ஊட்டி:"தரமற்ற உணவு பண்டங்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு, மருந்து நிர்வாக துறை, நீலகிரி மாவட்ட நியமன அலுவலர் ரவி, வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நீலகிரியில், இதுவரை 30 சதவீத கடைக்காரர்கள் மட்டுமே, உணவு தரக்கட்டுப்பாட்டின் கீழ் உரிமம் பெற்றுள்ளனர். உரிமம் மற்றும் பதிவை அடுத்தாண்டு பிப்.,4ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும்.
இறைச்சி கடை உரிமையாளர்கள், கால்நடை மருத்துவரின் சான்றிதழ் பெற்ற பிறகே, வதைக்கூடத்தில் வதம் செய்யப்பட்ட இறைச்சிகளை விற்க வேண்டும். கெட்டுப்போன, நாள்பட்ட இறைச்சிகளை விற்க கூடாது. மீன் கடை உரிமையாளர்கள், தரமான மீன்களையே விற்க வேண்டும்; வியாபார நோக்கில் தரமற்ற, அழுகிய, அம்மோனியா கலந்த மீன்களை விற்க கூடாது. இத்தகைய தவறுகள், ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பண்டிகை காலம் மற்றும் கோடை சீசன் வரவுள்ள நிலையில், ஓட்டல், பேக்கரி உரிமையாளர்கள் தங்களின், இருப்பிடத்தை சுத்தம், சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும். தரமான உணவுகளையே விற்க வேண்டும்.
தவறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காலாவதி, கலப்பட பொருட்களை விற்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாலையோர கடைகள், இரவு கடைகள் வைத்திருப்போர் தரமான பொருட்கள், எண்ணெய்களையே பயன்படுத்த வேண்டும்.
புகார்களை, "மாவட்ட நியமன அலுவலர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை
(உணவு பாதுகாப்பு பிரிவு), அரசு கலைக்கல்லூரி அருகில், ஸ்டோன் ஹவுஸ்ஹில் அஞ்சல், ஊட்டி'
என்ற முகவரியில் அல்லது
0423-2450088
என்ற தொலைபேரி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு, ரவி கூறியுள்ளார்.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
No comments:
Post a Comment