| |||||||||||||||||||||||||||||||||||||||||
|
Tobacco
பொது விநியோக திட்ட கருத்தரங்கு
பொது விநியோக திட்ட கருத்தரங்கு
ஊட்டி,: கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் சார்பில் கோத்தகிரியில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பொது விநியோக திட்ட மக்கள் சேவைகள் குறித்த கருத்தரங்கு நடந்தது.
விரிவுரையாளர் ஜோசுவா மனோகர்ராஜ் வரவேற்றார்.
கருத்தரங்கிற்கு பயிற்சி நிறுவன முதல்வர் நாராயணன் தலைமை வகித்தார்.
கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
கோத்தகிரி வட்ட வழங்கல் அலுவலர் குமாரராஜா, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது,
தமிழகத்தில் 1968ம் ஆண்டு முதல் பொது விநியோக திட்டம் அமுல்படுத்தப்பட்டு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ரேசன் விநியோகத்திற்காக அரசு 49,000 கோடி ஆண்டுக்கு செலவிட்டுவருகின்றது. மொத்தமாக கொள்முதல்செய்து மணியத்தின விலைக்கு மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது கொடுத்தல் செலவுகளுக்கு அரசு மானியம் முலம் குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருகின்றது. குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 வயதிற்குட்பட்டவர்கள் சிறியவர்கள் என்ற அடிப்படையில் அரை யூனிட்டாகவும், 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெரியவர்கள் என்ற அடிப்படையில் 1 யூனிட்டாகவும் கணக்கில் கொள்ளப்படுகிறது.
1 யூனிட்டிற்கு 12 கிலோ அரிசியும், அதற்கு மேல் அதிகபட்சமாக 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்ட குடும்ப அட்டைக்கு 4 கிலோ கூடுதல் அரிசி வழங்கப்படுகிறது. இதே போன்ற மற்ற பொருட்களும் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில் வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை ஆகியவை 100 சதவீதம் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுக்கிறது. மற்ற பொருட்கள் அரசு ஒதுக்கீடு பொறுத்து வழங்கப்படுகின்றன. நீலகிரியில் 96 சதவீதம் வரை அரிசி மக்கள் வாங்கி பயனடைகின்றனர்.
விரைவில் தமிழக அரசு பயோ மெட்ரிக் ரெஷன் கார்டுகள் வழங்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடும்ப உறுப்பினர்களின் புகைப்படம், கண் கருவிழி, கைரேகை ஆகியவை பதிவு செய்யப்பட்டு அதன் தகவல்கள் அடங்கிய அட்டை வழங்கப்பட உள்ளது. நியாயவிலை கடைகளில் அதற்காக வழங்கப்படும் இயந்திரம் மூலம் குடும்ப உறுப்பினர் ஒருவர் பொருட் களை பெற முடியும். இந்த நவீன முறை காரணமாக போலி கார்டுகள் ஒழிக்கப்படும். இதற்கான தகவல்கள் விரைவில் வீடுகளில் சேகரிக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் அத்தகவல்களை பிழையின்றி உண்மையான தகவல்களை வழங்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன், கோத்தகிரி நுகர்வோர் சங்க தலைவர் நாகேந்திரன், ஆசிரியர் பயிற்சி நிலைய விரிவுரையாளர்கள் வசந்தமணி, கற்பகம், பயிற்சி நிலைய மாணவ, மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மருத்துவமும், நுகர்வோரும்
கோத்தகிரியில் மருத்துவ கருத்தரங்கு
ஊட்டி, செப். 10:கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் விழிப்புணர்வு சங்கம் சார்பில் கோத்தகிரியிலுள்ள அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் மருத்துவமும், நுகர்வோரும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கோத்தகிரி நுகர்வோர் சங்க நிர்வாகி ரீட்டா வரவேற்றார். கருத்தரங்கிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்.
முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் பெள்ளி பேசியதாவது: நுகர்வோர், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்களும் நுகர்வோரின் உரிமைகளை அறிந்திருக்க வேண்டும். நோயாளிகளின் தேவையை கருத்தில் கொண்டு மருத்துவமனை அமைந்திருக்க வேண்டும். மருத்துவமனைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தொற்று நோய் ஏற்படாத வண்ணம் பராமரிக்க வேண்டும். நோயாளிகளுக்கு நோய் குறித்து தெளிவாக எடுத்து கூற வேண்டும்.
