ஊட்டி : நீலகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு சுகாதாரத் துறை ஆலோசனை குழு கூட்டம், ஊட்டியில் நடந்தது.
கூடலூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு டாக்டர், மருந்தாளுனரை உடனடியாக நியமிக்க வேண்டும்; பந்தலூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் சிறப்பு செவிலியர் நியமிக்க வேண்டும்; புதிய எக்ஸ்ரே மிஷின் வழங்க வேண்டும்; நோயாளிகளிடம் பரிவுடன் நடந்துக் கொள்ள வேண்டும்; அரசு மகப்பேறு மருத்துவமனையில், இரவு நேரத்தில் டாக்டர்கள் இருக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுகாதார துறை (நலப்பணிகள்) இணை இயக்குனர் வசந்தா தேவி தலைமை வகித்தனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையம் சார்பில் மைய தலைவர் சிவசுப்ரமணியம், ராஜன், சுப்ரமணி, தர்மலிங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய உதவி பொறுப்பாளர் மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment