கட்டணம் மறுப்பு வழக்கு

கட்டண சலுகை வழங்க மறுத்ததால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு அபராதம்!

விழுப்புரம்: மாற்று திறனாளிக்கு பேருந்தில் கட்டண சலுகை வழங்க மறுத்ததால், அரசு போக்குவரத்து கழகத்திற்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்து விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. மாற்று திறனாளியான இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதியில் இருந்து திண்டிவனத்திற்கு, விழுப்புரம் அரசு கோட்ட பேருந்தில் பயணம் செய்துள்ளார். 
அரசு சலுகைப்படி அரசு பேருந்தில் மாற்று திறனாளிகளுக்கு நான்கில் ஒரு பங்கு கட்டணமே வசூலிக்க வேண்டும்.

ஆனால், இதற்கு மறுத்த பேருந்து நடத்துனர், ராஜேஸ்வரியிடம் முழு கட்டணத்தையும் வசூலித்துள்ளார். 
அரசு சலுகை கட்டணமான 49.50 ரூபாய்க்கு பயணம் செய்ய வேண்டிய ராஜேஸ்வரி, 198 ரூபாய் முழு கட்டணத்தையும் செலுத்தி பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில், அரசு விதிகளை மீறி வசூலித்த கட்டணத்தை திரும்ப பெற்றுத்தருமாறு விழுப்புரம் நுகர்வோர் நீதிமனறத்தில் ராஜேஸ்வரி வழக்கு தொடர்ந்தார். 

அந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், அரசு போக்குவரத்து கழகத்திற்கு 25,000 ரூபாய் அபராதமும், ராஜேஸ்வரியிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட 148 ரூபாயையும் திரும்ப வழங்க வேண்டும் என்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

ஆ.நந்தகுமார்

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...