உணவு தரத்தை ஆய்வு செய்ய கையடக்க கணிணி

மக்களுக்கு விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்யவும், அதிகாரிகளின் பணியைக் கண்காணித்து மேம்படுத்தவும் நாட்டிலேயே மத்திய பிரதேசத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 4ஜி தொழில்நுட்பத்துடன்கூடிய ‘கையடக்க கணினிகள்’ பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உணவே மருந்து, மருந்தே உணவு என்பார்கள். மக்களிடம் உணவு விஷயத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லலாம். அதனால் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தவும், அதுபற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உணவுப் பாதுகாப்புத் துறை தொடங்கப்பட்டது.

மக்களிடம் விழிப்புணர்வு

சாலையோர உணவகம் முதல் ஸ்டார் ஓட்டல் வரை சோதனை நடத்தி, தரமற்ற உணவுப் பொருட்கள் விற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உணவுப் பொருட்களின் தரம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சிறு வியாபாரிகள், வணிகர்களை உரிமம் எடுக்கச் செய்வது, தகுதியானவர்களுக்கு உரிமம் வழங்குதல், அவர்களது விற்பனையைக் கண்காணித்தல், தரமற்ற உணவுப் பொருட்கள் விற்போர் மீது நடவடிக்கை எடுப்பது ஆகிய பணிகளை உணவுப் பாதுகாப்புத் துறை செய்து வருகிறது.

உணவுப் பொருட்கள் உற்பத்தி, வாகனத்தில் எடுத்துச் செல்லுதல், கிடங்கில் இருப்பு வைப்பது, ரீபேக் செய்வது, விநியோகிப்பது, சில்லறை விற்பனை என உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை பல கட்டங்களாக உணவுப் பொருட்கள் ஆய்வு செய்யப் படுகின்றன.

உணவுப் பாதுகாப்புத் துறையில் உணவுப் பொருட்களில் கலந்துள்ள ரசாயனத்தால் எந்த மாதிரியான பாதிப்பு அல் லது நோய் வரும் என்று கண்டறிவதற்காக மாவட்ட அளவில் டாக்டர்களே உணவுப் பாதுகாப்பு உயர் அதிகாரிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர். 

இவர்களைத் தவிர, 584 உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்தான் பணியாற்றுகின்றனர்.

உணவுப் பொருட்கள், ஓட்டல் பண்டங்கள், உணவுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய், ஜவ்வரிசி, உப்பு உள்ளிட்ட பொருட்களில் ஏதேனும் தரமற்றவையாக இருந்தால் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் கொடுக்கலாம்.

எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இந்த எண்ணில் குரல் மூலமாகவும் புகாரைப் பதிவு செய்யலாம். கடைகள், ஓட்டல்கள் மட்டுமல்லாமல் சத்துணவுக் கூடம், அம்மா உணவகம், கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்களில் வழங்கப்படும் அன்னதானமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் பெ.அமுதா கூறியதாவது:

உணவுப் பாதுகாப்புத் துறைக்கு குடிநீர், ஓட்டல்களில் விற்கப்படும் உணவுப் பதார்த்தங்கள், எண்ணெய் வகைகள், உப்பு, ஜவ்வரிசி போன்றவை தொடர் பாக அதிக புகார்கள் வருகின்றன. உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கமான சோதனையுடன், வாட்ஸ்-அப் மூலம் வரும் புகார்கள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.

உணவுப் பொருட்களின் தரம்

மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்யவும், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் பணியைக் கண்காணித்து மேம்படுத்தவும் நாட்டிலேயே மத்திய பிரதேசத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 4ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய கையடக்கக் கணினிகள் (TAB) பயன்படுத்தும் முறை அறிமுகப் படுத்தப்பட் டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு அதிகாரி, எந்தக் கடையில் ஆய்வு மேற்கொள்கிறாரோ அந்தக் கடையின் முகவரி தெரியும் வகையில் கையடக்கக் கணினியில் புகைப்படம் எடுத்துக் கொள்வார். பின்னர் அந்த கடை உரிய முறையில் செயல்படுகிறதா, அங்குள்ள பொருட்கள் தரமானவையா என்று கையடக்கக் கணினியில் இருக்கும் பட்டியலைக் கொண்டு சரிபார்ப்பார். ஆய்வு முடிந்ததும் கடைக்காரருக்கு இ-மெயில் இருந்தால் ஆய்வு குறித்து மெயில் அனுப்புவார். இல்லாவிட்டால், பேப்பரில் எழுதிக் கொடுப்பார். அதேநேரத்தில் ஆய்வின் முழுவிவரமும் எங்கள் துறை இணையதளத்தில் பதிவேற்றமாகிவிடும்.

இந்தக் கையடக்கக் கணினி மூலம் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் வழக்கமான ஆய்வுப் பணியான கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தல், குறைகள் இருந்தால் மாதிரி எடுத்தல், அதனை ஆய் வுக் கூடத்துக்கு அனுப்புதல், பணி குறித்த தினசரி அறிக்கை, வாட்ஸ்-அப் புகார் குறித்து மேற்கொண்ட ஆய்வு ஆகியனவற்றை இருந்த இடத்திலிருந்தே கண்காணிக்கிறோம்.

பணி மேம்பாடு

அதுமட்டுமல்லாமல் ஆய்வு மேற்கொள்ளும்போது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அவற்றை உடனுக்குடன் தீர்த்துவைத்து அவர்களது பணியும் மேம்படுத்தப்படுகிறது.

ஆய்வின்போது கடைக்காரர் கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பேச்சுக்கும் இப்போது இடமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்களுக்கு விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்யவும், அதிகாரிகளின் பணியைக் கண்காணித்து மேம்படுத்தவும் நாட்டிலேயே மத்திய பிரதேசத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 4ஜி தொழில்நுட்பத்துடன்கூடிய ‘கையடக்க கணினிகள்’ பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உணவே மருந்து, மருந்தே உணவு என்பார்கள். மக்களிடம் உணவு விஷயத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லலாம். அதனால் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தவும், அதுபற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உணவுப் பாதுகாப்புத் துறை தொடங்கப்பட்டது.

மக்களிடம் விழிப்புணர்வு

சாலையோர உணவகம் முதல் ஸ்டார் ஓட்டல் வரை சோதனை நடத்தி, தரமற்ற உணவுப் பொருட்கள் விற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உணவுப் பொருட்களின் தரம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சிறு வியாபாரிகள், வணிகர்களை உரிமம் எடுக்கச் செய்வது, தகுதியானவர்களுக்கு உரிமம் வழங்குதல், அவர்களது விற்பனையைக் கண்காணித்தல், தரமற்ற உணவுப் பொருட்கள் விற்போர் மீது நடவடிக்கை எடுப்பது ஆகிய பணிகளை உணவுப் பாதுகாப்புத் துறை செய்து வருகிறது.

உணவுப் பொருட்கள் உற்பத்தி, வாகனத்தில் எடுத்துச் செல்லுதல், கிடங்கில் இருப்பு வைப்பது, ரீபேக் செய்வது, விநியோகிப்பது, சில்லறை விற்பனை என உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை பல கட்டங்களாக உணவுப் பொருட்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

உணவுப் பாதுகாப்புத் துறையில் உணவுப் பொருட்களில் கலந்துள்ள ரசாயனத்தால் எந்தமாதிரியான பாதிப்பு அல் லது நோய் வரும் என்று கண்டறிவதற்காக மாவட்ட அளவில் டாக்டர்களே உணவுப் பாதுகாப்பு உயர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர, 584 உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்தான் பணியாற்றுகின்றனர்.

உணவுப் பொருட்கள், ஓட்டல் பண்டங்கள், உணவுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய், ஜவ்வரிசி, உப்பு உள்ளிட்ட பொருட்களில் ஏதேனும் தரமற்றவையாக இருந்தால் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் கொடுக்கலாம்.

எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இந்த எண்ணில் குரல் மூலமாகவும் புகாரைப் பதிவு செய்யலாம். கடைகள், ஓட்டல்கள் மட்டுமல்லாமல் சத்துணவுக் கூடம், அம்மா உணவகம், கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்களில் வழங்கப்படும் அன்னதானமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் பெ.அமுதா கூறியதாவது:

உணவுப் பாதுகாப்புத் துறைக்கு குடிநீர், ஓட்டல்களில் விற்கப்படும் உணவுப் பதார்த்தங்கள், எண்ணெய் வகைகள், உப்பு, ஜவ்வரிசி போன்றவை தொடர் பாக அதிக புகார்கள் வருகின்றன. உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கமான சோதனையுடன், வாட்ஸ்-அப் மூலம் வரும் புகார்கள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.

உணவுப் பொருட்களின் தரம்

மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்யவும், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் பணியைக் கண்காணித்து மேம்படுத்தவும் நாட்டிலேயே மத்திய பிரதேசத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 4ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய கையடக்கக் கணினிகள் (TAB) பயன்படுத்தும் முறை அறிமுகப் படுத்தப்பட் டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு அதிகாரி, எந்தக் கடையில் ஆய்வு மேற்கொள்கிறாரோ அந்தக் கடையின் முகவரி தெரியும் வகையில் கையடக்கக் கணினியில் புகைப்படம் எடுத்துக் கொள்வார். பின்னர் அந்த கடை உரிய முறையில் செயல்படுகிறதா, அங்குள்ள பொருட்கள் தரமானவையா என்று கையடக்கக் கணினியில் இருக்கும் பட்டியலைக் கொண்டு சரிபார்ப்பார். ஆய்வு முடிந்ததும் கடைக்காரருக்கு இ-மெயில் இருந்தால் ஆய்வு குறித்து மெயில் அனுப்புவார். இல்லாவிட்டால், பேப்பரில் எழுதிக் கொடுப்பார். அதேநேரத்தில் ஆய்வின் முழுவிவரமும் எங்கள் துறை இணையதளத்தில் பதிவேற்றமாகிவிடும்.

இந்தக் கையடக்கக் கணினி மூலம் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் வழக்கமான ஆய்வுப் பணியான கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தல், குறைகள் இருந்தால் மாதிரி எடுத்தல், அதனை ஆய் வுக் கூடத்துக்கு அனுப்புதல், பணி குறித்த தினசரி அறிக்கை, வாட்ஸ்-அப் புகார் குறித்து மேற்கொண்ட ஆய்வு ஆகியனவற்றை இருந்த இடத்திலிருந்தே கண்காணிக்கிறோம்.

பணி மேம்பாடு

அதுமட்டுமல்லாமல் ஆய்வு மேற்கொள்ளும்போது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அவற்றை உடனுக்குடன் தீர்த்துவைத்து அவர்களது பணியும் மேம்படுத்தப்படுகிறது.

ஆய்வின்போது கடைக்காரர் கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பேச்சுக்கும் இப்போது இடமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...