உதவிபெற அணுகும் சமயம் (When to approach for aid)
உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடுக்கவோ, எதிர்த்து வழக்காடவோ நேரிடும் சூழல்களில், மத்தியதர வருமான சமுதாயத்தை வழக்காடுபவர் அணுகலாம்; அச்சூழல்கள் பின்வருவனவற்றையும் தன்னுள் கொண்டிருக்கும்;
a) மேல் முறையீடு/சிறப்பு விடுமுறை மனுக்கள், உரிமையியல் அல்லது குற்றவியல், உயர் நீதிமன்ற ஆணைக்கு எதிரான வழக்கு,
b) நீதிப்பேராணை மனு (Writ Petition)/ஆட்கொணர்வு மனு (Habeas Corpus)
c) உரிமையியல் அல்லது குற்றவியல் வழக்கு ஒரு மாநிலத்தில் தேங்கி இருக்குமானால் அதனை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரும் மனு மற்றும்
d) உச்சநீதிமன்ற சட்டச்செயல்பாடுகள் குறித்த சட்ட ஆலோசனை.
செயல்படும் முறை (How it works)
• உச்சநீதிமன்ற நடுத்தர வருமானத்தினரின் சமுதாயம், பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞரையும் உறுப்பினராகக் கொண்ட வழக்கறிஞர் குழுவினை (panel of Advocates) கொண்டுள்ளது. இக்குழுவினை உருவாக்கும்போது ஒரு வழக்கறிஞரை, ஆனால் இரண்டுக்கு மேற்படாத வழக்கு நடைபெறும் நீதிமன்ற மாநிலத்தின் வட்டாரமொழி தெரிந்த வழக்கறிஞரை உறுப்பினராகக் கொள்ள வேண்டும் என்பது கவனத்தில் கொள்ளப்படுகிறது.
• வழக்கறிஞர்கள் குழு, ஒரு வழக்கில் பங்குபெறும்போது இத்திட்டத்தின், சட்டங்களுக்கு உட்படுவதாக எழுத்து மூலம் உறுதியளிக்கிறது.
• ஆணையத்திலுள்ள (Committee) 3 வழக்கறிஞர்கள், விருப்ப அடிப்படையில் குழுவிற்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். விண்ணப்பதாரர், வழக்குரைப்பவர் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் அல்லது வழக்காடும் ஆலோசகர் (arguing counsel) அல்லது உயர் ஆலோசகர் (Senior Counsel) இவர்களில் யாராவது மூவரைச் சுட்டிக்காட்டலாம். விண்ணப்பதாரரின் தேர்வினை குழு மதிக்க முயலும்.
• பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர், வழக்காடும் ஆலோசகர் மற்றும் உயர் ஆலோசகர் இவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் வழக்கினை அளிக்க குழுவினருக்கு உரிமையுண்டு.
விண்ணப்பதாரரின் மனுவினை பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர், வழக்காடும் ஆலோசகர், உயர் ஆலோசகர் இவர்களின் யாருக்கு வேண்டுமானாலும் தரும் உரிமை உச்சநீதிமன்ற (நடுத்தர வருமானக்குழு) சட்ட உதவி சமுதாயத்திடம் (Supre
சட்ட உதவிக்காக அணுக வேண்டிய இடம். (Where to approach for legal aid)
• விருப்பமுள்ள வழக்குரைப்போர் உச்சநீதிமன்ற நடுத்தர வருமான குழுவினரின் சட்ட உதவி மையத்தின் செயலரை அணுகும் முன் மையத்தால் அளிக்கப்படும் ஒரு படிவத்தினை நிரப்பி அதற்குரிய ஆவணங்களோடு குழுவின் செயலரை அணுக வேண்டும்.
(விலாசம்:- Supreme Court Middle Income Group Legal Aid Society, 109- Lawyers Chambers, Post Office Wing, Supreme Court Compound, New Delhi-110001)
• மனுதாரரின் மனுவை வாங்கியப் பின் சட்ட உதவிக்குழுவானது (legal aid society) அம்மனுவினை பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞரிடம் கொடுத்து, அவ்வழக்கு மேற்கொண்டு ஆவன செய்வதற்கு ஏதுவானதா என்பதை ஆய்ந்தறிந்த பின்னரே, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
• மனுதாரர் இத்திட்டத்தின் பயன்களை அனுபவிக்கலாம் என்று கற்றறிந்த, பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர் என்று கூறினால், மட்டுமே இத்திட்டத்தின் பயன்களை மனுதாரர் அனுபவிக்க முடியும்.