இலவச சிகிச்சை என்றாலும் பாதிக்கப்பட்டால் நிவாரணம் கோர முடியும். மருத்துவர்கள் பரிந்துரையுடன் மருந்துகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். எந்த மருந்துகள் வாங்கினாலும் பில் வாங்க வேண்டும். இதன் மூலமாகவே எந்த ஒரு பாதிப்பானாலும் முறையீடு செய்யவும், அதன் மூலம் நிவாரணம் பெறவும் முடியும். இவ்வாறு பெள்ளி பேசினார்.
பின்னர் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் பேசினார். நிகழ்ச்சியில் கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன், பயிற்சி நிலைய விரிவுரையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி வின்சென்ட் நன்றி கூறினார்.
மின் வாரிய நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் 13.09.2012
மின் வாரிய அலுவலகத்திலேயே மீட்டர் வழங்க நடவடிக்கை
ஊட்டி, : மின் வாரிய அலுவலகங்களிலேயே மின் மீட்டர்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மேற்பார்வை பொறியாளர் தெரிவித்தார்.
ஊட்டி மின் வாரிய அலவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் செயற் பொறியாளர்கள் சிவராஜ், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு - மக்கள் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், மின் கட்டணம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் வசூலிக்க வேண்டும். மின் மீட்டர்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மின்வாரியமே மின் மீட்டர்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்க்கொள்ள வேண்டும். மின் கம்பங்கள் மீது வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும். பழுதடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும். நுகர்வோர்களிடம் மின் வாரிய உழியர்கள் முறைப்படி நடந்துக் கொள்ள வேண்டும்.
கூடலூர் பகுதியில் விரைவில் 110 கேவி மின் பகிர்மான திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பந்தலூர் காபி காடு பகுதிகளில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்றார்.
மேற்பார்வை பொறியாளர் ஆல்துரை தலைமை வகித்து பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் மின்நுகர்வோர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது. மக்கள் தங்களது குறை களை தெரிவித்தவுடன் நிவர்த்தி செய்யப்படுகிறது. மின் கட்டணம் இளையதளம் மூலம் செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மின்வாரியம் மூலம் மின் மீட்டர்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்கள் தனியாரிடம் சென்று வாங்காமல் மின் வாரிய அலுவலகங்களில் அதற்குண்டான தொகையை செலுத்தி மீட்டர்களை பெற்று கொள்ளலாம். நுகர்வோர்களுக்கு உடனடியாக தேவைப்படுமாயின் மின் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடையில் இருந்து வாங்கி தரும் மின் மீட்டர்களையும் பொருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மின் கம்பங்களில் வளர்ந்துள்ள செடிகள் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மின் கம்பங்கள் பழுதடைந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தால், உடனடியாக மாற்றி தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்
படும்.
தற்போது வசூல் மையங்களை தவிர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிதாக வசூல் மையங்கள் அமைப்பது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இணைய தளம் மூலம் கட்டணங்களை அறிந்துக் கொள்ளவும், செலுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. கூடலூருக்கு உதவி கோட்ட பொறியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பந்தலூர் பகுதிக்கும் கோட்ட பொறியாளர் நியமிககப்படவுள்ளது. நுகர்வோர்களின் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தாழ்நிலையில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். கூடலூர் 110 கேவி துணை மின் நிலையம் அமைக்க தனி நபர் நீதிமன்றம் மூலம் தடை பெறப்பட்டுள்ளதால் அதனை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சமரச பேச்சு மூலம் தீர்வு காணப்பட்டு விரைவில் இத்திட்டம் நிறைவேற்றப்
படும்.
தற்போது ராஜீவ்காந்தி கிராமின் வித்யோதி கரன் யோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வோருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் இணைப்புக்கள் வழங்க உள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வோர் சான்று பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்பிப்போருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றார்.
இக்கூட்டத்தின் நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள் ராஜன், சுப்பிரமணி, நாகேந்திரன், மின் வாரிய பொறியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
cchepnlg July (47)
-
▼
July
(47)
- மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகம்
- special programmes
- ரேஷன் கார்டு வழங்க புதிய நடைமுறை அமல்
- நலிந்த பிரிவு குழந்தைகளை அவமானப்படுத்தும் தனியார் ...
- DISTRICT CONSUMER FOURM MANIPUR
- States/District CONSUMER Forum Arunachal Pradesh
- States/District CONSUMER Forum Arunachal Pradesh
- DISTRICT CONSUMER FORUM Manipur
- States/District CONSUMER Forum Uttar Pradesh
- States/District CONSUMER Forum Uttar Pradesh
- States/District CONSUMER Forum Punjab
- States/District CONSUMER Forum Rajasthan
- States/District CONSUMER Forum Rajasthan
- States/District CONSUMER Forum Sikkim
- States/District CONSUMER Forum TAMILNADU
- States/District CONSUMER Forum Tripura
- States/District CONSUMER Forum Uttarakhand
- States/District CONSUMER Forum Uttarakhand
- States/District CONSUMER Forum Uttarakhand
- States/District CONSUMER Forum Uttarakhand
- States/District CONSUMER Forum Uttarakhand
- States/District CONSUMER Forum West Bengal
- TO BE PUBLISHED IN THE GAZETTE OF INDIA. EXTRAORDI...
- States/District CONSUMER Forum Andhra Pradesh
- THE CONSUMER PROTECTION ACT, 1986 CHAPTER IV
- The Consumer Protection Act, 1986 (68 of 1986) CHA...
- THE CONSUMER PROTECTION ACT, 1986 CHAPTER II
- The Consumer Protection Act, 1986 (68 of 1986)
- The Consumer Protection Act, 1986 (68 of 1986) CH...
- THE CONSUMER PROTECTION ACT, 1986
- THE CONSUMER PROTECTION ACT, 1986
- THE CONSUMER PROTECTION ACT, 1986
- THE CONSUMER PROTECTION ACT, 1986
- THE CONSUMER PROTECTION ACT, 1986
- The Consumer Protection Act, 1986
- இந்திய தேசிய நுகர்வோர் (பூசல்கள்) குறை தீர்ப்பாணைய...
- ...
- நீலகிரி மாவட்டம்
- ஊட்டி போதை பொருள் விழிப்புணர்வு பிரசாரம்
- புற்றீசல் போல் பெருகும் அங்கீகாரமற்ற கல்வி நிலையங்...
- கையுன்னி அரசு உயர் நிலை பள்ளியில் இலவச கண் சிகிச்ச...
- Pandalur st Francine xevior school ccc inauguratio...
- CCHEP-NLG: கல்வி முக்கியத்துவம் புகையிலை ஒழிப்ப...
- கல்வி முக்கியத்துவம் புகையிலை ஒழிப்பு விழிப்புண...
- கல்வி முக்கியத்துவம் புகையிலை தீமை கருத்தரங்கம்
- கையுண்ணி இலவச கண் சிகிச்சை முகாம் ஜூலை 8.2012
- rte act awarness pro
பொது சேவை உரிமை சட்டம்உடனே செயல்படுத்த கோரிக்கை
ஊட்டி:"பொது சேவை உரிமை சட்டத்தினை உடனடியாக செயல்படுத்த வேண்டும்,' என
வலியுறுத்தி, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்,
மக்கள் மையம் சார்பில், ஊட்டி தலைமை தபால் அலுவலகத்திலிருந்து முதல்வருக்கு
அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் நடந்தது.இந்த கோரிக்கையை வலியுறுத்தும்
வகையில், அனைத்து வட்டங்களிலிருந்தும் பொது மக்களிடம் கையெழுத்து வாங்கி
அஞ்சல் அட்டை அனுப்பப்பட்டது. நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின்
கூட்டமைப்பு பொது செயலாளர் வீரபாண்டியன், மலைச்சாரல் கவி மன்ற தலைவர்
சோலூர் கணேசன், விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன், நெஸ்ட் அறங்காவலர்
சிவதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நுகர்வோர் விழிப்புணர்வு cchepnlg
நுகர்வோர் விழிப்புணர்வு பேச்சு போட்டிCONSUMER
|
வரைவு
| |||||||
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சுழல் பாதுகாப்ப...CONSUMER, கட்டுரைகள் water
| ||||||||
CONSUMER AWARENESS GUIDELINESCONSUMER, கட்டுரைகள்
| ||||||||
கொடுக்கப்பட வேண்டிய புகார் மனு (மாதிரி)CONSUMER
| ||||||||
தரமான உற்பத்திக்கு ஐ.எஸ்.ஐ., முத்திரை : பொருட்களை ...CONSUMER
| ||||||||
விழிப்புணர்வு பிரச்சாரம் நுகர்வோர் குழு ஏற்பாடுCONSUMER
| ||||||||
நுகர்வோர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்CONSUMER
| ||||||||
நுகர்வோர் உரிமை அறிய
இணைய பக்கம் துவக்கம்
ஊட்...CONSUMER
| ||||||||
உணவுப் பொருட்களில் கலப்படத்தைக் கண்டுபிடிக்கCONSUMER
|
ராசியும் * காதலும்
ராசியும் * காதலும்
மேஷம் - காதல் | ||||
|
ரிஷபம் - காதல் | ||
|
மிதுனம் - காதல் | ||
|
கடகம் - காதல் | ||
|
சிம்மம் - காதல் | ||
|
கன்னி - காதல் | ||
|
துலாம் - காதல் | ||
|
விருட்சிகம் - காதல் | ||
|
தனுசு - காதல் | ||
|
மகரம் - காதல் | ||
|
கும்பம் - காதல் | ||
|
மீனம் - காதல் | ||
|
அழகு குறிப்புகள்
மூக்கு கண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்?
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
நன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு
பொடித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து முகத்திற்கு பூசலாம் மேலும்
பழங்களான ஃபேஸ் பாக் போடலாம்.வாழைப்பழத்தின் தோலின் உட்பகுதியை முகம்
முழுவதும் தேய்த்து காயவைத்து கழுவலாம். மேலும் எலுமிச்சை வெள்ளரிக்காய்
போன்ற காயிலும் இதே முறையை பின்பற்றலாம்
கிளி,
குடை மிளகாய், சப்பை, கோணல், கூர்மை இப்படி பல வார்த்தைகளோடு சேர்த்து
மூக்கின் தோற்றத்தினையும், அளவினையும் குறிப்பிடுகிறோம். ஆனால்
எப்படிப்பட்ட ஷேப் உள்ள மூக்கினையும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப்
செய்து கொண்டால் ஷேப்பைப் பற்றிய கவலை தேவையில்லை. மூக்கின் பராமரிப்பு
மிகவும் எளிது. ரெகுலரான பேஷியல் கூட போதும். அதுவும் முடியாவிட்டால்
வீட்டில் செய்து கொள்ளும் சின்ன ட்ரீட்மெண்ட்டே போதும். மிக எளிதான
மூக்குக்கான அழகுக் குறிப்பினை பார்ப்போம்.
|
முகம் பொலிவு பெற
முகத்தில் செமிகல்ஸ் நிறைந்த சோப்பு மற்றும் கிரீம்கலை தவிர்தாலே பொலிவாக இருக்கும்.
பயறு மாவு , கஸ்தூரி மஞ்சளை தினமும் பூசி குளித்தாலே போதும்.
முக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில்
கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு.உடலிலுள்ள சருமம் 28
நாட்களுக்கொரு முறை வெளித்தோலை உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம்
உதிர மாதக் கணக்கில் ஆகும்.
சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள் தோலுரிந்தும், வறண்டும்
காணப்படுகின்றன. உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்...
|
வெகுதூரப் பயணங்கள் செய்யும்போது முகம் களைப்பாய்த் தோன்றும். இதைப்
போக்க கையோடு கொண்டு செல்லும் ‘மினரல் வாட்டரை’ அடிக்கடி முகத்தில்
தெளித்துக் கொண்டால் முகம் ‘பளிச்’சென இருக்கும்.
|
இனி உடற்பயிற்சிக் கூடங்களில் இருக்கும் சில முக்கியமான கருவிகளைப் பற்றித்
தெரிந்து கொள்வோம்.
|
முட்டை அனைவருக்கும் ஏற்ற முழுமையான உணவு. ‘லெசிதின்’ முட்டைப் பவுடர்
வடிவில் தயாரிக்கப்படுகிறது. முட்டை கேசத்தைப் பொலிவோடு நல்ல தன்மையோடு
வைத்திருக்கக் கூடியது. சருமத்திற்கும் மென்மையளிக்கும். வெள்ளைக்கரு
சருமத்தை இறுக்கும் தன்மை கொண்டது. சருமத்தின் துவாரங்களையும் இறுக்கும்.
