.நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் குறைவு மின் உற்பத்திக்கு பாதிப்பு வரும் அபாயம்

மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் முக்கிய நீர் பிடிப்பு பகுதிகள் வறண்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 13 மின் நிலையங்கள் மூலம் 750 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் மாவட்டம் முழுவதும் போதுமான மழை பெய்யவில்லை. இதனால், அணைகளுக்கு தண்ணீர் வரும் நீரோடைகளில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. ஏற்கனவே, அணைகளில் சேமித்து வைக்கப்பட்ட தண்ணீரும் அவ்வப்போது மின் உற்பத்தி பயன்படுத்தப்பட்டு வருவதால், அணைகளிலும் தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது. மஞ்சூர் பகுதியை சுற்றி குந்தா, கெத்தை, பரளி, பில்லூர் ஆகிய மின் நிலையங்களுக்கு, அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதிகள் மூலம் தண்ணீர் வருகிறது. ஏற்கனவே பருவமழை பொய்த்த காரணத்தால், போர்த் தியாடா உட்பட நீர் பிடிப்பு பகுதிகள் வறண்டு வருகின்றன. இதனால், மின் உற்பத்தி பாதிக்க வாய்ப்புள்ளது.

அணை உயரம் இருப்பு
(அடியில்)
1. முக்கூர்த்தி 18 5.9
2. பைக்காரா 89 65.3
3. சாண்டிநல்லா 49 21.4
4. கிளன்மார்கன் 33 20.5
5. மாயார் 17 11.5
6. அப்பர்பவானி 210 160.9
7. பார்சன்ஸ்வேலி 77 40.5
8. போர்த்தி மந்து 130 104.5
9. அவலாஞ்சி 171 105
10 எமரால்டு 184 110.5
11 குந்தா 89 81.2
12 கெத்தை 156 136
13 பில்லூர் 242 222

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...