கர்ப்பிணிகளுக்கான மனநலன் விழிப்புணர்வு நெலாக்கோட்டை

 நெலாக்கோட்டை அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் ஆல் தி சில்ரன் அமைப்பு ஆகியன சார்பில் கர்ப்பிணிகளுக்கான மனநலன் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


நிகழ்ச்சியில் 

மருத்துவர் தபாசியா, ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நெலாக்கோட்டை அரசு சமுதாய சுகாதார நிலைய

மருத்துவ அலுவலர் திருநாவுக்கரசு தலைமை தாங்கி பேசும்போது கர்ப்பிணிகள் நலமுடன் இருக்க முறையான மருத்துவ பரிசோதனைகள், ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் மனநலன் சமநிலையில் இருக்காது. எனவே அதனை சரிசெய்து கொள்ள வேண்டும். கர்ப்பிணிகளுக்கு தற்போது காய்ச்சல் அதிகம் தாக்கும் சூழல் உள்ளதால் லேசான காய்ச்சல் இருந்தாலும் உடனடியாக மருத்துவர்களை அணுகி தகுந்த மாத்திரை எடுத்துக்கொண்டால் தாய் சேய் பாதுகாப்பு பெறலாம் என்றார். 


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது கர்ப்ப காலத்தில் தாய் சேய் நலம் காக்க மனநிலை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டியது அவசியம்.

சோகம், துக்கம், கவலை போன்றவற்றை தவிர்த்து விட்டு எப்போதும் புத்தகம் படித்தல் பாடல் கேட்டல் தோட்டங்களில் சிறு சிறு வேலைகள் செய்தல் போன்றவற்றின் மனதை மாற்றிக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் எளிமையான வேலைகள் செய்வது, உடற்பயிற்சி செய்து கொள்ளுதல் போன்றவை பிரசவ காலத்துக்கு உதவியாக அமையும். உணவுகளை நான்கு வேளையாக பிரித்து உண்ணுதல், காய்கறி, பழங்கள், கீரைகள் ஆகியவற்றை உணவில் எடுத்துக் கொள்ளுதல் உடல் ஆரோக்கியம் தரும் என்றார்.


நிகழ்ச்சியில் கர்ப்பிணிகள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தீயணைப்பு துறை மாவட்ட நுகர்வோர் காலாண்டு கூட்டம்

 உதகை தீயணைப்பு துறை மாவட்ட தீயணைப்பு அலுவலர் அலுவலகத்தில்

துறை ரீதியான நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது.


நீலகிரி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்ற நுகர்வோர் காலாண்டு கூட்டத்திற்கு மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.


கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், நிர்வாகி மகேந்திர பூபதி, கோத்தகிரி புளூமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் முகமது சலீம், நிர்வாகி இஸ்மாயில், 

கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், உதகை தொகுதி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் அமீர்கான் ஆகியோர் கலந்துகொண்டு பேசும்போது 

பந்தலூர், குந்தா வட்டங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். கூடலூர் பகுதியில் விபத்து நேரங்களில் தீயணைப்பு வாகனங்கள் தண்ணீர் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது - இனிவரும் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள், வணிக நிறுவனங்களில் தீயணைப்பு முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். கோத்தகிரியில் தற்போது உள்ள தீயணைப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் மற்றும் மாணவர்கள் இடையே தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தவேண்டும் என்றனர்.


பதில் அளித்த மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வெங்கடேஷ் பேசும்போது பந்தலூர், குந்தா, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் தீயணைப்பு துறைக்கான இடவசதி கிடைத்தால் அல்லது அரசு நிலம் ஒதுக்கி தந்தால் புதிய கட்டிடம் கட்டிட நடவடிக்கை எடுக்கப்படும். மலைப்பகுதியில் தீயணைப்பு, பேரிடர் மீட்பு குறித்த பயிற்சி அளிப்பதற்கான பயிற்சி மையம் அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே அரசு சார்பில் சுமார் 10 முதல் 15 ஏக்கர் நிலம் ஒதுக்கி தந்தால் பேரிடர் மீட்பு பயிற்சி மையம் அமைக்படும். இதன்மூலம் மாநிலத்தில் இருந்து பலரும் மலைப்பகுதியில் பேரிடர் மீட்பு குறித்து பயிற்சி பெற ஏதுவாக அமையும். நுகர்வோர் அமைப்புகள் நிலம் கிடைக்க முயற்சி செய்து தர வேண்டும். மேலும் தீயணைப்பு நிலையத்தில் ஒரு லாரியில்

தண்ணீர் இருப்பு வைக்கப்படுகிறது. எனினும் அவசர நேரத்தில் உள்ளாட்சி மன்றங்கள் தண்ணீர் தந்து உதவினால் பயனளிக்கும் இனிவரும் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் ஏற்பாடு செய்து கொள்வோம். பேரிடர் மீட்பு குறித்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து கொடுத்தால் துறை சார்பில் பங்கேற்று பயிற்சி அளிப்போம் என்றார்.


நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை அலுவலர்கள் நுகர்வோர் பிரதிநிதிகள் பங்கேற்றனர்

மூட்டு – முதுகு – கழுத்து வலிக்கு இயற்கை வைத்தியம் மற்றும் பாட்டி வைத்தியம் ==

 மூட்டு – முதுகு – கழுத்து வலிக்கு இயற்கை வைத்தியம் மற்றும் பாட்டி வைத்தியம்

==


✅ 1. வெந்நீர் ஒத்தடம் (சூடான சுருக்கம்)


பாதிக்கப்பட்ட பகுதியில் 5-10 நிமிடம் வெந்நீர் பேக் வைத்து விடுங்கள்.


இரத்த ஓட்டம் சீராகி வலி குறையும்.


==

✅ 2. மஞ்சள் பால் (மஞ்சள் பால்)


ஒரு கிண்ணம் சூடான பாலில்

½ டீஸ்பூன் மஞ்சள் + ஒரு சிட்டிகை மிளகு


தினமும் இரவு குடித்தால் அழற்சி (Inflammation) குறையும்.

==


✅ 3. இஞ்சி – பூண்டு மசாலா


2 பூண்டு பற்கள்


ஒரு சின்ன துண்டு இஞ்சி


இரண்டையும் நசுக்கி, 1 டீஸ்பூன் நெய் சேர்த்து காலை சாப்பிடலாம்.


➡️ மூட்டு வலிக்கு சிறந்த பாதி வைத்தியம்.


==

✅ 4. எள்ளெண்ணெய் மசாஜ்


எள்ளெண்ணெயை லேசாக சூடாக்கி வலி இருக்கும் இடத்தில்

10 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்யுங்கள்.


எலும்பு – மூட்டு வலிக்கு இடைவெளி இல்லாமல் செய்கிறீர்கள் என்றால் நல்ல பலன்.

==

✅ 5. நெல்லிக்காய் + தேன்


1 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி + 1 டீஸ்பூன் தேன்


காலையிலும் இரவிலும் சாப்பிட்டால் அழற்சி குறையும்.

==


✅ 6. யோகா & ஸ்ட்ரெசிங் (மென்மையான நீட்சி


மஜ்ரி ஆசனம் (பூனை-மாடு)


புஜங்காசனம் (கோப்ரா போஸ்)


சைல்ட் போஸ் (குழந்தை போஸ்)

➡️ இதை 3-5 நிமிடம் தினமும் செய்தால் முதுகு & கழுத்து வலி குறையும்

==

✅ 7. வெந்தயம் நீர்


இரவு ஒரு டீஸ்பூன் மெந்தயத்தை ஊறவைத்து

காலை காலையில் தண்ணீரை குடிக்கவும்.

➡️ உடல் சூடு குறைத்து மூட்டு உயவு மேம்படும்.

==

✅ 8. சீரகம் – ஓமம் குடிநீர்


½ லிட்டர் தண்ணீரில்

1 டீஸ்பூன் சீரகம் + 1 டீஸ்பூன் ஓமம் கொதிக்க வைத்து

தினமும் 2 முறை குடிக்கலாம்.

➡️ உடல் வாயு, பட்டை வலி, முதுகு வலி குறையும்.

==

🔥 மிகச் சிறப்பான பாட்டி வைத்தியம் (சிறந்த வைத்தியம்)


★ எலுமிச்சை + இஞ்சி மூட்டு லே


எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்


இஞ்சி சாறு 1 ஸ்பூன்


தேன் 1 ஸ்பூன்

➡️ தினமும் 1 முறை — மூட்டு விறைப்பு குறையும்.


★ வேப்பெண்ணை தடவி வெந்நீர் செக்யூ


வேப்பெண்ணை காய்ச்சி தடவி


அதன் மேல் வெந்நீர்த் தொட்டி 5 நிமிடம் வைத்தால்

➡️ மூட்டு வீக்கம் குறையும்.

==

❌❌❌

 செய்ய வேண்டியவற்றை தவிர்க்கவும்


குளிர்ந்த தண்ணீர் அதிகம்


ஜங்க்–ஃபுட்


நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது


கனமான எடையை தூக்குதல்


அதிக சர்க்கரை உணவு

💐💐🙏🙏💐💐💐

வாரிசு இல்லாமல் இறந்தவரின் சொத்து யாருக்கு? – சட்டம் சொல்வது என்ன

 வாரிசு இல்லாமல் இறந்தவரின் சொத்து யாருக்கு? – சட்டம் சொல்வது என்ன

 இதை 95% பேருக்கும் தெரியாது!

 இது 'Intestate Death' – வாரிசு பெயர் குறிப்பிடாமல் இறப்பது.

இந்த நிலையில் Hindu Succession Act / Indian Succession Act தானாகவே அமலில் வரும்.

 வகுப்பு-I சட்ட வாரிசுகள் (முதல் சுற்று வாரிசுகள்)

 தாயார்

 தந்தை

மனைவி / கணவர்

 மகன், மகள்

 மரணமடைந்த மகன்/மகளின் பிள்ளைகள்

 இவர்களில் யாராவது ஒருவரே இருந்தாலும் சொத்து முழுவதும் இவர்களுக்கே!

 Class-I இல்லையென்றால் → Class-II சட்ட வாரிசுகள்

வரிசை:

1. சகோதரர் / சகோதரி

2. அண்ணன், அக்கா, தங்கை, தம்பி

3. அவர்கள் பிள்ளைகள் (Mephews/Nieces)

4. தாத்தா, பாட்டி

5. மாமா, மாமி, சித்தப்பா, சித்தி

இந்த வரிசையில் இருப்பவர்களுக்கே சட்டப்படி சொத்து போகும்.

 அரசு ஊழியரின் பென்ஷன் யாருக்கு:

1. முதலில் – மனைவி / கணவர்

2. அடுத்து – மகன், மகள்

3. பின்னர் – தாய், தந்தை

4. இறுதியாக – சகோதரர், சகோதரி

 பென்ஷன் பொதுவாக Class-I வாரிசுகளுக்கே வழங்கப்படும்.

 வங்கி பணம் யாருக்கு

பரிந்துரைக்கப்பட்டவர் → அவர் முதலில் வாங்குவார்

ஆனால் 👉 உண்மையான உரிமை சட்ட வாரிசுகளுக்கு தான் (உச்ச நீதிமன்ற தீர்ப்பு)

 Nominee இல்லையென்றால் → Class-I → Class-II வரிசையில் செல்கிறது.

 நிலம் / வீட்டு சொத்து யாருக்கு

 Class-I இருந்தால் 100% அவர்களுக்கே

Class-I இல்லையெனில் Class-II

 யாரும் இல்லையெனில் → சொத்து அரசுக்கு Escheat செயல்முறை மூலம் சென்று விடும்

 5 வரிகளில் முழு சுருக்கம்:

 வாரிசு பெயர் இல்லாமல் இறந்தால் சட்ட வாரிசுத் தரவரிசை தானாக செயல்படும்.

வகுப்பு-I – மனைவி/கணவர், பிள்ளைகள், தந்தை, தாய்.

இவர்கள் இல்லையென்றால் Class-II – சகோதரர்கள், அண்ணன், தங்கை போன்றோர்.

 பென்ஷன் பிரதான மனைவி/கணவருக்கே.

வங்கி நாமினி → பெறுநர் மட்டும்; உரிமையாளர் அல்ல. உரிமை வாரிசுகள் க்கு

உயரதிகாரிகளை பழிவாங்க சகஅதிகாரிகளே குற்றங்கள் புனைவது கேவலமாக உள்ளது:

 உயரதிகாரிகளை பழிவாங்க சகஅதிகாரிகளே குற்றங்கள் புனைவது கேவலமாக உள்ளது: ஐகோர்ட் நீதிபதி ஸ்ரீமதி காட்டம்

திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துணை இயக்குனர் சரவணபாபுவை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்க அவரது அலுவலகத்தில் ரூ.2.50 லட்சம் பணம் மறைத்து வைத்து, பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் மூலம் சிக்க வைக்க முயன்ற வழக்கு சி.சி.டி.வி., காட்சிகள் மூலம் அம்பலமானது.

இது குறித்து துணை இயக்குனர் சரவணபாபு புகாரின் பேரில் பணம் வைத்த விஜய், உதவி முத்து சுடலை தீயணைப்பு வீரர்கள் ஆனந்த், முருகேஷ், மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய நபராக தேடப்படும்போது திருப்பூர் தீயணைப்பு அலுவலர் வீரராஜ் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். முன் ஜாமின் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நேற்று வழக்கு விசாரணை நடந்தது.

பாதிக்கப்பட்ட துணை இயக்குனர் சரவணபாபு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், உயர் அதிகாரியை சிக்க வைக்கும் குற்றநாடகத்தில் முக்கிய குற்றவாளியாக தீயணைப்பு அலுவலர் வீரராஜ் உள்ளார். அவர்தான் மற்ற தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோரை இணைத்து நெட்வொர்க்கை ஏற்படுத்தினார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தால் தான் முழுப்பின்னணியும் தெரியவரும். இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு என்பது தெரியும் என்றார்.

தீயணைப்பு அலுவலர் வீரராஜ் தரப்பில் வழக்கறிஞர் பழனிவேல் ராஜன் ஆஜரானார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மனோஜ் குமார் ஆஜரானார்.

இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி ஸ்ரீமதி, ''அரசு அதிகாரிகளை பதவி உயர்வு பெற விடாமல் தடுக்கும் நோக்கில் சக அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஏற்புடையதல்ல". கேவலமாக உள்ளது.

இவர்தான் இந்தத் திட்டத்தின் முக்கிய நபராக கருதப்படுவதால் அவரை போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டும். இதன் முழு பின்னணியும் தெரிய வேண்டும். எனவே முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன். ஜன. 2 ல் அவரை ஜாமின் கேட்டு மனு செய்யுங்கள் என்றார்

நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு கேபிள் டிவி துறை சார்பில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது.

 நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு கேபிள் டிவி துறை சார்பில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது.

உதகை கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு கேபிள் டிவி தனிவட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு கேபிள் டிவி தனிவட்டாட்சியர் ஆனந்தி தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட மேலாளர் நடராஜ் முன்னிலை வகித்தார்.


அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகளான கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் பொதுச்செயலாளர் சிவசுப்பிரமணியம், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன், புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் வாசுதேவன், உதகை நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் அமீர்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசும்போது

அரசு கேபிள் டிவி தரமான முறையில் சேவை வழங்க வேண்டும். நிர்ணயித்த கட்டணம் வசூலிப்பதை உறுதிபடுத்த வேண்டும். சேரம்பாடி எருமாடு உள்ளிட்ட பகுதிகளில் கேரளா மாநில இணைப்புகளை தமிழக அரசின் கேபிள் டிவி இணைப்புகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இ சேவை மையங்களில் கூடுதல் பணியாளர் நியமனம் செய்ய வேண்டும். ஆதார் சேவை மையங்களில் கட்டண பட்டியல் ஓட்ட வேண்டும். ஆதார் சேவை மையங்கள் முறையாக இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும். இ சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மையங்களில் பொதுமக்கள் அலைக்கழிக்க படாமல் முறையான சேவை வழங்க வேண்டும்.


பதில் அளித்த கேபிள் டிவி தனி வட்டாட்சியர் ஆனந்தி பேசும்போது 

அரசு கேபிள் டிவி இணைப்பு மூலம் தற்போது செய்தி, விளையாட்டு, திரைப்படம் பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து வகையைச் சேர்ந்த 268 சேனல்கள் ஒளிபரப்பப்படுகின்றன படுகிறது. தற்போது கட்டணமாக ஜிஎஸ்டி உட்பட 160 ரூபாய் பெறப்படுகிறது. இணைய வழியில் நேரடியாக கூட கட்டணம் செலுத்தும் வசதியும் உள்ளது. கட்டண காலம் முடிந்தவுடன் ஒளிபரப்பு தானாக நிறுத்தப்படும். புதிய இணைப்பு பெற SD இலவசமாகவும் HD இணைப்பு 500 முன்பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். கேரளா மாநில எல்லை பகுதிகளில் மலையாள பேக்கேஜ் அதிகம் கேட்பதால், இணைய வசதியுடன் கேபிள் சேவை வழங்குவது குறித்து ஏர்டெல் நிறுவனம் மற்றும் பி எஸ் என் எல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மாநில அரசு ஒப்பந்தம் மேற்கொண்டபின் தமிழக அரசு கேபிள் டிவி இணைப்புகள் வழங்கப்படும். இசேவை மையங்களில் ஒரு நபர் பணிக்கு ஏற்ப இருந்தால் கூடுதல் பணியாளர் நியமனம் செய்ய இயலாது. ஆதார் சேவை மையமும் தினசரி சராசரியாக 20 பதிவுகள் வருவதால் கூடுதல் மையங்கள் திறக்க இயலாது. மாநில அரசு மூலமே தனியார் இ சேவை மையங்கள் பதிவு பெற்று செயல்படுகின்றன. ஆதார் சேவைகள் தனியார் மையங்களில் முகவரி மாற்றம் மட்டுமே மேற்கொள்ள முடியும். இதர சேவைகளுக்கு அரசு கேபிள் டிவி நிறுவனம், எல்காட் மற்றும் அஞ்சலகம் ஆகிய சேவை மையங்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும். சேவை மையங்களின் பணிகள் குறித்து தொடர் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். கட்டண பட்டியல்கள் ஒட்டி வைக்கப்படும் என்றார்

தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கு

 தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு கருத்தரங்கு



கூடலூர்: கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சியில் தேசிய நுகர்வோர் தின சிறப்பு நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. 
 
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆல் தி சில்ரன் அமைப்பு மற்றும் மைய குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் நடைபெற்றது நிகழ்வு விழிப்புணர்வு கருத்தரங்கில் பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜோர்ஜ் தலைமை தாங்கினார். ஆல் தி சில்ரன் அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் முன்னிலை வகித்தார் 

உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகுமார் பேசும்போது 
நாம் உணவில் உப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்டவை 5 முதல் 20 கிராம் வரையே நாளொன்றுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற நிலையில், குளிர்பானத்தில் 3000 பிபிஎம் அளவு சர்க்கரையும், சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளில் 1000 பிபிஎம் அளவுக்கு மேல் உப்பும் உள்ளது. இவை 10 மடங்கு அதிகம். அதுபோல்
நொறுக்குத்தீனி வகைகளில் சேர்க்கப்படும் எண்ணெய், உப்பு போன்றவை மீண்டும் தின்பதற்கு துண்டுதலை உருவாக்குகின்றன. இவை உடலில் பல்வேறு நோய்கள் அடித்தளமாக அமைகிறது.
உணவு பாதுகாப்பு சட்டப்படி 100 பிபிஎம் வரை சுவைக்கு அஜினமோட்டோ சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஆனால் உணவுகளில் இவை அதிகமாக உள்ளது சேர்க்கப்படுகிறது. உணவுப் பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ள மூலப்பொருட்களில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஒவ்வாமை உள்ளிட்ட தகவல்களைப் பார்த்து உணவுப் பொருட்கள் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும் என்றார்.

கூடலூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் பேசும்போது
அனைவரும் நுகர்வோர் என்ற நிலையில் தரமான பொருட்களை நமது விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். ஆனால் நாம் என்ன பயன்படுத்த வேண்டும் என்பதை கார்ப்பரேட் விளம்பரம் தீர்மானிக்கிறது. 
இவர்களோடு போட்டி போட முடியாமல் தரமான பொருட்கள் மக்களிடம் சென்று சேர்க்க முடியாமல் முடங்கியுள்ளனர்.
மையோனாஸ், சபர்மா உள்ளிட்ட உணவுகள் ருசி கவர்ச்சியால் ஈர்ப்பது வியாபார தந்திரம். ஆனால் அவை நம்நாட்டு உணவுகள் அல்ல இவற்றால் ஆரோக்கியம் கேள்விக்குறியாக உள்ளது. இவற்றை தவிர்க்க வேண்டும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு கட்டுப்பாடுகளும் அவசியம் என்றார். 

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது நுகர்வோர் குறைகளை களைவதற்கு இணைய வழியில் புகார் அளிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஈ-தாக்கல் முறையில் நுகர்வு குறைதீர் ஆணையங்களில் புகார் அளிக்கலாம். மொபைல் ஆப்கள் மூலம் தர குறியீடுகளை அறிந்து கொண்டு தரமற்ற பொருட்களுக்கும், உணவு பொருட்கள் சார்ந்த குறைபாடுகளுக்கும் வாட்ஸ்அப் மற்றும் இணையம் வழியில் புகார்களை தெரிவிக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் நுகர்வோர் குறைகள் விரைவாக களைய முடிகிறது என்றார்.

நிகழ்ச்சியில் பயிற்சி மைய பயிற்றுநர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஓவேலி அரசு மேல்நிலை பள்ளியில் மின்சார சிக்கனம் விழிப்புணர்வு

 

கூடலூர் அருகே ஓவேலி அரசு மேல்நிலை பள்ளியில் மின்சார சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது 

தமிழ்நாடு மின்சார வாரியம் கூடலூர் கோட்டம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், பள்ளி ஆற்றல் மன்றம் ஆகியன சார்பில் தேசிய மின்சிக்கன வாரவிழாவை முன்னிட்டு மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) கவிதா தலைமை தாங்கினார். 

உதவி மின் பொறியாளர்கள் தமிழரசன்(கூடலூர்),  ஹரிபிரசாத்(தேவர்சோலை), ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித்,  பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் மகேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூடலூர் மின் கோட்ட செயற்பொறியாளர் முத்துகுமார் பேசும்போது மின்சார உற்பத்தி மேற்கொள்ள பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், மின்சார தேவைக்கு நிகரான உற்பத்தி மேற்கொள்ள மூல பொருட்களான யுரேனியம், நிலக்கரி, தண்ணீர் போன்றவை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் புவி வெப்பமயமாகிறது. எனவே மின்சாரம் சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள ஒவ்வொருவரும் உறுதி ஏற்று கொள்ளவேண்டும்.  தற்போது சூரியஒளி சோலார் மூலம் மின்உற்பத்தி மேற்கொள்ள அரசு மானியம் வழங்கி வருகிறது. மின்சார வாரியத்துடன் இணைந்து வீடுகளுக்கு சோலார் பேனல் அமைத்து மின்சார தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். என்றார்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது 
மின்சார சேமிப்பில் ஒவ்வொருவரும் ஒரு யூனிட் சேமிக்கும் போது மின்சார உற்பத்தி செலவினம் குறையும். ஆடம்பர மின்விளக்குகள் பயன்படுத்துதல், ஆளில்லா நேரத்திலும் மின்சாதன பொருட்களை இயக்க வைத்தல் போன்றவற்றை தவிர்க்கலாம். மேலும் பிஇஇ குறியீடு மற்றும் ஐஎஸ் ஐ தரமுத்திரை பெற்ற வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும். இயற்கையாக காற்றோட்டம், வெளிச்சம் வரும் வகையில் கட்டிட அமைப்புகள் மேற்கொள்வதன் மூலமும் மின்சார செலவினத்தை குறைக்க முடியும். என்றார். 

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

நுகர்வோர் தின விழிப்புணர்வு

 உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு

பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக நுகர்வோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் மனித வளர்ச்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், ஆல் தி சில்ட்ரான் அமைப்பு ஆகிய சார்பில் கரியசோலை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் உலக நுகர்வோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போட்டிகளை வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் புளோரா குளோரி தலைமை தாங்கினார். பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் மணி வாசகம் ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கூடலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் (பொ) முத்துக்குமார் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசும்போது நுகர்வோர் கல்வி என்பது பொதுமக்கள் மத்தியில் அதிக பரவ வேண்டியது அவசியமாகிறது. தரமான சேவை, தரமான நுகர்வுக்கு அடித்தளமாக அமையும் தரமான நுகர்வு பெறுவதற்கான வாய்ப்புகளையும், அவற்றில் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டும் பொறுப்பும் நுகர்வோருக்கு
 உள்ளது. மின்சார உபயோகப் பொருட்களில் தர முத்திரைகள் உள்ள பொருட்கள் விபத்தை ஏற்படுவது தடுப்பதோடு மின் உபகரணங்களுக்கு பாதுகாப்பையும் தரும் இவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும் அதுபோல மின்சாரத்தை தேவைக்கு பயன்படுத்தி கொள்ளவும், பாதுகாப்பான முறையில் மின்சாரங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். 

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது நுகர்வோர் விழிப்புணர்வுக்கான முன்னெடுப்புகள் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் தொடர்ந்து செயலாற்றி வருவதால் தற்போதைய சூழலில் நுகர்வோர் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. நுகர்வோர்கள் ஏன்? எதற்கு? எப்படி? என்ன பயன்? நமக்கு தேவையா என்பதை அறிந்து பொருட்களை வாங்கி பயன்படுத்துதல் அவசியம். தற்போதைய சூழலில் செயற்கை நுண்ணறிவு மூலம் பலவேறு பொருட்களின் பயன்கள், பக்கவிளைவுகள், பொருட்களின் வாழ்நாள் உள்ளிட்ட தன்மைகளை எளிதில் அறிந்து கொள்ள முடியும் என்பதால் நுகர்வோர் கல்விக்கு செயற்கை நுண்ணறிவு திறனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். என்றார்.

