உலக சுற்றுச்சூழல் தினம் 2018



ஜூன் 5-ல்
உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில்,

சுற்றுச்சூழலைக் காப்பதற்கு நாம் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை குறித்து ஒரு நினைவூட்டல் இங்கே.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பெருகிவரும் மக்கள் தொகையாலும் தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் வாகனப் புகையாலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுவதை விஞ்ஞானிகள் அறிவுறுத்துவது ஒரு புறம் இருந்தாலும்,

ஒவ்வொரு ஆண்டும் கூடிவரும் கத்தரி வெயிலின் தாக்கமும், திடீரென்று பெய்யும் பேய் மழையும் அதனால் விளையும் பெருவெள்ளமும் இயற்கையில் ஏதோ ஒழுங்கற்ற தன்மை உருவாகி வருவதை சூசகமாக உணர்த்துகின்றன.

உலக வெப்பமயமாதல் எனும் பிரச்சனையால் பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் உயரும் என்று சொல்லப்படுகிறது.

நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தண்ணீர் பஞ்சமும் இந்தியாவின் பல இடங்களில் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.

சுற்றுச்சூழலின் நலனை சீர்தூக்கிப் பார்த்து,

இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண்பது குறித்து சிந்தித்து செயலாற்றுவதற்கான ஒரு நாளாகவே இந்த உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

சுற்றுச்சூழலைக் காக்க இந்த உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் முன்வந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

இந்த உலகில் மனிதன் மட்டும்தான் உள்ளானா?! ஏன்… விலங்குகளும் பறவைகளும்தான் உள்ளன.

அவைகள் ஏதும் செய்யக்கூடாதா என மனிதர்கள் கேட்பதற்கு நியாயமில்லை!

ஏனெனில், மனித இனத்தை தவிர வேறெந்த உயிரினத்தாலும் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை!

செய்ய வேண்டியது;

செய்யக் கூடாதது!

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு நாம் செய்ய வேண்டியது என்னென்ன எனப் பார்த்தால்,

அதில் முக்கியமானது குறைந்தபட்சம் ஆளுக்கொரு மரம்நடுவது.

அடுத்தபடியாக,

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது.

இயற்கை விவசாய முறைகளைக் கையாளுதல்;

வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்தல் போன்றவற்றை சொல்லலாம்.

தவிர்க்க வேண்டியதென்று பார்த்தால், அத்தியாவசிய தேவைக்குத் தவிர மற்ற நேரங்களில் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது.

அதற்குப் பதிலாக மிதிவண்டிகளைப் பயன்படுத்தப் பழகினால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு உடல்நலமும் மேம்படும் வாய்ப்புள்ளது.

மேலும், ப்ளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது சுற்றுச்சூழலுக்கு மிகவும் அவசியமானதாகிறது.

வீட்டிலிருந்து புறப்படும் முன், மின்சாதன பொருட்களை அணைக்காமல் செல்லுதல் போன்ற சின்னச் சின்ன செயல்களையும் நாம் கவனித்து தவிர்க்கத் தேவையுள்ளது!

மரம் நடுவதன் அவசியம்!

மரங்களின் வெளிமூச்சே மனிதனின் உள்மூச்சாகிறது.

நமது பாதி நுரையீரலே மரங்களில்தான் தொங்கிக் கொண்டுள்ளன என. பெரியவர்கள்  சொல்வதுண்டு.

சூழல் காப்பதில் என்றும் அக்கறையுடன்

 *கூடலூர் நுகர்வோர் மனிதவள
சுற்றுச்சூழல்  பாதுகாப்பு மையம்*
மாநில அரசின் அங்கீகாரம் பெற்றது
பந்தலூர் நீலகிரி

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...