இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நுகர்வோர் அமைப்பு சார்பில் வலியுறுத்தல்


பந்தலூர் : கூடலூர் கல்வி மாவட்டத்தில் காலியாகவுள்ள இடைநிலை ஆசிரிய பணியிடங்களை பூர்த்தி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தலைவர் சிவசுப்ரமணியம், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தேசிய ஆலோசகருக்கு அனுப்பியுள்ள மனு:பந்தலூர், கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிகள் கூடலூர் கல்வி மாவட்டதிற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.இதன் கட்டுப்பாட்டில் 63 ஆரம்ப பள்ளிகள், 34 நடுநிலைப்பள்ளிகளும் செயல்படுகிறது. மேலும் டான்டீ பகுதியில் 6 ஆரம்ப பள்ளிகளும் செயல்படுகிறது.மொத்தம் 97 பள்ளிகள் செயல்படும் நிலையில், இதில் 80 இடைநிலை ஆசிரிய பணியிடங்கள் காலியாக உள்ளது. இதில் 20 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில்,பி.டி.ஏ. மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, மாணவர்களிடம் பணம் வசூலித்து மாத சம்பளம் வழங்குவதால் தனியார் பள்ளிகளாக அரசுப்பள்ளிகள் மாறி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆதிவாசி மற்றும் தோட்ட தொழிலாளர்களாக உள்ள பெற்றோர்களுக்கு செலவினம் ஏற்படுகிறது. எனவே, இலவசமாக வழங்கப்படும் கல்வி முழுமையாக கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...