தரமான பொருள்களை நியாயமான விலையில் பெற நுகர்வோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்


கூடலூர்:"தரமான பொருள்களை நியாயமான விலையில் பெற நுகர்வோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டது.
கூடலூர் ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில், "குடிமக்கள் நுகர்வோர் மன்றம்' துவக்க விழா நடந்தது. 

பள்ளி தலைமை ஆசிரியர் போஜன் தலைமை வகித்தார். 
வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் மன்றத்தை துவக்கி வைத்து பேசுகையில்,""இன்று போலியான பொருள்கள் அதிகளவில் புழகத்தில் உள்ளன. குறைந்த விலையுடன் இலவச பொருள்கள், தள்ளுப்படி என விற்பனை செய்யப்படும் தரமற்ற பொருள்களை வாங்கி மக்கள் ஏமாறுகின்றனர். இந்நிலை மாற வேண்டும்; தரமான பொருள்களை நியாயமான விலையில் பெற நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும். நுகர்வோர் விழிப்புணர்வு பெற, 'குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தினர்' ஈடுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்,'' என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,""நுகர்வோர் எல்லா நிலையிலும் மற்றவர்களை சார்ந்த இருக்கு வேண்டிய நிலையுள்ளது. தங்கள் தேவைகளை நிறைவு செய்ய தரமான பொருள்களை தேர்வு செய்வதில் ஏமாறுகின்றனர். கவர்ச்சி விளம்பரத்தில் தரமற்ற போலி பொருள்களை வாங்கி ஏமாறுகின்றனர்.
இதனை தவிர்க்க நுகர்வோர் மன்றங்கள் மூலம், மாணவர்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.

விழாவில், குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி வரவேற்றார்.

கூடலூர் நுகர்வோர் மையத்தின் நிர்வாகி வேலுப்பிள்ளை, ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். 

ஆசிரியர் அன்பழகன் நன்றி கூறினா

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...