸ் முதலுதவி வசதிகள் இருக்காது. http://cchepnlg.blogspot.com/2018/06/108-28062018.html?m=1
ஆனால் ஒவ்வொரு பாதிப்புக்கும் ஏற்றவாறு 108 ஆம்புலன்சில் முதலுதவி அளிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சேவையை முறையாக பயன்படுத்த வேண்டும். தவறாக பயன்படுத்துவதால் சேவை பாதிக்கபடும். தவறாக பயன்படுத்துவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் நுகர்வோர் மைய தலைவர் காளிமுத்து, தேவாலா பள்ளி ஆசிரியர் கிருஷ்ண குமார், அரசு மருத்துவமனை இரத்த பரிசோதகர் வசந்த், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
..