நிகழ்ச்சியில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்குபெற்ற 25 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 
பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்*

 அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்*

இந்திய அரசியல் சாசனம்

இந்திய தண்டனை சட்டம்


குற்றவியல் நடைமுறை சட்டம்


முதல் தகவல் அறிக்கை (F.I.R.) பதிவு - சட்டமும் நடைமுறையும்


இந்திய அரசியல் சாசனம்

Constitution of India செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவினால் இந்திய அரசியல் சாசனத்தை வாசித்துக்கொள்ளலாம். 


தேடும் வசதியும் உள்ளது. நீங்கள் தரவிறக்க வேண்டிய கோப்புகள் Constitution.jar மற்றும் Constitution.jad .


இந்திய தண்டனை சட்டம்

IPC - Indian Penal Code செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவினால் இந்திய தண்டனை சட்டத்தை முழுவதும் வாசித்துக்கொள்ளலாம். 


தேடும் வசதியும் உள்ளது. நீங்கள் தரவிறக்க வேண்டிய கோப்புகள் IPC.jar மற்றும் IPC.jad           .


குற்றவியல் நடைமுறை சட்டம்

CrPC - The Code of Criminal Procedures செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவினால் குற்றவியல் நடைமுறை சட்டத்தை முழுவதும் வாசித்துக்கொள்ளலாம். தேடும் வசதியும் உள்ளது. நீங்கள் தரவிறக்க வேண்டிய கோப்புகள் CrPC.jar மற்றும் CrPC.jad


முதல் தகவல் அறிக்கை (F.I.R.) பதிவு - சட்டமும் நடைமுறையும்.....


நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்குகளில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் காவல் துறையின் வரையறைக்குள் வராத வழக்குகளில் தேவையில்லாமல் நடவடிக்கை எடுப்பதும் அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும் காவல் துறையினர் மீது தொடர்ச்சியாக இருந்துவரும் குற்றச்சாட்டுகள் ஆகும்.


வழக்குகளை பதிவுசெய்வதில் சில எளிய முறைகளை பின்பற்றுதல், காவல் துறையினருக்கு உள்ள கடமைகள், நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரங்கள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு உரிய முறையில் அணுகுதல் ஆகியவை மேற்கண்ட பிரச்சனைகளில் இருந்து பாதிக்கபட்டோர் விடுபட உதவும்.


முதலில் ஒரு குற்றச்சாட்டின் பல்வேறு தன்மைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  பொதுவாக குற்றங்களை உரிமையியல் வழக்குகள் (Civil Cases), குற்றவியல் வழக்குகள் (Criminal Cases) என இருவகையாக பிரிக்கலாம். 


இதில் உரிமையியல் சார்ந்த வழக்குகளில் காவல் துறையினர் தன்னிச்சையாக  செயல்பட எந்தவித சட்ட உரிமையும் இல்லை. 


 பொதுவாக இரண்டு தனிப்பட்ட தரப்பினருக்கு இடைப்பட்ட சொத்து மற்றும் அனுபவத்தின் மீதுள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பான பிரச்சனைகளை உரிமையியல் வழக்குகள் என்கிறோம். 


இந்த உரிமையியல் பிரச்சனைகள் கூட அடிதடி தகராறுகள், ஆவணங்களை போலியாக உருவாக்குதல், அத்துமீறி நுழைதல், நம்பிக்கை மோசடி ஆகியவற்றோடு வரும்போது அந்த செயல்களை பொறுத்தவரை குற்றவியல் தன்மை பெறுகின்றன.


குற்றவியல் வழக்குகளை பொறுத்தவரை அவை  இரண்டு தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையே ஏற்பட்டாலும் சமுதாயத்திற்கெதிராக ஏற்பட்டாலும் அவை அரசுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாக கருதப்படுவதுடன் காவல் துறையினரின் விசாரணை, கைது போன்றவற்றிற்கும் வழிவகுக்கின்றன.  


பொதுவாக அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, ஏமாற்றுதல், பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் போன்றவை குற்றவியல் வழக்குகளாக கருதப்படுகின்றன.


குற்றவியல் வழக்குகளை இரண்டு முக்கியப் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை நீதிமன்றத்தின் உத்தரவோ அனுமதியோ இன்றி காவல் துறையினர் தானாக விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் (Cognizable Offences),


 நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்கு(Non Cognizable Offences)களாகும்.


அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, வெட்டுகுத்து, பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு பங்கம் விளைத்தல் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடத்தல் போன்றவை காவல் துறையினர் தானாக விரைந்து செயல்பட வேண்டிய வழக்குகளாக இருப்பதால் அவை

நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளாக (Cognizable Offences) கருதப்படுகின்றன.


ஒருவர் இரண்டு திருமணங்கள் செய்துகொண்டார் என்ற குற்றச்சாட்டு, தன்மீது அவதூறு பரப்பிவிட்டார் என்ற குற்றச்சாட்டு, அஜாக்கிரதையாக காயம் ஏற்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு, பொய்யான ஆவணம் தயாரித்துவிட்டார் போன்ற குற்றச்சாட்டுகளில் காவல் துறையினரின் நடவடிக்கை தேவைப்படினும்  காவல் துறையினர் மிக அவசரமாக செயல்பட வேண்டிய அவசியமில்லாததாலும் அவற்றில் உரிமையியல் விசயங்கள் சற்றுக்கூடுதலாக கலந்திருப்பதாலும் அவை நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாக (Non Cognizable Offences)கருதப்படுகின்றன.


ஆனால் நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாக இருந்தாலும் ஒரே ஒரு வழக்கு நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்காக இருப்பினும் அவ்வழக்கு முழுமையுமே நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்காக கருதப்படும்.


எவையெல்லாம் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் எவையெல்லாம் நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகள்  என்று இந்திய தண்டனைச் சட்டத்தில் ஒவ்வொறு தண்டனைக்கு அருகிலும் கொடுக்கப்பட்டுள்ளது.


நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் குறித்து யாரேனும் காவல் துறையினருக்கு தகவல் தந்தாலோ அல்லது காவல் துறையினரின் நேரடி கவனத்திற்கு வந்தாலோ அதன் மீது விசாரணை நடத்துவது காவல் துறையினரின் கட்டாயமான கடமையாகும்.


 இதிலிருந்து தவறும் காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க காவல் துறையின் நிலையாணையின் (Police Standing Order) படியும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின்படியும் வழியுள்ளது.


எனவே நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் குறித்து தகவல் தெரிந்தால் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 154படி முதல் தகவல் அறிக்கை (First Information Report) பதிவுசெய்து விசாரிக்க வேண்டியது காவல் துறையினரின் கட்டாய கடமையாகும்.


அவ்வாறு காவல் துறையினர்  நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளில் முதல் தகவலறிக்கையை காவல் அதிகாரிகள் பதிவு செய்ய மறுத்தால் நடை முறை ரீதியில் எளிமையாக அதே புகாரை பதிவுத் தபாலில் அதே காவல் நிலையத்திற்கு அனுப்பி ஆதாரத்தை வைத்துக்கொண்டால் காவல் துறையினர்  தானாக வழக்கை பதிவுசெய்யவும், பாதிக்கப்பட்ட புகார்தாரர் பின்னாளில் நீதிமன்றத்தை அணுகவும் உதவியாக இருக்கும். 


மேலும் உடல் காயமடைந்த யாரேனும் ஒருவரின் புகாரை காவல் துறையினர்  பதிவுசெய்ய மறுத்தால் ஏதேனும் மருத்துவமனையில் அதுவும் இயன்றவரை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக காயத்திற்கான காரணத்தைச் சொல்லி சேர்ந்துகொண்டால் அங்கிருந்தே காவல் நிலையத்திற்கு தானாக தகவல் செல்லவும் அந்த மருத்துவமனைப்பதிவை புகார் பதிவிற்கு பயன்படுத்தவும் வாய்ப்புண்டு.


குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 154 (3) ன் கீழ் மாவட்ட கண்காணிப்பாளருக்கோ,  பெருநகரங்களில் காவல் துறை ஆணையாளருக்கோ பதிவு தபாலில் அனுப்பலாம். 


அவ்வாறு கிடைக்கப்பெற்ற புகாரை அத்தகைய அதிகாரி தானாக விசாரிக்கலாம் அல்லது தகுதியுடைய ஒரு காவல்துறை அதிகாரியை விசாரணை நடத்தவும் உத்தரவிடலாம்.


அவ்வாறும் புகாரானது பதிவு செய்யப்படாவிட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 156(3) ன் கீழ் அக்குற்றச்சாட்டு நடைபெற்ற எல்லையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம்.


 அப்புகாரில் உண்மை இருப்பதாக நீதித்துறை நடுவர் திருப்தி அடைந்தால், அவ்வழக்கை முதல் தகவலறிக்கை பதிவு செய்து விசாரிக்குமாறு சம்மந்தப்பட்ட காவல் துறையினருக்கு உத்தரவிடலாம்.


 அவ்வாறு உத்தரவிடப்பட்டால் காவல் துறையினர்  வழக்கை பதிவு செய்து விசாரிப்பதை தவிர வேறு வழியில்லை.  மேலும் வழக்கை பதிவுசெய்து விசாரிக்க ஆணையிட்ட நடுவர் நீதிமன்றம் வழக்கின் விசாரணையையும் மேற்பார்வையிடலாம்.


 இப்பிரிவின்கீழ் நீதித்துறை நடுவரின் அதிகாரத்தை சக்கிரியா வாசு எதிர் உ.பி அரசு,  டிவைன் ரெட்ரிட் எதிர் கேரள அரசு ஆகிய வழக்குகள் விரிவுபடுத்தியுள்ளன.


மேலும்  இப்பிரிவின் கீழ் ஒரு புகார்தாரர் நீதிமன்றத்தை அணுகும்போது குற்றம் சாட்டப்படுபவரை (Accused) நீதிமன்றம் விசாரிக்க வேண்டியதில்லையென்றும் அவ்வாறு நீதிமன்றத்தை அணுக குற்றம் சாட்டப்படுபவருக்கு எந்த உரிமையும் இல்லையென்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுகின்றன.



இருப்பினும் எந்திரகதியில் அதிகாரவரம்பில்லாமல் அவ்வாறு குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 156 (3) ன் கீழ் ஆணையிடப்பட்டால் அவ்வாணையையும் அவ்வாணையினால் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் குற்றவியல் சட்டப்பிரிவு 482 ன் கீழ் அவ்வாணையால் பாதிக்கப்பட்டவர் கேள்விக்குள்ளாக்கி நீக்கலாம் என குருதத் பிரபு மற்றும் பிறர் எதிர் எம். எஸ். கிருஸ்ணாபத் மற்றும் பிறர்  வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் வழக்கு குறிப்பிடுகின்றது.


எனினும் இப்பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமை குறித்து தெளிவான தீர்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. குற்றச்சாட்டை பதிவுசெய்வதில் உள்ள மற்றொரு முக்கியமான பிரிவுதான் தனிப்புகார் (Private Complaint) ஆகும். 


குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 200ன் கீழ் தொடுக்கப்படும் இப்புகார், பிரிவு 190(1) ன் கீழாக புலன்கொள்ளப்பட்டு முதலில் புகார்தாரர்  சத்தியபிரமானத்தின் மூலம் விசாரிக்கப்படுகிறார். 


 அவ்வாறு விசாரிக்கப்படும் போது  தேவைப்படின் சாட்சிகள் யாரேனும் இருந்தால் அவர்களையும் நீதித்துறை நடுவர் விசாரிக்கலாம்.  தேவைப்படின் பிரிவு 202ன் கீழ் காவல் துறை அதிகாரிகளையோ அல்லது தகுதியுள்ள பிறரையோ கூட விசாரிக்கலாம். 


 அவ்வாறு விசாரித்தபின் புகாரை விசாரிப்பதற்கு சாராம்சம் இல்லையென கருதினால் குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 203ன் கீழ் வழக்கை தள்ளுபடி செய்யலாம்.  மாறாக வழக்கை விசாரிக்க சாராம்சம் இருக்குமென கருதினால் குற்றம் சாட்டப்படுவருக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 204ன் கீழ் அழைப்பாணை அனுப்பி வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம்.



இதைப்போலவே நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளில் காவல் துறையினரை விசாரிக்க நீதித்துறை நடுவருக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 155(3) ன் கீழ் அதிகாரமுள்ளது. 


 அவ்வாறு நீதித்துறை நடுவரால் உத்தரவிடப்பட்டால் அவ்வழக்கை காவல் துறையினர்  நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குபோல் விசாரிக்கலாம். ஆனால் கைது செய்வது மட்டும் நீதிமன்ற ஆணையின்றி செய்ய இயலாது.



மேற்கண்ட முறைகளைவிட சற்று எளியதும் சற்று கூடுதல் ஆற்றலுடையுதுமான வழிதான் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளுக்கு உயர்நீதிமன்றத்தின் தன்னிச்சை அதிகார பிரிவான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482 ஆகும். 


 இப்பிரிவின் கீழ் பாதிக்கப்பட்ட நபர் தனது புகாரை காவல்துறையினர்  பதிவு செய்யவேண்டுமென்று கூறி நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறலாம். 


பிரிவு 482 குற்றவியல் வழக்குகளில் உயர்நீதிமன்றத்திற்கு உள்ள தன்னிச்சை அதிகாரத்தை வழங்குவதாலும் உயர்நீதிமன்றமே புகாரை பதிவு செய்ய ஆணையிடும்போது அதிலிருந்து தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போன்றவற்றை சந்திக்க வேண்டி வரும் என்பதாலும் இப்பிரிவின் முக்கியத்துவம் புகார்களை பதிய வைப்பதில் சற்று கூடுதலாகும்...


நன்றி....

**************************************

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻


⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்குப் பிறகு தனது சொத்தை எப்படி, யாருக்கு விநியோகிக்க விரும்புகிறார் என்பதைக் கூறும் சட்ட ஆவணமாகும். 


*சிக்கலைத் தவிர்க்க, உயிலை பதிவு செய்ய வேண்டும்*


⚖️ஒவ்வொருவரின் மூதாதையர் சொத்திலும் அவரது குழந்தைகள் மற்றும் அவரது மனைவி என அனைவருக்கும் சம உரிமை உண்டு. 


👨🏻‍⚖️அதாவது, ஒருவருக்கு 3 குழந்தைகள் இருந்து, அந்த குழந்தைகளுக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்திருந்தால், முதல் மூன்று குழந்தைகளுக்கு மட்டுமே மூதாதையர் சொத்து பங்கிடப்படும். 


👩🏻‍⚖️தந்தையின் பங்காக வந்த சொத்து, அந்த மூவரின் குழந்தைகளுக்கும் பிரித்துக் கொடுக்கப்படும். 


👍🏼சொத்தைப் பிரிப்பது தொடர்பாக வீடுகளில் அடிக்கடி தகராறு ஏற்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 


⚖️இந்த சர்ச்சைகளைத் தவிர்க்க சிலர் தங்களின் விருப்பத்தை உயில் எழுதி வைப்பார்கள்.


✍🏻அதாவது, ஒரு நபர் இறந்த பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே தனது சொத்து கிடைக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கு உயில் அவசியம். 


⚖️ *உயில் இல்லாமல் மரணம் ஏற்பட்டால், வாரிசு சட்டத்தின்படி சொத்து பிரிக்கப்படும்*


✍🏻எந்த விதமான பிரச்சனையோ அல்லது சர்ச்சையோ ஏற்படாமல் இருக்க, உயிலை பதிவு செய்வது அவசியம். 


👨🏻‍⚖️ஆனால், பதிவு செய்யப்பட்ட உயிலையும் நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது. 


👩🏻‍⚖️இதற்கான பதிலை நாங்கள் கூறுகிறோம்.


⚖️ *ஒரு பதிவு உயிலை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய முடியுமா*


👨🏻‍⚖️தொடர்புடைய செய்திகள்

தந்தை உயில் எழுதாத நிலையில் 


👩🏻‍⚖️திருமணமான பெண்ணுக்கு சொத்தில் பங்கு உண்டா?


✍🏻12 ஆண்டுக்குள் இதை செய்யலனா, சொத்து அவ்ளோதான்!


🧐தந்தை உயில் எழுதாதநிலையில் திருமணமான பெண்ணுக்கு சொத்தில் பங்கு உண்டா?


🫡எந்த ஒரு விருப்பத்தையும் நீதிமன்றத்தில் வழக்காடலாம் என்பது முற்றிலும் சரியானது. 


⚖️இதில், குறைபாடு இருந்தால் இதைச் செய்யலாம். 


👨🏻‍⚖️பதிவு செய்தாலும், செய்யாவிட்டாலும். இதற்கு பல அடிப்படை வழக்கங்கள் உள்ளன. 


⚖️எவ்வாறாயினும், நீதிமன்றத்தில் உயிலை சவாலுக்கு உட்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக, இந்திய வாரிசுச் சட்டம், 1925 இன் விதிகளின்படி அதை நிறைவேற்றுவது உறுதி செய்யப்பட வேண்டும்.


⚖️ *சட்டம் என்ன சொல்கிறது*


👩🏻‍⚖️ஒரு பெண் தன் பெற்றோரிடமிருந்து பரம்பரைச் சொத்தைப் பெற்றாள் என்று வைத்துக் கொள்வோம். 


👨🏻‍⚖️நான்கு மகன்களில் ஒருவருக்கு ஆதரவாக அந்த பெண் உயில் எழுதியுள்ளார். 


👩🏻‍⚖️இப்போது அந்த பெண் உயிருடன் இல்லை. 


👩🏻‍⚖️அந்த பெண் இறந்த பிறகு, மீதமுள்ள 3 சகோதரர்களுக்கு உயில் விஷயம் தெரிய வந்தது. 


👨🏻‍⚖️அந்த மூன்று சகோதரர்களுக்கும் தெரியாமல் ஏற்கனவே உயில் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. 


⚖️அந்த உயிலில் குறிப்பிடப்படாத 3 சகோதரர்கள் விருப்பத்தை சவால் செய்ய முடியுமா?…


✍🏻ஆம், உயிலின் செல்லுபடியையும், உண்மைத்தன்மையும் எப்போதும் சவால் செய்யப்படலாம். 


👨🏻‍⚖️சட்டப்பூர்வமாக (உங்கள் சகோதரர்) அவரது பெயருக்கு ஆவணம்/உயிலை மாற்றுவதற்கு தகுதியான வழக்கைத் தாக்கல் செய்யும் போது நீங்கள் நீதிமன்றத்தில் உங்கள் விருப்பத்தை சவால் செய்யலாம். 


⚖️பொருத்தமான நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய உங்களுக்கு உரிமை உள்ளது.


👩🏻‍⚖️உங்கள் குடும்பத்தில் நான்கு சகோதரர்கள் இருந்தால், உங்கள் தாயார் இறந்த பிறகு, அவர்களில் ஒருவர் உயில் ஆவணங்களில் போலி கையெழுத்துப் போட்டிருந்தால், அந்த உயிலை நீதிமன்றத்தில் நீங்கள் சவால் செய்யலாம். 


👨🏻‍⚖️ஆனால் இதற்காக நீங்கள் ஒரு அனுபவமிக்க வழக்கறிஞரின் உதவியை நாட வேண்டும். 


👩🏻‍⚖️ஏனென்றால், அவர் மட்டுமே இதுபோன்ற விஷயங்களில் உங்களுக்கு உதவ முடியும்.


👨🏻‍⚖️உயிலைப் பதிவு செய்வதால் அது அதற்கான ஆவணங்கள் அதில் பிணைக்கப்பட்டிருக்காது. 


⚖️இது எப்போதும் நீதிமன்றத்தின் முன் சவால் செய்யப்படலாம். 


✍🏻பதிவு செய்யப்பட்ட உயில் இறந்தவரின் கடைசி உயில் என்பதும் அவசியமில்லை. 


⚖️ஒரு புதிய பதிவு செய்யப்படாத கோயிலாக கூட இருக்கலாம்.


⚖️ *நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கான காரணங்கள்*


✍🏻ஒரு நபர் உயில் எழுதுவதில் ஏமாற்றப்பட்டால், அதை நீதிமன்றத்தில் சவால் செய்யலாம். 


👩🏻‍⚖️அத்தகைய உயிலானது சோதனையாளரின் இலவச ஒப்புதலுடன் செய்யப்பட்டதாகக் கருதப்படாது மற்றும் அந்த உயில் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படலாம். 


👨🏻‍⚖️உங்களுக்கு எதிராக துன்புறுத்தல் அல்லது அச்சுறுத்தல் மூலம் உயில் செய்யப்பட்டால், அத்தகைய உயில் செல்லாது, அதுவும் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படலாம். 


⚖️சட்டப்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீது மட்டுமே உயில் எழுத முடியும். 


✍🏻பெரியவர்களுக்கு உயில் செய்யும் திறன் இருப்பதாக நம்பப்படுகிறது. ஒருவரின் மனநிலையை வைத்தும் உயில் மீது வழக்கு தொடுக்கலாம்.


1 முதல் தமிழர்

 நவதானியங்கள் ஒன்பது என நிர்மானித்த தமிழன் திசைகளை எட்டாகப் பிரித்தான்....


கிழக்கு

மேற்கு

வடக்கு

தெற்கு

வட கிழக்கு

வட மேற்கு

தென் கிழக்கு

தென் மேற்கு


திசையை எட்டாகப் பிரித்த தமிழன் 

இசையை ஏழாகக் கொடுத்தான்... 


ச ரி க ம ப த நி


இசையை ஏழாக கொடுத்த தமிழன் 

சுவையை ஆறாக பிரித்தான்... 


இனிப்பு

கசப்பு

கார்ப்பு

புளிப்பு 

உவர்ப்பு

துவர்ப்பு


சுவையை ஆறாக பிரித்த தமிழன் 

நிலத்தை ஐந்தாக பிரித்தான்... 


குறிஞ்சி  (மலைப்பகுதி) 

முல்லை   ( வனப்பகுதி) 

நெய்தல்  ( கடல் பகுதி) 

மருதம்      ( நீர் மற்றும் நிலம்) 

பாலை      ( வறண்ட பகுதி) 


நிலத்தை ஐந்தாக பிரித்த தமிழன்

காற்றை நான்காக பிரித்தான்... 


தென்றல்

வாடை 

கோடை 

கொண்டல்


கிழக்கிலிருந்து வீசும் காற்று

கொண்டல் 


தெற்கிலிருந்து வீசும் காற்று

தென்றல்


மேற்கிலிருந்து வீசும் காற்று

கோடை 


வடக்கிலிருந்து வீசும் காற்று

வாடை


காற்றை நான்காக பிரித்த தமிழன்

மொழியை மூன்றாக பிரித்தான்... 


இயல் ( இயற் தமிழ் ) 

இசை  ( இசைத்தமிழ்) 

நாடகம் ( நாடகத்தமிழ்) 


இம்மூன்றும் தமிழுக்கு இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்து கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது... 


இம்மூன்று மொழிகளுக்கும் தமிழர்கள் கொடுத்த முக்கியத்துவத்தையும் முத்தமிழ் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது... 


மொழியை மூன்றாக பிரித்த தமிழன்

வாழ்க்கையை இரண்டாக வகுத்தான்... 


அகம் 

புறம் 


கணவன் மனைவி வாழும் வாழ்க்கை

அக வாழ்க்கை... 


வெளியில் இருக்கும் வியாபாரம் மற்றும் சுய ஒழுக்கம் எல்லாம் 

புற வாழ்க்கை... 


வாழ்க்கையை இரண்டாக வகுத்த தமிழன்... 

ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான்... 


ஒழுக்கத்தை ஒன்றாக வைத்தான் 

அதை... 

உயிரினும் மேலாக வைத்தான்... 


இதைத்தான் அய்யன் வள்ளுவர் இரண்டு அடியில் அழகாகச் சொன்னார்... 

"ஒழுக்கம் விழுப்பந் தரலான் 

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்


பார்த்தேன்,

படித்தேன் 

ரசித்தேன் 

பகிர்ந்தேன்

புகார் அளித்த

 பாதிக்கப்பட்டோர்  போலீசில் புகார் அளித்த பிறகு நாம் என்ன செய்ய வேண்டும்?


இந்தியாவில் போலீசில் புகாரை பதிவு செய்த பிறகு, விஷயம் சரியாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், மேலும் வழக்கு விசாரணையை நோக்கி முன்னேற்றம் அடைய நீங்கள் செய்ய வேண்டிய செயல்கள் சிலவற்றை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.


பொருளடக்கம் :


காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு CSR பெறவும்.

எப்ஐஆரின் நகலைப் பெறுங்கள்.

பின் தொடர்தல்.


விசாரணை அதிகாரியை (IO) தொடர்பு கொள்ளவும்.

பதிவுகளை பராமரிக்கவும்.

கூடுதல் தகவலை வழங்கவும்.

சட்ட ஆலோசனை பெறவும்.

தேவைப்பட்டால் மேலதிகாரியை தொடர்புகொள்ளவும்.


சாட்சி பாதுகாப்பு பெறுங்கள்.

தேவையான தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள்.

வழக்கில் பொறுமையாகவும் விடாப்பிடியாகவும் இருங்கள்.


காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு CSR பெறவும்:

குற்றத்திற்காக காவல் நிலையத்தில் புகார் அளித்தால், காவல் அதிகாரி புகாரைப் பெற்று, பதிவு செய்து, CSR வழங்குவார்.


