குற்ற செயல் தடுப்பு விழிப்புணர்வு

பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளியில் 

 பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், 

தேவாலா காவல் துறை, 

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் 
ஆகியன சார்பில் 

மாணவர்களுக்கான குற்றசெயல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.  

நிகழ்ச்சிக்கு பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியரும், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளருமான தண்டபாணி தலைமை தாங்கினார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம்,  பள்ளி ஆசிரியர் சித்தானந்த், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேவாலா அனைத்து மகளீர் காவல் ஆய்வாளர்  உஷா பேசும்போது 

தற்போது மாணவர்களிடையே புதிதாக சேர்ந்த மாணவர்களை ரேகிங் செய்வது, அவர்களை சிரம்மபடுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது.  

மீறி ஈடுபடுவோர் மீது ரேகிங் தடுப்பு சட்டம், ஈவ்டீசிங் சட்டம் உள்ளிட்டவற்றில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 

காவல்துறை நட்பாக இருந்தாலும் தவறுகளை திருத்த கடுமையாக நடக்கும் நிலையும் வரலாம்.  

பள்ளி பருவத்தில் வரும் காதல் எண்ணங்கள் தவறான பாதைக்கு அழைத்து செல்லும்.  

இளவயது ஆண் பெண் தவறு செய்தால் அவர்களது எதிர்காலம் பெரிய அளவில் பாதிக்கப்படும்.  மாணவர்கள் என்ற சலுகை தற்போது கிடையாது.  

பள்ளி வளாகத்திலும், மற்ற பகுதிகளிலும்  மாணவர்கள் சுய கட்டுபாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.  

நகர் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றது.  

தவறு செய்பவர்களை எளிதில் கண்டுபிடித்து தண்டிக்கபடுவார்கள். 

மாணவர்கள் செய்யும் தவறுகள் பெற்றவர்கள் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்.  

போக்சோ சட்டத்தின் படி சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டால் தற்போது மரண தண்டனை வரை விதிக்க திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.  எனவே வரம்பு மீறி தவறு செய்ய கூடாது, 

மாணவர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாகாமல் படித்து முன்னேற வேண்டும், தினசரி செய்திதாள்கள் படித்து நாட்டு நடப்புகளை அறிந்து கொள்வதும் அவசியம்  என்றார்.

தேவாலா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சௌந்தர்ராஜன், மகளீர் காவல் உதவி ஆய்வாளர் பானுமதி ஆகியோரும்  

பகடிவதை எனும் ரேகிங், மற்றும் மாணவர்களிடையேயான குற்ற செயல்கள் தவிர்ப்பது குறித்து பேசினார்கள்.

 நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.   

முன்னதாக.  ஆசிரியர் வரவேற்றார்.  முடிவில்  ஆசிரியர் ஸ்டீபன்சன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...