குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்கப்பட்டது.

கூடலூர், டிச.3:
ஸ்ரீமதுரை அரசு மேல்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் மையம் சார்பில் துவக்கப்பட்ட நுகர்வோர் மன்ற துவக்க நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் போஜன் தலைமை வகித்தார்.
வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் கலந்து கொண்டார்.
மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு பிரதிநிதி சிவசுப்ரமணியம் மற்றும் பலர் பேசினர்.
போலியான பொருட்களை கண்டறியவும், குறைந்த விலை, இலவசம் என்ற போர்வையில் தரமற்ற பொருட்களை கண்காணித்து வாங்க வேண்டும். போலி பொருட்களை வாங்குவதை தவிர்க்கவும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நுகர்வோர் மன்ற நிர்வாகி வேலு பிள்ளை, ஆசிரியர்கள், நுகர்வோர் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி வரவேற்றார். ஆசிரியர் அன்பழகன் நன்றி கூறினார்.
குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்கம்

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...