அவர் CSR கொடுக்கவில்லை என்றால், புகாரை ஏற்றுக்கொண்டதற்கான ஆதாரமாக CSR ஐ கொடுக்க போலீஸ் அதிகாரியிடம் கேளுங்கள். இந்த CSR இன் முழுப் பெயர் சமூக சேவைப் பதிவேடு என்பதாகும்.


எப்ஐஆரின் நகலைப் பெறுங்கள்:


புகாருக்குப் பிறகு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டால், எஃப்ஐஆர் எண் மற்றும் விவரங்களுடன் முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆர்) நகலைப் பெறுவதை உறுதிசெய்யவும். 


புகார் பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரமாக இது செயல்படுவதால் இது அவசியம்.


பின் தொடர்தல்:


உங்கள் வழக்கின் முன்னேற்றத்தை சரிபார்க்க காவல் நிலையத்தைத் தொடர்ந்து பின்தொடரவும். புதுப்பிப்புகளைப் பற்றி விசாரிக்க நீங்கள் நிலையத்திற்குச் செல்லலாம் அல்லது அவர்களை அழைக்கலாம்.


விசாரணை அதிகாரியை (IO) தொடர்பு கொள்ளவும்:


உங்கள் வழக்கின் விசாரணை அதிகாரியாக யார் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டறியவும். விசாரணையின் நிலை குறித்து தொடர்ந்து அறிய அவர்களுடன் தொடர்பைப் பேணுங்கள்.


பதிவுகளை பராமரிக்கவும்:


எஃப்.ஐ.ஆரின் நகல், காவல்துறையுடனான ஏதேனும் கடிதம் மற்றும் அதிகாரிகளுடனான உரையாடல்களின் குறிப்புகள் உட்பட வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வைத்திருங்கள்.


கூடுதல் தகவலை வழங்கவும்:


உங்கள் வழக்கு தொடர்பான புதிய ஆதாரங்கள் அல்லது தகவல் ஏதேனும் இருந்தால், உடனடியாக IO-க்கு தெரிவிக்கவும்.


சட்ட ஆலோசனை பெறவும்:


உங்கள் உரிமைகள் மற்றும் சட்டப்பூர்வ செயல்முறைகளைப் புரிந்து கொள்ள ஒரு வழக்கறிஞருடன் கலந்தாலோசிக்கவும். உங்கள் வழக்கு சரியாக கையாளப்படுவதை உறுதிசெய்ய இது உதவும்.


தேவைப்பட்டால் மேலதிகாரியை தொடர்புகொள்ளவும் :


விசாரணை முன்னேறவில்லை அல்லது காவல்துறை பதிலளிக்கவில்லை என நீங்கள் உணர்ந்தால், நீங்கள் விஷயத்தை அதிகரிக்கலாம். காவல் துறையின் உயர் அதிகாரிகளான காவல்துறை கண்காணிப்பாளர் (SP) அல்லது ஆணையர் போன்றவர்களை நீங்கள் அணுகலாம்.



மாவட்ட மாஜிஸ்திரேட் அல்லது மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளிக்கவும்.


ரிட் மனு அல்லது பொதுநல வழக்கு (பிஐஎல்) மூலம் தலையீடு செய்ய நேரடியாக நீதிமன்றத்தை அணுகவும்.


சாட்சி பாதுகாப்பு பெறுங்கள் :


நீங்கள் அல்லது ஏதேனும் சாட்சிகள் அச்சுறுத்தல்கள் அல்லது துன்புறுத்தல்களை எதிர்கொண்டால், உடனடியாக போலீசாருக்குத் தெரிவித்து பாதுகாப்பைக் கோருங்கள்.  


தேவையான தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள் :


வழக்கு தொடர்பாக நீங்கள் பெறக்கூடிய சட்ட அறிவிப்புகள் அல்லது சம்மன்கள் குறித்து உடனுக்குடன் வைத்திருங்கள். தேவைப்படும் நீதிமன்ற விசாரணைகளில் நீங்கள் கலந்துகொள்வதை உறுதிசெய்யவும்.


வழக்கில் பொறுமையாகவும் விடாப்பிடியாகவும் இருங்கள்:


சட்ட நடவடிக்கைகள் நீண்டதாக இருக்கலாம் மற்றும் பொறுமை தேவை. உங்கள் பின்தொடர்தல்களில் விடாமுயற்சியுடன் இருங்கள் மற்றும் உங்கள் வழக்கு புறக்கணிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.


இந்தப் படிகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் புகார் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படுவதையும், விசாரணை முறையாக நடத்தப்படுவதையும் உறுதிசெய்ய உதவலாம்.


பேரூராட்சி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளின் விபரம் :*

 *பேரூராட்சி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளின் விபரம் :* 

1. வருகைப் பதிவேடு

2. நாளேடு (Day Book)

3. (Journal Ledger)

4. முன்பணப் பதிவேடு (Advance Register)

5. வைப்பு பதிவேடு (Deposit Register)

6. இருப்பு பதிவேடு (Stock Register/ Priced Store Ledger) (தெருவிளக்கு)

7. குடிநீர் உதிரி பாகங்கள் இருப்பு பதிவேடு

8. பொது சுகாதார பொருட்கள் இருப்பு பதிவேடு

9. இருப்பு பதிவேடு (வேலைகள்) (Price Store Ledger for Steel/ Cement/Bitumen etc)

10. ஒப்பந்தக்காரர்கள் பதிவேடு

11. சொத்துவரி நிர்ணய பதிவேடு

12. சொத்துவரி கேட்பு பதிவேடு (நடப்பு மற்றும் நிலுவை)

13. தொழில்வரி கேட்பு பதிவேடு (நடப்பு மற்றும் நிலுவை)

14. குடிநீர் கட்டணம் கேட்பு பதிவேடு (நடப்பு மற்றும் நிலுவை)

15. பல்வகை வரவுகள் கேட்பு பதிவேடு (M.D.R)

16. வரிமறு நிர்ணய மனு பதிவேடு (Revision Petition Register)

17. கட்டிட உரிமம் வழங்கும் பதிவேடு

18. மனைபிரிவு பதிவேடு (Register of Layout)

(19.) காலிமனை வரி கேட்பு பதிவேடு

20. தீர்மான புத்தகம்

21. பிறப்பு - இறப்பு சான்று வழங்கும் பதிவேடு

22. பணமதிப்பு படிவங்கள் பதிவேடு (Money Value Forms Register)

23. திட்டப் பேரேடு (Project Ledger)


கூடலூர் நுகர்வோர் மனிதவள

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம்

மனித உரிமைகள் ஆணையத்துக்கு மனு

 *நீதிமன்றங்கள் காவல் நிலையங்கள் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் அரசு அதிகாரிகளால் செய்யப்படுகின்ற மனித உரிமை மீறல் தொடர்பாக மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அளிக்க புகார் மனு மாடல் இது இதுபோல பாதிக்கப்பட்டு இருப்போர் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.*


 *"ஒப்புதலுடன் இணைந்த பதிவஞ்சல்"*


*அனுப்புநர் :

.................................... , வயது...............,

த / பெ............................ ,

.......................................

..........................................

..........................................

 செல் :............................. 


 *பெறுநர் :  *உயர்திரு.தலைவர் அவர்கள் ,*

*மாநில மனித உரிமை ஆணையம் , திருவரங்கம்* *மாளிகை , 143.பி.எஸ் . குமாரசாமி ராஜா சாலை ,*

*கிரீன் வேய்ஸ் சாலை, சென்னை- 600028.*


 *எதிர்மனுதாரர் :*


 1.............................

..................................


 *மதிப்பிற்குரிய ஐயா ,*


*பொருள் : மனித உரிமை பாதுகாப்பு சட்டம் 1993  இன் 2(4) வது பிரிவுப்படி மனித உரிமைகள் மீறல் தொடர்பாக முறையீடு.*


*1.மனு தாராகிய நான்...........................  மாவட்டம்,...................... ........... வட்டம்,.............................. கிராமம்,   .............................................................. தெரு, .......................... கதவு எண் என்ற முகவரியில் குடியிருந்து வரும்............................................... என்பவரின் மகன்...........................................................ஆகிய வயது............................ ஆகிய நான் அகத்தூய்மையோடும்/ உளப்பூர்வமாகவும் /எவ்வித உள்நோக்கமும் இன்றியும் வழங்கும் (அபிடவிட்டு) சத்தியபிரமாணம் யாதெனில்.....*


*2) கடந்த...........................  தேதியன்று........................................... காவல் நிலையத்திற்கு/....................................... மாவட்ட ஆட்ச்சியர் அலுவலகம் /............................................... அலுவலகத்தில் மனுச் செய்ய சென்றபோது................................................... என்ற பதவியில் உள்ள திரு....................................  என்பவர் ஒருமையில் பேசியும் செய்ய வேண்டிய வேலையை செய்யாமலும் செய்யக்கூடாததை செய்தும் இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் 2 மற்றும் 3வது பிரிவுக்கு முரணாக அதிகார துஷ்பிரயோகம் ஆக  செயல்பட்டு வருகிறார்.  இது பொது மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை செய்ய தவறிய தாகவும்/ மனித உரிமை மீறல் குற்றத்தை பகிரங்கமாகவும் செய்துள்ளார் இதற்கு சாட்சிகள் உள்ளது.*


*3)மேற்காணும் மனித உரிமை மீறல் காரணமாக மிகுந்த மன உளைச்சல் அடைந்து கடந்த............................... தேதியில் அரசு /தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக/ வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறேன். மேலும் மேற்காணும் மனித உரிமை மீறல்களை இதே அலுவலகத்தில் தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றனர் இவற்றை என்னால் நிரூபிக்க முடியும்.*


*4.ஆகையால் அருள்கூர்ந்து இம்மனுவையே மனித உரிமை பாதுகாப்பு சட்டம் 1993 இன் பிரிவு 24 இல் வகுத்துரைத்துள்ளபடிக்கு மனித உரிமை மீறலுக்கான புகார் மனுவாக ஏற்றுக் கொண்டு மாநில மனித உரிமைகள் ஆணைய விதிகள் - 1997 இன் 25வது வெளியீட்டில் வகுத்துரைக்கப்பட்டவாறு மாண்பமை மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பாக பார்வையில் காணும் வழக்கு தொடர்பான சாட்சியங்களை விசாரிக்க வாய்ப்பு வழங்கி மனித உரிமை பாதுகாப்புக்கான நீதி நடவடிக்கை மேற்கொள்ள ஆவண செய்ய வேணுமாய் மனுதாரால் மிகவும் பணிவோடு பிரார்த்திக்கப்படுகிறது.*

*மனுதார்.*


*தேதி:*_______

*இடம்:*_______


*இம்மனு நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் - 1872 இன் 70வது பிரிவு படி இதையே பிரமாணமாக இதில் ........................... தேதியன்று என்னால் எனது இல்லத்தில் வைத்து கையொப்பம் செய்யப்படுகிறது.*

லீகல் நோட்டீஸ் : வக்கீல் தேவையில்லை*


*லீகல் நோட்டீஸ் : வக்கீல் தேவையில்லை* 


பொதுவாக லீகல் நோட்டீஸ் என்றாலே, அது வக்கீல் மூலமாக அனுப்பப்படும் நோட்டீஸ் என்றே நாம் நினைக்கிறோம். அது தவறு. அதாவது எதிர் தரப்பினர் மீது, அவரது செயலுக்கு எதிப்பு தெரிவித்து எடுக்கப்படக்கூடிய சட்ட நடவடிக்கை பற்றிய அறிவிப்பு கடிதம் தான் அது. அதை நாமே அனுப்பலாம். நமக்கு அது பற்றிய விபரம் தெரியாத பட்சத்தில், வழக்கறிஞர் மூலமாக அனுப்பவேண்டும்.


நமது நாட்டு சட்டப்படி, வழ்க்கு தொடுப்பவர் ( Petitioner / Complainant) மற்றும் எதிர் தரப்பினர் ( Opposite Party ) -தான் வழக்கு நடவடிக்கையில் நேரடியாக ப்ங்கேற்க வேண்டும். அது சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் உரிமை. இதில் வழ்க்கு தொடுப்பவருக்கோ அல்லது எதிர் தரப்பினருக்கோ போதுமான சட்ட அறிவு இல்லாத நிலையில் வழ்க்கறிஞர் மூலமாக செய்ய வேண்டும்.


பொதுவாக லீகல் நோட்டீஸ் என்பது, நாம் அனுப்பும் நோட்டீஸ் மற்றும் வழக்கறிஞர் மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ் , இவை இரண்டையுமே குறிப்பிடும் சொல்லாகும். வழக்கறிஞர் மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ் அட்வகேட் நோட்டீஸ் / லாயர் நோட்டீஸ் ஆகும்.


