மருத்துவமும், நுகர்வோரும்


கோத்தகிரியில் மருத்துவ கருத்தரங்கு
ஊட்டி, செப். 10:கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் விழிப்புணர்வு சங்கம் சார்பில் கோத்தகிரியிலுள்ள அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் மருத்துவமும், நுகர்வோரும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கோத்தகிரி நுகர்வோர் சங்க நிர்வாகி ரீட்டா வரவேற்றார். கருத்தரங்கிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். 
முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் பெள்ளி பேசியதாவது: நுகர்வோர், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்களும் நுகர்வோரின் உரிமைகளை அறிந்திருக்க வேண்டும். நோயாளிகளின் தேவையை கருத்தில் கொண்டு மருத்துவமனை அமைந்திருக்க வேண்டும். மருத்துவமனைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தொற்று நோய் ஏற்படாத வண்ணம் பராமரிக்க வேண்டும். நோயாளிகளுக்கு நோய் குறித்து தெளிவாக எடுத்து கூற வேண்டும்.
இலவச சிகிச்சை என்றாலும் பாதிக்கப்பட்டால் நிவாரணம் கோர முடியும். மருத்துவர்கள் பரிந்துரையுடன் மருந்துகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். எந்த மருந்துகள் வாங்கினாலும் பில் வாங்க வேண்டும். இதன் மூலமாகவே எந்த ஒரு பாதிப்பானாலும் முறையீடு செய்யவும், அதன் மூலம் நிவாரணம் பெறவும் முடியும். இவ்வாறு பெள்ளி பேசினார்.
பின்னர் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் பேசினார். நிகழ்ச்சியில் கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன், பயிற்சி நிலைய விரிவுரையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி வின்சென்ட் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...