மேலும் சருமத்தையும், கேசத்தையும் சுத்தம் செய்யும் தன்மை கொண்டது.
|
இந்தியாவில் ஏராளமாகப் பயிரிடப்படுகின்ற
ஒரு சிறிய செடி எள். இதன்
காயிலிருக்கின்ற ஏராளமான விதைகளைச் சேகரித்து உலர்த்தி எண்ணெய்
எடுக்கிறார்கள். இந்த எண்ணெய் தென்னிந்தியாவில் உணவு செய்தற் பொருட்டும்,
தலை முழுகிற்கும் பயன்படுகிறது. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று
பிரிவுகளுண்டு. மற்றும் காட்டெள், சிற்றெள், பேரெள் எனவும் பல
வகுப்புகளுண்டு.
|
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் கறிக்கும் பயன்படுத்துவதுண்டு. புண்களுக்கு காய்ச்சும்
எண்ணெய்களில் இது சிறப்பாகச் சேரும். இதைக் கருஞ்சீரகத்துடன் அரைத்து
உடம்பில் தேய்த்துக் குளித்து வர தோலைப் பற்றிய நோய்கள் தீரும்.
|
உப்பு
சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பு அயோடின் சத்து மிகுந்தது.
இது எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. சிறிது உப்பு கலந்த நீர்
கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். உப்பு கலந்த நீரால் கண்களைக் கழுவ
கண்கள் பளபளப்பாகும். கண்களுக்குக் கீழே தோன்றும் பை போன்ற வீக்கத்தைக்
குறைக்கும்.
|
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
|
''மூன்று மாதத்திலிருந்து, முகூர்த்தம் வரை மணப்பெண்களை எப்படி தயார்
செய்து, என் னென்ன மேக்அப் செய்கிறார்கள்'' என்பதை விளக்குகிறார்,
நேச்சுரல்ஸ் இருபாலர் ஸ்பா அன்ட் சலூன் பிரைடல் டிசைன் ஸ்டுடி யோவின்
இயக்குநர் வீணா குமாரவேல். முன்பெல்லாம் மணப்பெண் அலங்காரம் என்பது
முகூர்த்தம் நடக்கும் அன்று காலை யில் மணப்பெண்ணுக்கு மேக்அப் போடுவது
மட்டும்தான். இப்போது முகம் மட்டுமல்ல, உடல் முழுவதும் அழகாக்கப்படுகிறது.
மட்டு மின்றி உடை, நகைகள் போன்றவை அனைத் தும் அழகுக்கு அழகு சேர்க்கும்
விதத்தில் தேர்ந்தெடுத்து முழுமை படுத்தப்படுகிறது.
|
இன்றைய பெண்கள் முன்பு போல் அம்மி
அரைப்பதில்லை, உரல் வைத்து மாவு ஆட்டுவதில்லை (என்னையும் சேர்த்து தான்
சொல்கிறேன்). இது எல்லாம் செய்வதில்லை. உடம்பு மட்டும் ஸ்லிம்மா
இருக்கணும் என்று ஆசைப்படுகிறோம். மெலிந்த உடம்பை பெருக்க வைப்பது மிகவும்
சுலபம். ஆனால் அதிகப்படியான சதைகளைக் குறைப்பது தான் மிகவும் சிக்கல்.
உடலின் தேவையில்லாத எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்:-
|
வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து ஃபிட்ஜில்
வைத்து கொள்ளுங்கள் தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து
அரைமணி நேரம் நன்கு ஊறவிட்டு ஷாம்பு போட்டு நன்கு அலசிவிடுங்கள் ஷாம்பு
தினமும் போட வேண்டிய அவசியமில்லை இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து
வரவும். நிச்சயமாக முடி கொட்டுவுது நின்றுவிடும்.
|
இளம்
வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதைக் காணக்கூடியதாக
உள்ளது. இதற்குக் காரணம் "பாஸ்ட் புட்’ உணவு வகைகளை இவர்கள் அதிகம்
உண்பதுதான் எனக் கூறப்படுகின்றது. இது கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியது
அவசியம். இளமையிலேயே வயதானவர் போல் தோற்றமளித்தால் யாருக்குத்தான் கவலை
வராது? உணவு விடயத்தில் சிறிது கவனம் செலுத்தினால் இவர்களது கவலை மறைந்தே
போவது உறுதி. இதோ சில குறிப்புகள் உங்களுக்கு:
|
வெயில், தூசி, வெப்பம் என்று நிறம் மாறிப்போன சருமத்தை சில இயற்கையான முறையில் பேக் போட்டு முகத்தை பிரகாசிக்க வைக்கலாம்.
உங்கள் முகம் வறண்டு பொலிவில்லாமல் இருக்கா? தினமும் குளிக்கும் முன்பு பால் ஏடை நன்றாக முகம் முழுவதும் தடவி 10 நிமிடம் வைத்திருந்து கழுவி விடவும். உங்கள் முகம் நார்மலாகிவிடும். |
சிலருக்கு இளமையிலேயே தோலில் சுருக்கங்கள் விழுந்து, வயதாகிவிட்டது போன்ற தோற்றத்தை தரும். இதிலிருந்து தப்பிக்க இதோ வழி...
தோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு கீழ் கண்ட குறிப்புகளை பயன்படுத்தலாம். |
நன்கு அழுத்தமான ஐ ஷேடோவை கொண்டு இமைகளின் மேற்பரப்புகளில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள்.
|
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக்
குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல்
பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி
முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
|
திருமணமாகி, குழந்தை பெற்று, இளமை காணாமல்
போக ஆரம்பிக்கிற காலக் கட்டத்தில் பியூட்டி பார்லருக்குப் பெண்கள்
படையெடுத்த காலம் மலையேறி விட்டது. இன்றைய பள்ளி மற்றும் கல்லு}ரி
வாசல்களில் நின்று பார்த்தால் டீன் ஏஜ் பெண்களின் அழகு அட்டகாசம் பிரமிக்க
வைக்கிறது. விதம் விதமான ஹேர் கலரிங், புதுசு, புதுசாய் ஹேர் ஸ்டைல்கள்,
ஃபேஸ் பெயிண்டிங், டாட்டூ என நாகரிகத்தின் உச்சத்துக்குப் போய்
கொண்டிருக்கிறார்கள் இன்றைய டீன் ஏஜ் பெண்கள்.
|
டீன் ஏஜான் ஆரம்பத்தில் இருப்பவர்கள் புருவங்களை ஷேப் செய்ய வேண்டாம். வயது கூடிய பிறகு செய்து கொள்ளலாம்.
* பிளீச்சிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. * சருமத்தின் தேவையற்ற ரோமங்களை அகற்ற ரேசர், கிரீம் உபயோகிக்க வேண்டாம். * கூந்தலுக்கான மிகவும் ஸ்ட்ராங்கான சிகிச்சைகளைத் தவிர்க்கலாம். ஸ்ட்ரெயிட்டனிங், கலரிங் போன்றவற்றைக் கூடியவரையில் தள்ளிப் போடுவது நல்லது. |
சிலருக்கு செயற்கையான கீரீம் பயன்படுத்தி உடல் அழகாக்க பிடிக்காது அவங்களுக்கு இதோ சில உணவுகள் மூலமே அழகாக்க சில உணவு குறிப்புகள்
உடலின் வெளி அழகுக்கும், உள் ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியம் கீரை எல்லா வைகயான கீரையும் அதிகம் சாப்பிடலாம். குறிப்பாக வெந்தயக்கீரை, பசலைக்கீரை,முருங்கை கீரைகளில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் ஜிங்க் சத்து இருக்கு. இந்த கீரைகளுடன் விட்டமீன் சி சத்துள்ள உணவுகள் சேர்த்தும் சாப்பிடும் பொழுது இன்னும் அதிகமான சத்துக்கள் கிடைக்கும் இதன் மூலம் கண்களுக்கு கருவளையம் குறையும், முகத்தில் பருக்கள் வருவது குறையும். |
பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ
கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100
கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு
பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத்
தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
|
சிலருக்கு செயற்கையான கீரீம் பயன்படுத்தி உடல் அழகாக்க பிடிக்காது அவங்களுக்கு இதோ சில உணவுகள் மூலமே அழகாக்க சில உணவு குறிப்புகள்
|
முகமும், கேசமும் மட்டுமே பொலி வோடும்,
இளமையோடும் இருந்தால் போதுமா? கைகளைப் பராமரிப்பதில் நம்மில் எத்தனை பேர்
அக்கறை காட்டுகிறோம்? சுருக்கங்களுடனும், கோடுகளுடனும் காணப்படும் கைகள்
உங்கள் ஒட்டுமொத்த அழகையே கெடுத்து விடும். கைகள் பரா மரிப்பிற்கு சில
ஆலோசனைகள்....
Subscribe to:
Posts (Atom)
உயில் நடைமுறைகள்
*பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...
-
:1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது? -மூன்று தொகுதிகளாக. 2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைக...
-
மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் / CONSUMER GRIEVANCE REDRESSAL FORUM ( CGRF ) ****************************************************** தமிழ்ந...
-
*#பணியிடத்தில்_பாலியல்_வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) #சட்டம், 2013* *#பாலியல்_வன்முறை_தடுப்பு* இந்தியாவில் பணியிடத்தில் பாலியல...