ஒரே முகவரியில் இரு ரேஷன் கார்டு : "தத்கல்' முறையில் வழங்க திட்டம்

ஒரே முகவரியில், ஒரே வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர், இரண்டு ரேஷன் கார்டுகள் பெற விரும்பினால், ஒரு கார்டுக்கு பொருட்கள் இல்லா, முகவரி கார்டினை, தத்கல் முறையில் வழங்கும் திட்டம், தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில், 2 கோடிக்கும் மேல், ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இவற்றில், 1.97 கோடி கார்டுகளுக்கு, அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த, 2005ல் அளிக்கப்பட்ட ரேஷன் கார்டு, 2009ல் முடிந்த நிலையில், இணைப்புத் தாள் வழங்கப்பட்டது. ரேஷன் தாள் இணைப்புக்கு பதிலாக, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு காலதாமதம் ஆகும் என்பதால், ரேஷன் கார்டுகளில், இந்தாண்டிற்கும் இணைப்புத்தாளை சேர்க்கும் பணிகள் துவங்க உள்ளன. போலி கார்டுகளை தடுக்கவும், இருக்கும் கார்டுகளை முறைப்படுத்தவும், ஒரே முகவரியில் இருக்கும் ரேஷன் கார்டை, பொருட்களுக்காகவும், காஸ் சிலிண்டர் பெறவும், இரண்டாக பிரிக்கப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் மானிய விலையில் சிலிண்டர் தருவதில் மத்திய அரசு எடுத்த முடிவைத் தொடர்ந்து, சிலிண்டர் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. இதை கருத்தில் கொண்டு, ஒரே முகவரியில் இருக்கும் கார்டை, இரண்டாக பிரிப்பதில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஒரே முகவரியில், ஒரே வீட்டில் வாழும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களில், திருமணமான மகனோ, மகளோ பிரிந்து அதே வீட்டில், மற்றொரு பகுதியில் வசித்தால், அவர்களுக்கு அதே முகவரியில், மற்றொரு கார்டு தரப்படும். அந்த கார்டு,வெறும் முகவரி கார்டாக மட்டுமே இருக்கும்; பொருட்கள் வாங்க முடியாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த கார்டை, தத்கல் முறையில், 100 ரூபாய் செலுத்தி, அந்தந்த பகுதி வட்டார வழங்கல் அலுவலகங்களில், ஒரே மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...