பந்தலூர்:நகர்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியின் கீழ், நெல்லியாளம் மற்றும் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்களுக்கான சுய வேலை வாய்ப்பு பயிற்சி, பந்தலூரில் துவங்கியது. நெல்லியாளம் நகராட்சி தலைவர் அமிர்தலிங்கம் தலைமை வகித்தார். கமிஷனர் நீலேஷ்வரன், மரியலூயிஸ் பிரபாகர், கவுன்சிலர் முனுசாமி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி நடப்பது குறித்து, துறை சார்பில், நேற்று முன்தினம் பெயரளவுக்கு மட்டுமே விளம்பரப்படுத்தப்பட்டது. மக்களுக்கு முறையாக சென்றடையாததால், 15 பேர் மட்டுமே நேர்முக தேர்வில் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்காக போடப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட இ ருக்கைகள் காலியாக இருந்தன. வரும் காலங்களில், முறையாக அறிவித்து, வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் மற்றும் பெண்களை பங்கேற்க செய்ய வேண்டுமென, முகாமில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.
கவுன்சிலர்கள் மூர்த்தி, விஜயன், ராமன், சகுந்தலா, மினி, நவநீதம், நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment