ஊட்டி, செப். 5:
ஊட்டி பிங்கர்போஸ்ட் அருகேயுள்ள எச்.பி.எப் உயர்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்கப்பட்டது.
தமிழக அரசு உணவுப்பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் சார்பில் ஊட்டி பிங்கர்போஸ்ட் அருகேயுள்ள எச்.பி.எப் உயர்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நேற்று நடந்தது.
நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் மோகன்ராஜ் வரவேற்றார்.
விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ராமன் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் பிளாரன்ஸ் முன்னிலை வகித்தார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவரும், மாவட்ட அரசு நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினருமான சிவசுப்பிரமணியம் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தை துவக்கி வைத்து பேசினார்.
விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆசிரியர் காமராஜ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment