கடைகளில் சாக்லேட் விற்கக் கூடாது! - புதிய சட்டம்

இனி கடைகளில் சாக்லேட் விற்கக் கூடாது! - புதிய சட்டம்

கடைகளில் சாக்லேட் விற்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மத்திய, மாநில அரசுகளுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 

அதில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சாக்லேட், பிஸ்கட் போன்ற குழந்தைகள் சாப்பிடும் உணவுப் பொருட்கள் விற்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.

சாதாரண பெட்டிக் கடைகளில் சிகரெட், பீடி போன்ற புகையிலை பொருட்களுடன் பிஸ்கட், குளிர்பானங்கள், சாக்லேட் போன்றவையும் விற்பனை செய்யப்படுகின்றன. 

குழந்தைகள் தங்களுக்ககான பொருட்களை வாங்கச் செல்லும்போது அங்கு விற்கப்படும் புகையிலைப் பொருட்களால் கவரப்படுகின்றனர்.

இதனால் சிறு வயதிலேயே புகையிலை பயன்படுத்துவதன் காரணமாகப் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். 

எனவே புகையிலை விற்பனை செய்யும் கடைகளில் குழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது. 

புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வோர் கட்டாயம் அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

இவற்றை, மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் புகையிலைப் பொருட்கள் விற்க உரிமம் பெறும் நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

விரைவில் அனைத்து மாநிலங்களிலும் இதை அமல்படுத்த வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...