இன்று நோய்களை வரவேற்கும் மைக்ரோ வேவ் சமையல் பற்றிய தகவல்.

இன்று நோய்களை வரவேற்கும் மைக்ரோ வேவ் சமையல் பற்றிய தகவல்.



ஆச்சரியம் தான்பா... ரெண்டே ரெண்டு நிமிஷம்... பொறியலைச் செய்து விட்டேன்... காலை அவசரத்துக்கு, மைக்ரோ வேவ் ஓவன்' எவ்ளோ, "யூஸ்'ஆகுது பார்...' என, நண்பயிடம் பெருமைப்படக் கூறுகிறீர்களா..?

"கீழே உள்ள கட்டுரையைப் படியுங்க...' - இப்படி நாங்கள் சொல்வதற்கு முன், "அதெல்லாம் ஒண்ணுமில்லே... மைக்ரோவேவ் ஓவன் தயாரிப்பாளர் யாராவது விளம்பரம் கொடுக்காம இருந்திருப்பாங்க... அவங்களை மடக்க, இந்தக் கட்டுரையை வெளியிட்டிருக்கீங்க...' என்ற எண்ணம், மனதில் மிக வேகமாக மின்னி மறைகிறதா... மேலே படியுங்கள்!

மைக்ரோவேவ் ஓவன்களில், மின் - காந்த அலை, ஒரு மெலிந்த குழாய் வழியே செல்லும் போது, வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருள் மீது, மாறுதிசை மின்னோட்ட இயல்புடன் விழுகிறது. மாறுதிசை மின்னோட்டத்தின் இயல்பே, ஒரு மூலக்கூறில் உள்ள நேர் - எதிர் துருவங்களை, மாற்றி அமைப்பது தான். இதனால், மைக்ரோவேவ் ஓவனில் வைக்கப்படும் உணவுப் பொருளில் உள்ள ஒவ்வொரு மூ லக்கூறும், நேர் திசை - எதிர்திசை சுழற்சிக்கு உட்படுகிறது. ஒரு நொடிக்கு, குறைந்தபட்சம் 2,000 முறை, மூ லக்கூறுகள், சுழற்சிக்கு உட்படுகின்றன.

சுழற்சியின் போது மூலக்கூறுகள் ஒன்றின் மேல் ஒன்று மோதி, உணவில் சூட்டை ஏற்படுத்துகிறது. இந்த துருவ மாற்றம் மற்றும் மோதலால், உணவுப் பொருளின் மூலக்கூறு அமைப்பே மாறுபட்டு விடுகிறது.

அதாவது, நமக்கு "ஷாக்' அடித்தால் உடலுக்கு என்ன ஆகுமோ, அதை போல் தான் உணவுக்கும் "மைக்ரோவேவ் ஒவனில்' நடக்கிறது. இந்த உணவைச் சாப்படுவோர் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும்.

பாதிப்புகள்...

* ரத்தத்தில் ஹீமோகுளோபன் அளவு குறைகிறது.
* உடலுக்கு நன்மை விளைவிக்கும் எச்.டி. எல்., கொழுப்பு குறைகிறது.
* ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் அளவு அதிகரி க்கிறது.
* நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும், ரத்த வெள்ளை அணுவில் காணப்படும், "லிம் போஸைட்' குறைகிறது.
* ரேடியோ கதிர்கள் ஊடுருவிய உணவுப் பொருட்களைச் சாப்பட நேர்கிறது. இதனால் புற்றுநோய் ஆபத்து ஏற்படுகிறது.
* உணவுப் பொருட்களின் சத்து குறைகிறது. மாறுபட்ட மூ லக்கூறுகளுக்கு நம் உடல் பரிச்சயப்படாததால், அவற்றை ஜீரணிக்க முடியாமல், அவை உடலிலேயே தங்குகின்றன. இதனால், உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.

அவை:
* ஆண்/ பெண் ஹார்மோன் உற்பத்தி குறைகிறது.
* வயிறு, குடல் புற்றுநோய் உருவாகிறது. ரத்தத்தில் புற்றுநோய் செல்கள் வளர வழி வகுக்கிறது.
* உடலின் முக்கிய சுரப்பகள் செயலிழக்கின்றன. இதனால், நோய் எதிர்ப்புத் திறன் குறைகிறது. நினைவுத் திறன், கவனம், மன வலிமை, சாதுர்யம் ஆகியவை குறைகின்றன.

சூரியனிடமிருந்து கூட, மின்காந்த அலைகள் வெளிப்படுகின்றன. அவை பாதிப்பு ஏற்படுத்துவதாக யாரும் கூறவில்லையே?' என, நீங்கள் கேட்கலாம். அவை, நேரடி மின்னோட்ட இயல்புடன், பூமியின் பரந்த பரப்பளவை அடைகின்றன. இதனால், பூமியில் காணப்படும், உயிருள்ள - உயிரற்ற எந்தப் பொருளுக்கும் பாதிப்பு ஏற்படுவதில்லை...!

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...