பந்தலூரில் பிடிபட்டது ராஜநாகம்: கூடலூர் வனத்தில் விடுவிப்பு

ஊட்டி: பந்தலூரில் பிடிபட்ட ராஜநாகம், வனத்துறை உயர் அலுவலர்களின் ஆலோசனைக்கு பின், கூடலூர் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. பந்தலூர் பஜார் ஒட்டிய நகராட்சி கட்டணக் கழிப்பிடத்தில், நேற்று முன்தினம் பிற்பகல், ராஜநாகம் நுழைந்தது. பொதுமக்கள் விரட்ட முற்பட்ட போது, படம் எடுத்து நின்றுள்ளது. கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் சிவசுப்ரமணியம், சேரம்பாடி வனச்சரகர் தேவராஜனுக்கு தகவல் கொடுத்தார். வனவர் ராஜேந்திரன், நீலகிரி வன உயிரின மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த மதுசூதனன் சென்று, 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பத்திரமாக பிடித்தனர். நீலகிரி வன உயிரின மற்றும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த ஜெயசந்திரன், சாதிக், ராஜநாகத்தை ஊட்டிக்கு கொண்டு வந்தனர். பாம்பை, வனத்தில் விடுவிப்பதா; வண்டலூர் மிருக காட்சி சாலைக்கு அனுப்புவதா? என்பது குறித்து, வனத்துறையினர் ஆலோசித்தனர். முதன்மை தலைமை வனப் பாதுகாவலரிடம் தெரிவித்த பின், கூடலூர் வனப்பகுதியில் விடுவிக்க முடிவு செய்யப்பட்டது.  முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ""பாம்பு வகையில், அழிவின் பட்டியில் உள்ள ராஜநாகம், குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளது வியப்பளிக்கிறது. மிதவெப்ப மண்டல வனங்களில் காணப்படும் இவ்வகை பாம்புகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு, மக்களிடையே ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது; இதனால் தான், பாம்பு உயிருடன் பிடிக்கப்பட்டது. கூடலூர் வனப்பகுதியில் விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் பாம்புகளை அடித்துக் கொல்லாமல், வனத்துறைக்கு தகவல் அளிக்க, மக்கள் முன்வர வேண்டும். பம்புகளை கொல்லாமல் விடுவதால், பயிர்களை அழிக்கும் எலிகளை கட்டுப்படுத்த முடியும்,'' என்றார்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...