இரத்ததானம் முகாம்

கூடலூர் கலை அறிவியல் கல்லூரி யில்
நாட்டு நலப்பணி திட்ட நாளை முன்னிட்டு   கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்
கூடலூர் அரசு இரத்த வங்கி.
நெலாக்கோட்டை சமுதாய சுகாதார நிலையம் ஆகியன இணைந்து இரத்ததான முகாமினை நடத்தின.
முகாமிற்க்கு கல்லூரி முதல்வர் டி பழனிசாமி தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து முன்னிலை வகித்தார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது
ஒவ்வொரு 2 நிமிடத்திற்க்கும் விபத்துமூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தம் தேவைப்படுகின்றது.
இரத்ததானம் வழங்குவதன் மூலம் இரத்ததேவை நிவர்த்தி செய்யமுடியும்.  கல்லூரி மூலம் மாதந்தோறும் 20 யூனிட் வரை இரத்ததானம் வழங்கப்படுகின்றது பாராட்டுக்குரியது.
இளைஞர்கள் தீயபழக்கங்களை அடமையாகமல் இருக்கவேண்டும் 
சுயநலமற்ற சேவையே நாட்ட நலப்பணி திட்டம் அதனை மாணவர்கள் மூலம் செயல்படுத்துவது சிறப்பிற்குரியது என்றார்.
அரசு மருத்துவர் சாலினி போசும்போது  கூடலூர் அரசு மருத்துவமனையில் இரத்த சோகை, விபத்து, பிரசவம் ஆகியவற்றில் இரத்தம் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. பெறப்படும் இரத்தம் பல்வேறு பரிசோதனைக்கு பிறகு தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றார்.
நுகர்வோர் மைய நிர்வாகி ராஜா பேசினார்.
தொடர்ந்து நடைப்பெற்ற இரத்ததான முகாமில் 20க்கும் மேற்பட்ட நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் இரத்ததானம் செய்தனர். கூடலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி குழுவினர் மூலம் சேகரிக்கப்பட்ட இரத்தம் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் மகேசுவரன் வரவேற்றார்.
நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சிவசங்கரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...