 *லீகல் நோட்டிஸ் தயாரிப்பது எப்படி?* 


உதாரணத்திற்கு நீங்கள் ஒரு வாஷிங் மிஷின் வாங்கியிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அத்ற்கு ஒரு வருட உத்திரவாதம் உற்பத்தியாளரால் வழ்ங்கப்பட்டுள்ளது என வைத்துக்கொள்வோம். வாங்கிய ஒரு சில நாட்களி லேயே அது பழுதடைந்து விடுகிறது. நீங்கள் எந்த கடைக்காரரிடம் வாங்கினீர்களோ, அவரிடம் புகார் செய்கிறீர்கள். அவர் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் டீலராக இருந்தால் அவரே பழுது பார்த்து கொடுப்பார். அப்படி இல்லை என்றால் கம்பெனியின் சர்வீஸ் செண்டர் முகவரியை தருவார். அங்கு புகார் செய்கிறீர்கள். அவர்கள் பழுது பார்த்து த்ருகிறார்கள். மறுபடியும் குறுகிய காலத்தில் பழுது ஏற்படுகிறது. மீண்டும் பழுது பார்க்கப்படுகிறது. பழுதடைவது தொடர்கிறது . இதனால், உங்களால் தொடர்ச்சியாக மிஷினை பயன்படுத்தாத நிலை. இந்நிலை யில், உங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பொருள் தரம் குறைந்தது அல்லது உற்பத்தியில் குறைபாடுள்ள பொருள் (Manufacturing Defect) என கருதுகிறீர்கள். அதனால் அந்த மிஷினுக்கு பதில் வேறு மிஷின் தருமாறு கேட்க்கிறீகள். கம்பெனிக்கரர்கள் அவ்விதம் செய்ய மறுக்கிறார்கள். அதனால் கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு தொடர போகிறீர்கள். இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது என்ன? அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.


இந்த விஷயத்தில், விற்பனையாளரை பொறுத்த வரையில் அவர் மீது எவ்வித தவறும் கிடையாது. எனவே வழக்கில் அவரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. சேர்த்தாலும் தவறு கிடையாது.


லீகல் நோட்டீஸ்


BY REGISTERD POST WITH A/D, OR BY FAX OR E-MAIL


அனுப்புநர்: ( இது உங்கள் முகவரி)



பெறுநர்:


அங்கீகரிக்கப்பட்ட டீலர் முகவரி


சட்ட பூர்வ அறிவிப்பு.


தங்கள் நிறுவன தயாரிப்பாகிய LG FAWM -9987 மாடல் வாஷிங் மெஷின் ஒன்றை ( *டீலர் / விற்பனையாளர் முகவரி* ) என்ற் டீலரிடம் / விற்பனையாளரிடம்  5-6-2009 ல் வாங்கியுள்ளேன். பில் நம்ம்பர். 5678 / 5-6-2009. மேற்படி மிஷின் இரண்டு மாத காலத்தில் மூன்று முறை பழுது ஏற்பட்டு, தங்கள் சர்வீஸ் செண்டரால் சரி செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


1. 25-6-2009 - சர்வீஸ் கால் நம்பர்: CHN 5660

2. 15 -7-2009 - சர்வீஸ் கால் நம்பர்: CHN 9078

3. 10-8-2009 - சர்வீஸ் கால் நம்பர்: CHN 10233

இதனால் என்னால் தொடர்ந்து உபயோகிக்க இயலவில்லை. இவ்விதம் அடிக்கடி பழுது ஏற்பட காரணம், எனக்கு விற்பனை செய்யப்பட்ட மெஷின் உற்பத்தி குறைபாடான ஒன்றாகும். எனவே உடனடியாக மேற்படி மெஷினுக்கு பதில், வேறு ஒரு மெஷின் மாற்றித்தரும்படி தங்களிடம் கூறியதற்கு மறுத்து விட்டீர்கள்.


எனவே, மேற்படி மெஷினை மாற்றி தர வேண்டும் என, தங்கள் நிறுவன்த்தின் மீது மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். இதில் தங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்குமானால் , இந்த நோட்டீஸ் கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும். அவ்விதம் தெரியப்படுத்தாத பட்சத்தில், மேற்படி குற்றசாட்டை ஒப்புக்கொள்வதாகவும் ஆனால் பிரசனையை சுமுகமாக தீர்க்க விரும்பவில்லை எனவும் முடிவு செய்து, முறைப்படி வழக்கு தாக்கல் செய்யப்படும் என்ற விபரம் இதன் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.


இப்படிக்கு



( கையொப்பம்)

(பெயர்)

நாள்:----------------... https://kutumbapp.page.link/WsLnZndaKs95L8GN8

நீதிமன்றம் சாட்சிகளின் வகைபாடு*

 *நீதிமன்றம் சாட்சிகளின் வகைபாடு*


*1. பொய் சாட்சி (Lying Witness) .*


*2. அதிகம் பேசும் சாட்சி ( Flippant Witness).*


*3. பிடிவாதம் பிடிக்கும் சாட்சி (Dogged Witness).*


*4. தயக்கம் காட்டும் சாட்சி ( Hesitation Witness).*


*5. பயத்தால் உடல் நடுங்கும் சாட்சி( Nervous Witness) .*


*6.சிரிப்பூட்டுகின்ற சாட்சி ( Humorous Witness).*


*7. வஞ்சகச் சாட்சி ( Cunning Witness).*


*8. கபட சாட்சி ( Canting hypocrite).*


*9. பாதி உண்மையும் பாதி பொய்யும் சொல்லும் சாட்சி (The Witness Who Speaks partly true and partly false).*


*10. தொழில் வழியான சாட்சி.( Professional Witness).*


*11.அலுவல் சார்ந்த சாட்சி . (Official Witness).*


*12. காவல்துறை சாட்சி. (Police Witness).*


*13. மருத்துவ சாட்சி.( Medical Witness).*


*14. நாகரீகமான சாட்சி ( Cultural Witness).*


*15. நேர்மையான சாட்சி. ( Honest Witness).*


*16. தனிப்பட்ட சாட்சி.(Independent Witness).*


*17. பெண் சாட்சி.(Women Witness).*


*18. குழந்தை சாட்சி. (Child Witness).*


*19. அயலிடவாத சாட்சி.(Alibi Witness).*


*20.நேரில் பார்த்த சாட்சி.( Eye Witness).*


*21. கல்வி அறிவில்லாத சாட்சி.(illiterate Witness).*


*22. உறவு நிலை சாட்சி ( Relation Witness)*


*23. தற்செயலாக பார்த்த சாட்சி . (Chance Witness).*


*24. பிறழ் சாட்சி . (Hostile Witness).*


*25. குற்றமேற்ற சாட்சி.(Approver Witness).*


*26.காவல்துறையினரால் தயாரிக்கப்பட்ட சாட்சி (Trap *Witness).*

பட்டா தொடர்பான தகவல்கள்..!

 பட்டா தொடர்பான தகவல்கள்..!


பட்டா வேண்டி பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர் உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும் உட் பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது.


அதேபோல் UDR பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது.


பட்டா மாற்றம்.


பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது.


1. நிலச் சொந்தக்காரர்கள் தாமே மேற்கொள்ளும் நடவடிக்கை (உரிமையை தாமே மாற்றுவது)


2. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலோ அல்லது வருவாய்த்துறையினர் மேற்கொள்ளும் விற்பனையின் மூலமான நடவடிக்கை கட்டாய உரிமை மாற்றம்.


3. ஒருவருக்கு பின் ஒருவர் என்ற வாரிசுரிமை மூலமான அடிப்படையில் வாரிசுரிமை மாற்றம்.


தமிழ்நாட்டில் பொதுமக்கள் பட்டா பெறுவதற்கும் பட்டா மாற்றம் செய்வதற்கும் தமிழக அரசு சட்டங்களையும் விதிமுறைகளையும் உருவாக்கியுள்ளது அதில் சில முக்கியமான பகுதிகளை நாம் அறிந்து கொண்டால் பட்டா பெறுவதும் பட்டா மாற்றம் செய்வதும் எளிதாகிவிடும்.


1983ஆம் ஆண்டு தமிழ்நாடு

பட்டாப்பதிவு புத்தக சட்டம்.


பிரிவு 3(1) - தாசில்தார் ஒவ்வொரு நில உடமையாளருக்கும் அவர் சொந்தமாக வைத்திருக்கும் நிலத்தை பொருத்து அவர் விண்ணப்பத்தின் பேரில் பட்டா பதிவு புத்தகம் ஒன்றை வழங்க வேண்டும்


பிரிவு 3(7) - தாசில்தார் பட்டா மாற்றம் செய்வதற்கு முன் நிலத்தில் அக்கறை கொண்டுள்ளவர்களுக்கு நியாயமானதொரு வாய்ப்பினை கொடுக்க வேண்டும்


பிரிவு 3(9) - பட்டா பதிவு புத்தகத்தில் அடங்கியுள்ள பதிவுகள் விவரங்கள் ஆகியவற்றுக்காக ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் பட்டா பதிவு புத்தக பதிவேடு பராமரிக்கப்பட்டு வர வேண்டும்


பிரிவு 3(10) - உரிய கட்டணங்கள் செலுத்தப்படுவதன் பேரில் நில உடமையாளருக்கு பட்டா பதிவு புத்தகம் வழங்கப்பட வேண்டும்.


பிரிவு 10 - பட்டாவில் மாற்றம் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் முதலில் மனுவை தாசில்தாரிடம் தான் கொடுக்க வேண்டும் தாசில்தாரே முதன்மை அதிகாரி ஆவார்.


பிரிவு 12 - தாசில்தார் உத்தரவின் மீது வருவாய் கோட்டாட்சியரிடம் முதல் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும்


பிரிவு 13 - வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை எதிர்த்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்


1987ஆம் ஆண்டு தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள்:


விதி 3(1) - தாசில்தார் சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்களை பொருத்தமட்டில் ஒவ்வொரு உரிமையாளருக்கும் இந்த சட்டத்தின் கீழ் பட்டா விவரக்குறிப்பு புத்தகம் வழங்கப்படவுள்ளது என அறிவிப்பு வெளியிட்டு சம்பந்தப்பட்ட கிராமத்தில் தண்டோரா போட்டு அறிவிக்க வேண்டும்


விதி 7 - பட்டா உரிமை புத்தகங்களுக்கான கட்டணம் ரூ. 20 /- ஆகும்


விதி 13 - இந்த சட்டத்தின் கீழ் பட்டா பதிவு புத்தகத்தில் யாருடைய உரிமைகள் அல்லது பற்றுகள் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதோ அல்லது பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த நபர் தாசில்தார் கேட்டுக் கொள்வதன் பேரில் தாசில்தாரின் ஆய்வுக்காக இச்சட்டத்தின் யாதொரு நோக்கத்திற்காக விவரங்களையும் ஆவணங்களையும் 15 நாள் கால அவகாசத்திற்குள் தாசில்தாருக்கு அளிக்க வேண்டும்


விதி 14 - இச்சட்டத்தின் கீழ் தாசில்தார் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிராக 30 நாட்களுக்குள் வருவாய் கோட்டாட்சியரிடம் முதல் மேல்முறையீடு செய்து கொள்ள வேண்டும்


விதி 15(1) - தாசில்தார் அல்லது வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை திருத்தியமைக்க வேண்டும் என்று கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் சீராய்வு மனு தாக்கல் செய்து கொள்ள வேண்டும்


விதி 15(2) - மேற்சொன்ன கால அளவிற்குள் அந்த மனுவை மனுதாரர் தாக்கல் செய்ய முடியாமல் போனதற்கு நியாயமான போதுமான காரணம் உள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் கருதினால் விதி 15(1) ல் கூறப்பட்டுள்ள கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் உத்தரவை திருத்தியமைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொள்ளலாம்


ஆட்சேபனைகளை எப்படி தாக்கல் செய்ய வேண்டும்?


1. தாசில்தாரின் பட்டா மாற்றம் இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்புகள் 14 மற்றும் 21 ல் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணானது


2. இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்புகள் 14 மற்றும் 21 ல் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி பட்டா மாற்றம் செய்வதற்கு முன் ஏற்கனவே கூட்டுப்பட்டாவில் உள்ள எனக்கு நீதிக்குட்பட்டு அறிவிப்பு கொடுக்காமலும் வாய்ப்பு அளிக்காமலும் என் தரப்பு வாதத்தை கேட்காமலும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது சட்டப்படி தவறாகும்


3. இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்பு 375 ன்படி தாசில்தார் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளவற்றை மதித்து நடக்கவில்லை


4. வருவாய் நிலை ஆணை எண் 31 ஐ பின்பற்றி பட்டா மாற்றம் செய்யப்படவில்லை


5. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 மற்றும் தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள் 1987 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை தாசில்தார் கடைபிடிக்கவில்லை


6. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 ன் பிரிவு 3(7) ன்படி நிலத்தில் அக்கறை கொண்டுள்ள எனக்கு முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை. அறிவிப்பு ஏதும் கொடுக்கப்படவில்லை


7. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 ன் பிரிவு 7 ல் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை தாசில்தார் பின்பற்றவில்லை


8. தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள் 1987 ன் விதி 3 ன்படி சம்பந்தப்பட்ட கிராமத்தில் பட்டா மாற்றம் குறித்து அறிவிப்பு செய்யப்பட்டு தண்டோரா போடப்படவில்லை


9. VAO வருவாய் நிலை ஆணை மற்றும் கிராம நிர்வாக நடைமுறை நூல் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை மீறி சட்ட விரோதமாக பட்டா மாற்றம் செய்ய பரிந்துரை செய்துள்ளார்.


