கூடலூர் கலை அறிவியல் கல்லூரயில்நாட்டு நலப்பணி திட்ட நாளை முன்னிட்டு
கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்,
கூடலூர் அரசு இரத்த வங்கி, நெலாக்கோட்டை சமுதாய சுகாதார நிலையம் ஆகியன
இணைந்து
இரத்ததான முகாமினை நடத்தின.
கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் மகேஸ்வரன் வரவேற்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து முன்னிலை வகித்தார்.
முகாமிற்க்கு கல்லூரி முதல்வர் டி பழனிசாமி தலைமை தாங்கி பேசும்போது
இரத்த தானத்தினால் ஒரு உயிரையே காப்பாற்ற முடிகின்றது. இதனால் அனைத்து
தானங்களிலும் இரத்த தானம் என்பது தானங்களில் சிறந்தது.
பிறந்தநாள் மற்றும் விஷேச நாட்களில் இரத்த தானம் செய்வது அல்லது 3
மாதத்திற்கு ஒரு முறை இரத்த தானம் செய்வது பலருடைய வழக்கமாக உள்ளது. சில
நேரங்களில் இரத்த தானம் வாழங்கும்போது அலைகழிக்கப்பபடுவது வேதனையானது.
எனினும் பலரால் இன்னும் இரத்த தானம் வழங்கப்படுகின்றது.
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பலரும் இரத்தம் கொடுக்க ஆர்வமாக பதிவு
செய்துள்ளது மிகவும் வரவேற்கதக்கது. இதுபோன்ற முகாம்களில் இரத்த தானம்
செய்வதன் மூலம் சந்தேகங்கள் பயம் நீங்கி புதிதாக இரத்த கொடையாளர்கள்
உருவாக வாய்ப்புகளை உருவாக்குகின்றது. இதன் மூலம் பெறப்படும் அவசர
தேவைக்காக பயன்படுத்தபடுகின்றது.
உடலில் சர்க்கரை நோய் மற்றும் இதர நோய்கள் தாக்குவதால் வயதான காலத்தில்
இரத்த தானம் செய்ய இயலாத நிலை ஏற்படுகின்றது. ஆனால் இளைஞர்கள் இரத்த
தானம் வழங்க முன்வருவதால் இரத்த தேவை நிறைவு செய்யப்படுகின்றது.
முகாம்கள் மற்றுமின்றி அவசர தேவைக்கும் இரத்தம் வழங்கப்பட்டு வருவது
பாராட்டுக்குரியது என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது
ஒவ்வொரு 2 நிமிடத்திற்க்கும் விபத்து மூலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு
இரத்தம் தேவைப்படுகின்றது. இரத்ததானம் வழங்குவதன் மூலம் இரத்ததேவை
நிவர்த்தி செய்ய முடியும்.
கல்லூரி மூலம் மாதந்தோறும் அவசர தேவைக்கு 20 யூனிட் வரை இரத்ததானம்
வழங்கப் படுகின்றது பாராட்டுக்குரியது. இளைஞர்கள் தீயபழக்கங்களை
அடமையாகமல் இருக்கவேண்டும்
சுயநலமற்ற சேவையே நாட்ட நலப்பணி திட்டம் அதனை மாணவர்கள் மூலம்
செயல்படுத்துவது சிறப்பிற்குரியது என்றார்.
அரசு மருத்துவர் சாலினி போசும்போது கூடலூர் அரசு மருத்துவமனையில் இரத்த
சோகை, விபத்து, பிரசவம் ஆகியவற்றில் இரத்தம் தேவைப் படுபவர்களுக்கு
இலவசமாக வழங்கப்படுகிறது. யாரேனும் இரத்த சோகையால்
பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் பயன்பெற்றுக்கொள்ளலாம் முகாம்களில்
பெறப்படும் இரத்தம் பல்வேறு பரிசோதனைக்கு பிறகு தேவைப் படுபவர்களுக்கு
இலவசமாக வழங்கப்படுகின்றது என்றார்.
தொடர்ந்து நுகர்வோர் மைய நிர்வாகி ராஜா, பிரகாஷ் ஆகியோர் பேசினார்கள்.
தொடர்ந்து நடைப்பெற்ற இரத்ததான முகாமில் 20க்கும் மேற்பட்ட நாட்டுநலப்பணி
திட்ட மாணவர்கள் இரத்ததானம் செய்தனர்.
இரத்த தானம் செய்தவர்களுக்கு டாலர் அனிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
கூடலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி குழுவினர் மூலம் சேகரிக்கப்பட்ட
இரத்தம் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
முகாமில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள்
பெரும்பாலனவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சிவசங்கரன் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment