உணவு கலப்படம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு


கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில்
உணவு பாதுகாப்பு மற்றும் உணவு கலப்படம்  குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இந்த முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட 

நெஸ்ட் அறக்கட்டளை அறங்காவலர் சிவதாஸ் பேசும்போது

இயற்கை உணவுகளால் உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் கிடைக்கின்றன. 

மாவட்டத்தில் உற்பத்தியாக கூடிய தேயிலை பல்வேறு பயன்களை தருகின்றது. 

 ஆனால் அதில் கலப்படம் செய்வதால் புற்றுநோய் பரவும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.  

உணவு பொருட்கள் தரமானவற்றில்
தரம்குறைந்த பொருட்களை சேர்ப்பதால் உடலுக்கு பல்வேறு பதிப்புகளை ஏற்படுத்துவதோடு இன்று அதிக்கரித்துவரும் புற்றுநோய் தாக்கத்திற்க்கு ஆளாகும் நிலையும் உருவாகின்றது.

கலப்படத்திற்க்கு எதிராக போராட இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சு. சிவசுப்பிரமணியம் பேசும்போது
உணவு சரிவிகித ஊட்டச்சத்து தர கூடிய உணவுகளை எடுத்து கொள்ளவேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது.

காலாவதி உணவுகள் குறித்தும் கலப்பட உணவுகள் குறித்தும் விற்பனை செய்வது தெரிந்தால் உணவு பாதுகாப்பு துறையின் வாட்சப் எண் 94440 42322  மூலம் ஆதாரத்துடன் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க சொல்லலாம்.  

விளம்பரங்களை நம்பி ஊட்டச்சத்து பானங்களுக்கு அடிமையாகவேண்டாம் என்றார்

தொடர்ந்து சாயம் கலந்த தேயிலை தூள் கலப்படம் அறிவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் மைய அமைப்பாளர் ராஜா பயிற்சி மைய ஆசிரியர்கள் மாணவர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...