பொன்னானி இலவச கண் சிகிச்சை முகாம்


பந்தலூர் : தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு, பந்தலூரில், கண் சிகிச்சை இலவச முகாம் நடந்தது. கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்-மக்கள் மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், மகாத்மா காந்தி பொது சேவை மையம், நண்பர்கள் செவன் ஸ்டார் யூத் கிளப் பொன்னானி சார்பில், பந்தலூர் பொன்னானியில் கண் சிகிச்சை இலவச முகாம் நடந்தது. கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் இந்திராணி துவக்கி வைத்தார். நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். காந்தி சேவா மைய அமைப்பாளர் நவுசாத், கவுன்சிலர் விஜயன் முன்னிலை வகித்தனர். டாக்டர் அமராவதி ராஜன் தலைமையிலான குழுவினர், பார்வை குறைபாடு உடையவர்களை பரிசோதித்து ஆலோசனை வழங்கினர்; 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பேர், ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். நிர்வாகிகள் தனிஸ்லாஸ், சுரேஷ், கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...