10. இயற்கை நீதிக்கு புறம்பாகவும், சட்ட விரோதமாகவும் பட்டா மாற்றம் தாசில்தாரரால் செய்யப்பட்டுள்ளது.

ஊராட்சி நிர்வாகம்* ...! *கேள்விகளும்* *பதில்களும்* ...!

  *ஊராட்சி நிர்வாகம்* ...! 


 *கேள்விகளும்* *பதில்களும்* ...! 




 *வசூலிக்கப்படும் வரிகளின் விவரங்கள்* ...!




1. வீட்டு வரி


2. குடிநீர் வரி


3. தொழில் வரி 


4. விளம்பர வரி




 *ஊராட்சியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் என்னென்ன* ?




சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன. குறிப்பாக, வரிகள், வரவு - செலவு கணக்கு, சொத்து பதிவேடு, ரொக்க புத்தகம், மானிய பதிவேடுகள், நலத்திட்டப் பதிவேடுகள், ஊராட்சி வளர்ச்சி திட்டம், மாதாந்திர வரவு - செலவு விவரம், பணிகள் பதிவேடு 


[தெரு விளக்கு, குடிநீர் போன்ற பணிகள்]




 *ஊராட்சி நிர்வாகம் முறையாக இயங்காதபோது அதனைச் சரி செய்ய நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன* ?




தொடர் கண்காணிப்பு மூலமும், ஊராட்சி நிர்வாகத்தில் நாம் பல வழிகளில் பங்கெடுப்பதன் மூலமும் முறையாக இயங்காத ஊராட்சி நிர்வாகத்தை படிப்படியாக இயங்க வைக்க முடியும்.




 *ஒரு ஊராட்சியைப் புதிதாக அமைக்க வேண்டுமென்றால், அதற்குக் குறைந்தபட்சம் இருக்கவேண்டிய மக்கள் தொகை எவ்வளவு* ?




3000 பேர் இருந்தால் புதிதாக ஒரு ஊராட்சியை அமைக்கலாம்.




 *கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்[வி.ஏ.ஓ] ஊராட்சிக்கு ஆற்றவேண்டிய பணிகள் மற்றும் கடமைகள் என்னென்ன உள்ளது* ?




1. ஊராட்சியில் உள்ள புறம்போக்கு நிலங்களை முறையாக வகைப்படுத்திக் கொடுப்பார்.




2. ஆக்கிரமிப்பில் உள்ள பொது நிலங்களை ஊராட்சி கையகப்படுத்த உதவுவார்.




3. ஊராட்சி மூலம் குடிமராமத்து பணி மேற்கொண்டால் அதற்கான வரி வசூல் செய்ய உதவலாம்.




4. ஊராட்சி கேட்டுக்கொண்டதன் பேரில் அவரிடம் உள்ள ஆவணங்களை ஊராட்சியிடம் பகிர்ந்துகொள்வார்.




 *கிராம வறுமை ஒழிப்பு சங்கம் என்றால் என்ன* ?




உலக வங்கியின் நிதி உதவியுடன் செயல்பட்டது புது வாழ்வு திட்டம். அதன் அங்கமே கிராம வறுமை ஒழிப்பு சங்கம். எந்தெந்த மாவட்டங்களில் அல்லது பகுதிகளில் புதுவாழ்வு திட்டம் செயல்பட்டதோ அந்தந்த பகுதி கிராமங்களில் இச்சங்கம் இயங்கியது. இச்சங்கத்தின் மூலம்,




• இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்குப் பயிற்சிகள் வழங்குதல்,




• மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தல் 


போன்ற பணிகளை மேற்கொண்ட புதுவாழ்வு திட்டம், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தோடு நிறைவடைந்தது.




 *புது வீடு வரைபட ஒப்புதல் வழங்க ஊராட்சி கடைப்பிடிக்கக்கூடிய வழிமுறைகள் என்னென்ன* ?




• 5000 சதுர அடிக்குக் குறைவான வீட்டு மனை பிரிவுகளுக்கு ஊராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கலாம்.




• ஒரு சதுர அடிக்குக் குறைந்தபட்ச கட்டணமாக ரூ0.50 வசூலிக்கலாம்.




• அதிகபட்சம் கட்டணம் ஒவ்வொரு ஊராட்சிக்கும் மாறுபடும். அது சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தீர்மானத்தின் மூலம் உயர்த்தி நிர்ணயிக்கப்படும்.




• சென்னைக்கு அருகாமையில் உள்ள சில மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள் சி.எம்.டி.ஏ வரையறைக்குள் வருகிறது. அந்த ஊராட்சிகளில் கட்டிட அனுமதி வழங்கும் பொறுப்பு சி.எம்.டி.ஏ வைச் சாரும்.




 *ஒப்பந்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதற்காக ஊராட்சி நிர்வாகம் கடைப்பிடிக்க வேண்டிய சட்டப்படியான வழிமுறைகள் என்னென்ன* ?




ஒப்பந்தப்பணிகள் மேற்கொள்ளும்போது பல நிர்வாக நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றில் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்.




• ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஒப்பந்ததாரர்களின் தகவல்களைக் கொண்ட பதிவேடு ஒன்று பராமரிக்கப்படவேண்டும்.




• ஒப்பந்தப்பணி ரூபாய் 4999/- க்கு மேல் இருந்தால் கட்டாயம் ஒப்பந்தப்புள்ளிகள் வரவழைக்கப்பட வேண்டும்




• ஒப்பந்த அறிவிப்பில்; ஒப்பந்தப் புள்ளிகளை அழைக்கும் அலுவலர்களின் பெயர் மற்றும் முகவரி, திட்டத்தின் பெயர், வைப்புத் தொகை போன்ற விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.




• ஒப்பந்தப்படிவம் சம்மந்தப்பட்ட தொழில்நுட்ப அலுவலரின் ஒப்புதல் பெற வேண்டும்.




• தொழில்நுட்ப அனுமதியும் நிர்வாக அங்கீகாரமும் இன்றி எந்தப்பணிக்கும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட கூடாது.




• பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளை கொண்டு ஒப்புநோக்குப் பட்டியல் (Comparitive Statement) தயார் செய்ய வேண்டும்.




• குறைந்த விலைப்புள்ளி கொடுத்துள்ள ஒப்பந்ததாரர்களுக்கு ஊராட்சி மன்ற அனுமதி பெறப்பட வேண்டும். 


அதன் பின்னர் வேலை உத்தரவு வழங்கப்பட வேண்டும்.




 *வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள்’ என்று கிராம மக்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்*_?




மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்படும் தகவல்களைக் கொண்டு, குடும்பத்தின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையிலும் மத்திய அரசு குறிப்பிடும் சில வரையறைகளான, சொந்த வாகனம், தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவை வைத்திருப்போர் நீங்கலாக 'வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்' பட்டியல் தயாரிக்கப்படுகிறது.




 *ஊராட்சி மூலம் வழக்குத் தொடுக்க முடியுமா* ?




முடியும். ஊராட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு, அதன் தலைவரின் பெயரில் வழக்குகள் தொடரலாம். ஒரு ஊராட்சி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராகக் கூட வழக்குத் தொடரலாம். அதற்குப் பல முன்னுதாரணங்கள் உண்டு.




 *கிராம பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் (வி.ஏ.ஓ) ரேஷன் கடை, ஊராட்சி ஒன்றிய பள்ளி, அங்கன்வாடி மையம், துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற அரசு அமைப்புகள் ஊராட்சிக்குக் கட்டுப்பட்டவையா* ? *அதனைக் கிராம முன்னேற்றத்திற்கு முழுமையாக இயங்க வைக்க ஊராட்சியின் பங்கு என்ன* ?




இந்த அமைப்புகள் ஊராட்சி நிர்வாகத்திற்கு நேரடியாகக் கட்டுப்பட்டவை அல்ல. ஆனால் இந்த அமைப்புகளை மேற்பார்வையிடும் அதிகாரம் ஊராட்சி நிர்வாகத்திற்கு உண்டு.


 


 *ஊராட்சி நிர்வாகத்தில் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலரின் பங்கு என்ன?* 




குறிப்பிடும்படி எதுவும் இல்லை. ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் ஒதுக்கப்படும் சில திட்டங்களைக் கிராம ஊராட்சியில் நடைமுறைப்படுத்த அவர்கள் அதிகாரம் படைத்தவர்கள். மற்றபடி அவர்களின் பொறுப்புகளை பயன்படுத்தி ஊராட்சி நிர்வாகத்தில் சட்டப்படியாக தலையிட முடியாது.




 *ஊராட்சியின் பொது தகவல் அலுவலர் யார்* ?




சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் (ஒன்றிய அலுவலகம்) உள்ள விரிவாக்க அலுவலரே கிராம ஊராட்சியின் பொது தகவல் அலுவலர் ஆவார். அவருக்கே நாம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.




 *நாம் எப்போதெல்லாம், எந்தெந்த தேவைகளுக்காக ஊராட்சியின் உதவியை நாடலாம்?* 




நம் ஊராட்சிக்கு உட்பட்ட எந்த ஒரு பொது விசயத்திற்கும் ஊராட்சியின் உதவியை நாடலாம். நமது நீர் நிலைகள் பாதுகாப்பாக இருக்கட்டும், நமது 


ஊரில் உள்ள அரசுப் பள்ளியின் செயல்பாடாகட்டும், ரேஷன் கடை தேவைகளாகட்டும் நாம் ஊராட்சியின் உதவியை நாடலாம். மேலும், ஊராட்சி நிர்வாகம் பணி செய்யக் கடமைப்பட்ட விசயங்கள் சமந்தமான தேவைகளுக்கு ஊராட்சியை நாடலாம்.




 *ஊராட்சி நிர்வாகத்தில் மக்களாகிய நாம் எப்படிப் பங்கெடுக்கலாம்* ?




மிக முக்கியமான கேள்வி இது. காரணம், ஊராட்சி நிர்வாகம் என்பது ஒரு பஞ்சாயத்து தலைவரோடு முடிந்துவிடுவதில்லை. மக்கள் பங்கெடுக்கும்போதுதான் முழுமையான நிர்வாகம் சாத்தியமாகும்.


மக்களாகிய நாம், பலவிதங்களில் நம் ஊராட்சி நிர்வாகத்தில் பங்கெடுக்கலாம்.




1. கிராமசபையில் பங்கெடுப்பது. கிராமசபை முறையாக நடைபெற, அது பற்றி மக்களுக்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது




2. கிராமசபையில் பங்கெடுப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், வாய்ப்பிருக்கும் போதெல்லாம் ஊராட்சி அலுவலகத்திற்குச் சென்று நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவது....




3. ஊராட்சியில் செயல்படும் நிலைக் குழுக்களில் உறுப்பினராக நம்மை இணைத்துக்கொண்டு ஊராட்சியின் வளர்ச்சிக்கு உதவி செய்வது.




4. கிராம வளர்ச்சி திட்டம் தயாரிக்க உதவுவது, அத்திட்டம் முழுமை பெற அதில் நம் பங்களிப்பு அவசியம்.




5. நமது கிராமத்தின் பொது தேவைகளுக்கு உதவி செய்வது, அதில் பங்கெடுப்பது போன்ற தன்னார்வத்துடன் கூடிய பங்களிப்பின் அதனை மேம்படுத்தத் தொடர்ந்து உதவலாம்.




 *யாருக்குக் கட்டுப்பட்டது ஊராட்சி நிர்வாகம்* ?




அரசியல் அமைப்பு சட்டத்திற்கு கட்டுப்பட்டது ஊராட்சி நிர்வாகம். மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதால் பஞ்சாயத்துத் தலைவரோ, மற்ற உறுப்பினர்களோ எந்த ஒரு அரசு அலுவருக்கும் அல்லது எம்.எல்.ஏ , எம்பி க்கும் கீழ் வேலை செய்பவர்கள் அல்ல. 


நமது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்; ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியருக்கு ஊராட்சி நிர்வாகத்தைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அதிகாரங்களைக் கொடுத்துள்ளது. இருப்பினும் ஊராட்சி நிர்வாகம் அவர் சொல்வதையெல்லாம் அப்படியே கேட்டு நடக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. நேர்மையாக, சட்டத்தை மதித்துச் செயல்படும் ஒரு ஊராட்சி நிர்வாகம், மிக முக்கியமாக, மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நிர்வாகம் இப்போது இருக்கின்ற அதிகாரங்களை வைத்துக்கொண்டே ஊராட்சிக்குப் பல முன்னேற்றங்களைக் கொண்டு வர முடியும்.




 *ஊராட்சியில் உள்ள ஆவணங்களை பொது மக்கள் பார்வையிட முடியுமா* ?




முடியும். கிராமசபை கூட்டத்தின் போது வரவு - செலவு கணக்கு விவரங்கள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் ஊராட்சிக்குச் சம்மந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் பார்வையிடலாம். மேலும், தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலமாகவும், நமது வார்டு உறுப்பினர்கள் மூலமாகவும் ஊராட்சியில் உள்ள ஆவணங்களை - அதன் நகல்களை நாம் பெறலாம்.




