ஜன.,1 முதல் ரேஷன் கார்டுகளில் உள்தாள் இணைப்பு பணி துவக்கம்

தமிழகத்தில், ரேஷன் கார்டுகளில், 2013க்கான உள்தாள் இணைக்கும் பணி, ஜன., 1ம் தேதி துவங்கி, பிப்ரவரி இறுதி வரை, நடக்க உள்ளது. தமிழகத்தில், இரண்டு கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. ஸ்மார்ட் கார்டு திட்டம் அமலாக்கப்படுவது இழுபறியில் உள்ளதால், புதிய கார்டு வழங்கப்படாமல், உள்தாள் இணைப்பே, இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நீடிக்கிறது. தேசிய அடையாள அட்டைக்காக, போட்டோ, கருவிழி ரேகை பதிவு எடுக்கும் பணி, மாவட்ட வாரியாக நடந்து வருகிறது. இது முடிய, இன்னும் ஆறு மாதத்துக்கு மேலாகிவிடும். அதனால், உள்தாள் இணைப்பு பணியை துவக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்துக்கும், உள்தாள் வடிவமைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு அச்சகத்தில், உள்தாள் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. 

வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜன., 1ம் தேதி முதல், அந்தந்த ரேஷன் கடைகளில், பொருட்கள் வாங்கச் செல்லும் நுகர்வோர், உள்தாளை பெற்றுக் கொள்ளலாம். நாள்தோறும், 150 கார்டுகளுக்கு உள்தாள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பிப்ரவரி இறுதிவரை, உள்தாள் வழங்கும் பணி நடக்க உள்ளதால், பொறுமையாக உள்தாள் இணைப்பை பெறலாம். இந்த உள்தாள் இணைப்பை, ரேஷன் கார்டுகளில் இடம்பெற்றுள்ள குடும்ப தலைவரோ, தலைவியோ வந்து பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் போலி ரேஷன் கார்டுகளை கண்டறியவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



புதிய ரேஷன் கார்டு கிடையாது ஒரு ஆண்டுக்கு உள்தாள் இணைப்பு

கோவை: ரேஷன் கார்டுகளில் மேலும் ஓராண்டுக்கு உள்தாள் இணைத்து பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள 2 கோடி ரேஷன் கார்டுகள் கடந்த 2011ம் ஆண்டே முடிவுக்கு வந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டதால் இந்தாண்டுக்கு வழங்கவேண்டிய புதிய ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக கடையில் பொருட்கள் பெறுவதற்கு வசதியாக ஓராண்டுக்கு செல்லத்தக்க உள்தாள் இணைக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கு வசதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பின் 2ம் கட்டமாக உடற்கூறு பதிவுப்பணி தற்போது நடந்து வருகிறது. இதில் விரல்ரேகைகள், கண் கருவிழி பதிவு செய்யப்படுகிறது. இந்த பணிகள் முடிவுக்கு வர மேலும் பல மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ரேஷன் கார்டு காலாவதியாகும் சூழல் ஏற்பட்டதால் புதிய கார்டு வழங்கப்படுமா அல்லது உள்தாள் இணைக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. தற்போது பயன்பாட்டில் உள்ள கார்டில் வரும் 2013ம் ஆண்டுக்கான உள்தாள் இணைத்து செல்லத்தக்க காலத்தை நீடித்து தமிழக அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலர் நிர்மலா உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவில் கூறியிருப்பதாவது: தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் செல்லத்தக்க காலம் ஜனவரி 1ம் தேதி முதல் 2013 டிசம்பர் 31 வரை மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்படுகிறது. புழக்கத்தில் உள்ள கார்டுகளில் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீடிக்கும் வகையில் உள்தாளை அச்சடித்து ஒட்டவும், அதற்கான ஒரு பக்கத்தில் 2013ம் ஆண்டுக்கும், மறுபக்கத்தில் 2014ம் ஆண்டுக்கும் பயன்படுத்தும் வகையில் உள்தாள் அச்சடிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 2012க்கான வழங்கல் பதிவேட்டை புதுப்பித்தல் பதிவேடாக பயன்படுத்தி அதில் குடும்ப அட்டைதாரர் அல்லது குடும்ப உறுப்பினர் கையொப்பம் பெற்றுக்கொண்டு குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டி 2013ம் ஆண்டுக்கான புதுப்பித்தல் முத்திரை பதிவு செய்யப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. உத்தரவை அரசு வெளியிட்டுள்ள போதிலும் மாவட்டங்களில் உள்தாள் இணைப்பு பணிகள் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தான் துவங்கும் என தெரிகிறது.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...