அயோடினின் பயன்களை பெண்கள் தெரிந்துகொண்டால், பந்தலூர்:"அயோடினின் பயன்களை பெண்கள் தெரிந்துகொண்டால், எதிர்கால சமுதாயத்தை சிறப்பானவர்களாக மாற்றிட முடியும்,' என்று தெரிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்க உட்பட்ட தாளூர் பகுதியில், அயோடின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தாளூர்-வெட்டுவாடி சாலையில், தேசிய ஊரக வேலையில் ஈடுபட்டிருந்த பெண்கள் மத்தியில் நடந்த நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர் கனயேந்திரன் பேசினார். அவர், "கடந்த காலங்களில் பல்வேறு நாடுகளிலும் அயோடின், பல உணவு தானியங்களில் சேர்க்கப்பட்டது. ஆனால் அவை மக்களை முழுமையாக சென்றடையாத நிலையில், கடலில் இயற்கையில் கிடைக்கும் அயோடினை அனைவரும் பயன்படுத்தும் உப்பில் சேர்த்தனர். உப்பை சமையலறையில் திறந்த நிலையில் வைத்திருத்தல், தண்ணீர் கலத்தல், சூரிய வெளிச்சம் படுதல் போன்ற காரணங்களால் அயோடின் சத்துக்கள் ஆவியாகிவிடுகிறது. எனவே பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி ஜாடிகளில் போட்டு அடைத்து வைக்க வேண்டும்; பிளாஸ்டிக் ஸ்பூன்களை கொண்டு பயன்படுத்த வேண்டும். அயோடின் பற்றாக்குறையால் முன் கழலை கழுத்து நோய், குள்ளமான குழந்தைகள் பிறப்பு, மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள், கருச்சிதைவு, மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும்,' என்றார். நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், "கடைகளில் உப்பு வாங்கும்போது காற்றுபட்ட; வெளியிடங்களில் வைத்துள்ள உப்புக்களையும், உடைந்த கவரில் உள்ள உப்புகளையும் வாங்க கூடாது. ஒரு மனிதனுக்கு ஒருநாளைக்கு வெறும் 6 கிராம் அயோடின் தேவைப்படும் நிலையில், முறையாக வைத்து உப்பை பயன்படுத்தவும், சரியான அளவில் உப்பை சமையலில் சேர்த்துக்கொள்ளவும் வேண்டும். வளமான, அறிவுபூர்வமான எதிர்கால சந்ததிகளை உருவாக்க பெண்கள் அயோடினின் பயன்கள் குறித்து தெரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும்,' என்றார். பணி மேற்பார்வையாளர் ருக்மணி மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

அயோடினின் பயன்களை பெண்கள் தெரிந்துகொண்டால்,

பந்தலூர்:"அயோடினின் பயன்களை பெண்கள் தெரிந்துகொண்டால், எதிர்கால சமுதாயத்தை சிறப்பானவர்களாக மாற்றிட முடியும்,' என்று தெரிவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்க உட்பட்ட தாளூர் பகுதியில், அயோடின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தாளூர்-வெட்டுவாடி சாலையில், தேசிய ஊரக வேலையில் ஈடுபட்டிருந்த பெண்கள் மத்தியில் நடந்த நிகழ்ச்சியில், 
சுகாதார ஆய்வாளர் கனயேந்திரன் பேசினார்.
அவர், "கடந்த காலங்களில் பல்வேறு நாடுகளிலும் அயோடின், பல உணவு தானியங்களில் சேர்க்கப்பட்டது. ஆனால் அவை மக்களை முழுமையாக சென்றடையாத நிலையில், கடலில் இயற்கையில் கிடைக்கும் அயோடினை அனைவரும் பயன்படுத்தும் உப்பில் சேர்த்தனர். 
உப்பை சமையலறையில் திறந்த நிலையில் வைத்திருத்தல், தண்ணீர் கலத்தல், சூரிய வெளிச்சம் படுதல் போன்ற காரணங்களால் அயோடின் சத்துக்கள் ஆவியாகிவிடுகிறது. 
எனவே பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி ஜாடிகளில் போட்டு அடைத்து வைக்க வேண்டும்; பிளாஸ்டிக் ஸ்பூன்களை கொண்டு பயன்படுத்த வேண்டும். அயோடின் பற்றாக்குறையால் முன் கழலை கழுத்து நோய், குள்ளமான குழந்தைகள் பிறப்பு, மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள், கருச்சிதைவு, மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும்,' என்றார்.
நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், "கடைகளில் உப்பு வாங்கும்போது காற்றுபட்ட; வெளியிடங்களில் வைத்துள்ள உப்புக்களையும், உடைந்த கவரில் உள்ள உப்புகளையும் வாங்க கூடாது. ஒரு மனிதனுக்கு ஒருநாளைக்கு வெறும் 6 கிராம் அயோடின் தேவைப்படும் நிலையில், முறையாக வைத்து உப்பை பயன்படுத்தவும், சரியான அளவில் உப்பை சமையலில் சேர்த்துக்கொள்ளவும் வேண்டும். வளமான, அறிவுபூர்வமான எதிர்கால சந்ததிகளை உருவாக்க பெண்கள் அயோடினின் பயன்கள் குறித்து தெரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும்,' என்றார். 
பணி மேற்பார்வையாளர் ருக்மணி மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...