 *ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகள் என்னென்ன* ? *எவ்வித பணிகளை ஒரு ஊராட்சி மேற்கொள்ளலாம்* ?




ஊராட்சி நிர்வாகம், தனது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளின் பாதுகாப்பினையும், பொது மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு எந்த ஒரு செயலையும் சட்டத்திற்கு உட்பட்டுச் செய்யலாம். மக்களின் அடிப்படைத் தேவைகளான பொதுச் சுகாதாரம், சாலை வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், நீர் நிலைகள் உருவாக்குதல் - பாதுகாத்தல், இடுகாடுகள் & சுடுகாடுகள் பராமரிப்பு, தெரு விளக்குகள் பராமரிப்பு பொது சொத்துக்களை பாதுகாத்தல் & பராமரித்தல் ஆகியவை ஊராட்சியின் கட்டாய கடைமைகளாகும். அடிப்படை வசதிகளைத் தாண்டி, ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக மாற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஒரு ஊராட்சி எடுக்கலாம்.




 *வி.ஏ.ஓ விற்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன* ?




ஒவ்வொரு ஊராட்சியிலும், வி.ஏ.ஓ அலுவலகமும் இருக்கும். ஊராட்சி மன்ற அலுவலகமும் இருக்கும். இவ்விரண்டு அலுவலகங்களும் வெவ்வேறான நிர்வாக அமைப்புகளாகும். "வி.ஏ.ஓ" என அழைக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த் துறையின் ஊழியர் ஆவார். அத்துறை சார்ந்த பணிகளை மேற்கொள்பவர். வி.ஏ.ஓ அலுவலகம் கிராமத்தில் இருக்கும் வருவாய்த் துறையின் கடை நிலை அலுவலகம். ஆனால் ஊராட்சி நிர்வாகம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட, அந்த ஊராட்சி எல்லைக்கு உட்பட்டு மக்களுக்காகச் செயல்படும் அரசாங்கமாகும். அது ஒரு குறிப்பிட்ட துறைக்காக மட்டும் உள்ள அமைப்பு அல்ல. ஊராட்சி கேட்டுக்கொண்டால் தேவையான தரவுகளை கொடுக்கக் கடமைப்பட்டுள்ளது வி.ஏ.ஓ அலுவலகம்.




 *ஊராட்சிக்கும் பஞ்சாயத்துக்கும் என்ன வித்தியாசம்* ?




இரண்டும் ஒன்றுதான். அவை இரண்டும் ஒரே விசயத்தைத்தான் குறிக்கின்றன. பஞ்சாயத்து என்பது பழங்காலத்தில் இருந்த சொல். அது இன்றும் பேச்சு வழக்கில் இருக்கிறது. ஊராட்சி என்பதே சரியான சொல்லாக இருக்கும்.




 *ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்படும் நேரம் என்ன? அரசு அலுவலகம் போல் அலுவல் நேரம் ஏதும் உண்டா* ?




ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு, அரசு அலுவலகம் போல் இந்த நேரத்தில்தான் இயங்கவேண்டும் என வரையறுக்கப்பட்ட அலுவல் நேரம் எதுவும் கிடையாது. எந்த நேரத்திலும் மன்ற அலுவலகத்தைத் திறந்து வைத்து மக்களுக்காகப் பணியாற்றலாம். காரணம், அது ஒரு அரசுத் துறையின் அலுவலகம் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இயங்கும் அலுவலகம். தேவைப்படும்பட்சத்தில் மக்களின் வசதிக்கேற்ப அலுவல் நேரத்தை ஊராட்சியே நிர்ணயித்துக்கொள்ளலாம்




 *காலங்காலமாக நம் சமூகத்தில் பஞ்சாயத்துகள் இருக்கின்றன ! அதிலிருந்து தற்போதைய ஊராட்சி நிர்வாகம் எந்த விதத்தில் வேறுபடுகிறது* ?




பலவிதங்களில் வேறுபடுகிறது. அதில் மிக முக்கியமாக, சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டிய ஒரு அமைப்பாக இருக்கிறது தற்போதைய ஊராட்சி நிர்வாகம். தனி நபரின் கட்டுப்பாட்டிலோ, ஆதிக்கம் செலுத்தும் சில குழுவின் கட்டுப்பாட்டிலோ இல்லாமல் சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டிய அமைப்பு. மேலும், கிராமசபை, கிராமசபை, நிலைக்குழுக்கள், வளர்ச்சி திட்டம் தயாரித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் மக்கள் நேரடியாகப் பங்கெடுக்க அதிக வாய்ப்புள்ள அமைப்பு இந்த புதிய ஊராட்சி நிர்வாகம்.




 *இணைப்புப் பட்டியல் 11 என்பது என்ன? அது எதற்காகக் கொடுக்கப்பட்டது* ?




மத்திய மற்றும் மாநில அரசுகள் எந்தெந்த துறைகளுக்குப் பொறுப்புடையவை அல்லது எந்தெந்த துறைகளில் பணிகள் செய்யலாம் என்ற வரையறையைப் பட்டியல் 7 [அரசியல் அமைப்புச் சட்டம்] தெளிவாகப் பட்டியலிடுகிறது .




அதே போல, மூன்றாவது அரசாங்கமாக இயங்கும் பஞ்சாயத்து அமைப்புகளும் எந்தெந்த துறைகளின் கீழ் பணியாற்றலாம் என்ற வரையறையை அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட்டியல் 11 வழங்குகிறது. 


வேளாண்மை முதல் சமூகச் சொத்துக்களை பராமரிப்பது வரை 29 துறைகளில் ஒவ்வொரு ஊராட்சியும் பணியாற்றலாம் என வழிகாட்டுகிறது இப்பட்டியல்.




குறிப்பு: மேற்குறிப்பிட்ட 29 துறைகளின் பொறுப்புகளை ஊராட்சிகளிடம் வழங்க வேண்டியக் கடமை மாநில அரசைச் சார்ந்தது.




இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 9 என்ன சொல்கிறது? அது ஏன் நமக்கு முக்கியம்?




இச்சட்டப் பிரிவின் மூலமாகத்தான், மத்திய மாநில அரசுகளைப் போல பஞ்சாயத்தும் நிலையான ஒரு அமைப்பாகக் காலூன்ற வழிவகை செய்யப்பட்டது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலம் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் போல, அரசியல் சட்ட பிரிவு 9 ஊராட்சிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. இப்பிரிவு, பஞ்சாயத்து அமைப்புகள் சுயாட்சி அரசுகளாகச் செயல்பட வழிவகுக்கிறது.

தடை உத்தரவு என்றால் என்ன

 *தடை உத்தரவு என்றால் என்ன*

தடை உத்தரவு வகைகள் என்ன?

யாரெல்லாம் தடை உத்தரவை பெறலாம்?

எந்தெந்த சூழ்நிலையில் தடை உத்தரவு பெறமுடியாது?

*(இன்ஜெக்ஷன் ஆர்டர்-injunction order*)

மக்கள் ஆபத்தான அத்துமீறிய செயல்கள் நடக்கும் போது பயன் படுத்தும் வார்த்தை தான் தடை உத்தரவு இதை இன்ஜெக்ஷன் ஆர்டர்(injunction order) என்றும் உறுத்துக்கட்டளை என்றும் வேறு பெயரில் மக்கள் தெரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். குறிப்பாக உங்களது புரிதலுக்கு வேண்டி தான் இப்படி விரிவான விளக்கத்தை கொடுக்கிறேன்.

அதாவது இன்ஜெக்ஷன் ஆர்டர்-(injunction order) என்ற சட்டத்தை உறுத்துக்கட்டளை என்று தமிழில் சொல்லலாம் ஆனால் நமது பழக்கத்தில் இதை தடை உத்தரவு ஸ்டே ஆர்டர் (stay order) என்றெல்லாம் பல பெயரில் அழைக்கிறோம் ஆனால் உண்மையில் உறுத்துக்கட்டளை என சொல்வதே சட்ட நடைமுறையில் சரியானதாக இருக்கும். 

இன்ஜெக்ஷன் (Injunction Order) என்ற தடை உத்தரவு என்பது எந்த நடைமுறைக்கு பயன் படுத்தப்படுகிறது.

தடை உத்தரவு என்றால் ஒருசில செயல்களை ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு தரப்பினர் செய்யக் கூடாது என்றும், செய்ய வேண்டும் என்றும் அந்த நபர் அல்லது அந்த தரப்பினர்க்கு எதிராக வழங்கப் படுவதாகும்.

*தடை உத்தரவு வகைகள் என்ன*

*What-is-an-injunction-order*

(தடை உத்தரவு என்பதை இதில் உறுத்துக்கட்டளை என்று பொருள் புரிந்துகொள்ளுங்கள்) 

1) இடைக்கால (தற்காலிக) உறுத்துக் கட்டளை

(Interim Injunction or Temporary Injunction)

2) செயலுறுத்து கட்டளை

(Mandatory Injunction)

3) நிலைக்கால உறுத்துக்கட்டளை

(Perpetual Injunction)

4) தடை உறுத்துக்கட்டளை

(Prohibitory Injunction)

என்று நான்கு வகைகளாக நடைமுறையில் இருக்கிறது.

*இடைக்கால (தற்காலிக) உறுத்துக்* *கட்டளை என்றால் என்ன?*

மறு உத்தரவு வரும்வரை நீதிமன்றம் இடும் கட்டளைக்கு இடைக்கால உறுத்துக்கட்டளை என்று பெயர்.

*செயலுறுத்து கட்டளை என்றால் என்ன*

ஒரு செயலை ஒருவர் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் இடும் கட்டளைக்கு செயலுறுத்துக் கட்டளை என்று பெயர்.

*நிலைக்கால உறுத்துக்கட்டளை* *என்றால் என்ன*

ஒரு செயலை ஒருவர் செய்யக்கூடாது என நிரந்தரமாக தடை பெறுவதுதாகும். நிரந்தரத் தடை என்பது தீர்ப்பின் மூலம் வழங்கப்பட்ட ஒன்றாகும், அது இறுதியில் தடை வழக்கை நீக்குகிறது.

*தடை உறுத்துக்கட்டளை என்றால்* *என்ன*

ஒரு செயலை ஒருவர் செய்யக்கூடாது என்று நீதிமன்றம் இடும் கட்டளைக்கு தடையுறுத்துக் கட்டளை என்று பெயர்.

*யாரெல்லாம் தடை உத்தரவை* *பெறலாம்?*

தடை உத்தரவை ஒருவர் நீதிமன்றத்தில் பெறுவதற்கு அவர் தொடுத்த அல்லது அவர்மீது வேறு எவராவது தொடுத்த வழக்கு ஒன்று நிலுவையில் இருக்க வேண்டும்.

எந்தெந்த சூழ்நிலையில் தடை உத்தரவு பெறமுடியாது?

வழக்கு தாக்கல் செய்யப்படாமல் இருந்தாலோ அல்லது அந்த வழக்கு முடிவடைந்து விட்டாலோ தடை உத்தரவு என்ற உறுத்துக் கட்டளையை பெறமுடியாது. 

தடை உத்தரவை வழங்குவதற்கு நீதிமன்றம் ஒன்றுக்கு அதிகாரம் இல்லாத போது அந்த வழக்கில் தடை உத்தரவு வழங்கக்கூடாது. பாகப்பிரிவினை சம்பந்தமான வழக்கில் தடை உத்தரவு பெற முடியாது.

ஒரு நிர்வாகமானது தன்னுடைய வேலையாளுக்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கைக்கு எதிராக தடை உத்தரவு பெறமுடியாது.

வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் சரியான முறையில் தாக்கல் செய்யாமல் இருக்கும்போது தடை உத்தரவு பெறமுடியாது. 

எப்போது எதிர்தரப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டதோ அப்போது முதலே தடை உத்தரவு நடைமுறைக்கு வரும். 

ஒரு வழக்கில் தடை உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அந்த வழக்கு முடிந்தவுடன் தடை உத்தரவும் முடிவுக்கு வந்துவிடும்.

வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அந்த வழக்கில் தடை உத்தரவு பெற்றவர் முன்னிலை ஆக தவறிய காரணத்தால் வழக்கு தள்ளுபடி ஆகியிருந்தால், பெறப்பட்டிருந்த தடை உத்தரவும் தள்ளுபடி ஆகிவிடும். 

அந்த வழக்கு மீண்டும் கோப்பில் எடுக்கப்பட்டால் தடை உத்தரவும் தானாக கோப்பில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது

தடை உத்தரவை மீறுவது தண்டணைக்குரிய குற்றமாகும். எதிர்தரப்பினர் தடை உத்தரவை மீறுவதை தடை உத்தரவை பெற்றவர்தான் நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்.

கர்ப்பிணிகளுக்கான மனநலன் விழிப்புணர்வு நெலாக்கோட்டை

 நெலாக்கோட்டை அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் ஆல் தி சில்ரன் அமைப்பு ஆகியன ச...