தமிழகத்தில் இளம் பெண்கள் 70 சதம் பேருக்கு ரத்தசோகை நோய்

தமிழகத்தில், 70 சதவீதம் இளம்பெண்களுக்கு ரத்தசோகை நோய் இருப்பதால், பள்ளிகளில் மாணவியர் ஊட்டத்துடன் இருக்க விளக்கம் அளிப்பதுடன், வாரம் ஒருமுறை இரும்பு சத்து மாத்திரை உட்கொள்ள வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் உள்ள, "ஹீமோ குளோபின்' அளவு குறைவதால், ரத்தசோகை நோய் ஏற்படுகிறது. இதுகுறித்து பள்ளிகளில், மாணவியர் தெரிந்து கொள்ளும் வகையில், "ரத்தசோகை நோயை தடுப்போம்; வளர் இளம்பெண்களின் வாழ்வை காப்போம்' என்ற புத்தகத்தை வழங்கி வருகின்றனர். இதில், ரத்தத்தில் எவ்வளவு ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்; எவ்வளவு குறைந்தால் ரத்தசோகை ஏற்படும்; இதனால் ஏற்படும் பாதிப்புகள்; ஆண்களை விட பெண்களிடம், இது ஏன் அதிகமாக காணப்படுகிறது; அறிகுறிகள்; இரும்பு சத்து நிறைந்த உணவு வகைகள்; ரத்தசோகை வராமல் இருக்க பெற்றோர், ஆசிரியர்களின் பங்கு போன்றவை விளக்கப்பட்டுள்ளன.-

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...