தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை

தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை

 *அறிவிப்பு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி கூறலாமே*

இது நடைமுறைக்கு வர நாமும் ஒத்துழைக்க வேண்டும்

அன்புடன்
 *கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்*
நீலகிரி.

கூடுதல் தகவல்

ஜூன் 05,2018 11:48

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டிற்கும், உற்பத்திக்கும், தடை விதிக்கப்படுவதாக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இது வரும் 2019 ஜனவரி 1ம் தேதி முதல் முழு அளவில் அமலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டசபையில், 110வது விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிக்கை:

மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் பிளாஸ்டிக் உள்ளது.

பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் கப்புகள், பாட்டீல்கள், கைப்பைகள் உள்ளிட்டவை தடை செய்யப்படுகின்றன.

பால், தயிர், எண்ணெய், மருந்துப் பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம்.

பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது. சேமித்து வைக்கவும் கூடாது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இந்த தடைக்கு பொது மக்கள், வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

வருங்கால சந்ததியினருக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத சூழலை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...