அவ்வாறு மனுதாரரின் விண்ணப்பத்தில்/ வழக்குத் தாள்களில் பதிவு செய்த வழக்கறிஞர் மேலொப்பமிட்ட பின், (endorsement) உச்சநீதிமன்ற நடுத்தர வருமான சட்ட உதவிக்குழு, (Supreme Court Middle Income Group Legal Aid Society) மனுதாரரின் மனுவினை மனுதாரரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு சேவை வரியாக ரூ.350/- மட்டுமே வசூலிக்கும்.
சட்ட உதவிக்கான கட்டணம் (Fee for legal aid)
இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வழக்கிற்கேற்ப ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டணத்தை செயலர் சுட்டிக்காட்ட, அத்தொகையை மனுதாரர் செலுத்த வேண்டும்.
அக்கட்டணத்தை செலுத்திய பின்னரே செயலர், வழக்கினை, நடுத்தர வருமானக்குழுவின் சட்ட உதவித்திட்டத்தின் (MIG Legal Aid Scheme) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர் / வாதாடும் ஆலோசகர் / குழுவின் மூத்த ஆலோசகரிடம் வழக்கின் தன்மை குறித்து கேட்பார்.
• ஏற்படக்கூடிய செலவுகளின் அடிப்படையில் செயலரால் கூறப்படும் தொகையை, விண்ணப்பதாரர் ரொக்கமாகவோ, காசோலையாகவோ செலுத்த வேண்டும்.
• விண்ணப்பங்களை அச்சிடுதல் மற்றும் இதர அலுவலகச் செலவுகளை இத்திட்டத்தின் ஆரம்பத்தொகை ஏற்றுக்கொள்ளும்.
பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்/வழக்கறிஞரின் கட்டணம் குறித்த செய்திகள்.(Schedule of fee for advocate on record /advocates)
வழக்குத் தொடுப்பவர்களிடமிருந்துத் தேவைப்படும் ஆவணங்கள் (Documents required from the litigants)
மனுதாரர்கள் தங்கள் மனுவை நடுத்தர வருமான குழுவினுக்கு (MIG Society) சமர்ப்பிக்கும்போது முழுமையான ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக ஒருவர் அல்லது ஒரு பெண்மனி உயர்நீதி மன்றத்தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடுக்க விரும்பினால், அவர் உயர்நீதிமன்ற தீர்ப்பின் நகல், அவர் உயர்நீதிமன்றத்தில் கொடுத்த மனுவின் நகல், கீழ் கோர்ட்டில் தரப்பட்ட தீர்ப்பின்/ஆணையின் நகல் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தையும் தனது மனுவுடன் சமர்ப்பிக்கவேண்டும்.
மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் அனைத்தும் ஆங்கிலமில்லாத வேறு ஒரு மொழியில் இருக்குமானால் அவைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
• செயலரால் கணிக்கப்பட்டு அட்டவணைப்படுத்தப்பட்ட கட்டணமும் இதர செலவுகளுக்கான பணமும்,
• இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு (Supreme Court Middle Income Group Legal Aid Society)
இந்தியாவைப் பொருத்தவரை ஒவ்வொரு மதத்திற்கும் மணவிலக்குச் சட்டங்கள் தனியே உண்டு. அதேபோன்று சாதி மற்றும் மதத்தை மறுத்து திருமணம் செய்தவர்களுக்கு சிறப்பு திருமணச் சட்டம் (Special Marriage Act ), 1954 உண்டு.
இந்து என்று அழைக்கப்படும் மக்கள் அனைவரும் இந்து திருமணச் சட்டம் (Hindu Marriage Act) 1955 மூலம் மணவிலக்குப் பெற முடியும். சீக்கிய மதம், ஜெயினமதம், புத்த மதம் ஆகிய மதங்களும், இந்து மதத்தின் கிளை மதங்களாகவே இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகின்ற காரணத்தால் அவர்களுக்கும் இந்து திருமணச்சட்டம் பொருந்தும்.
இசுலாமியர்களைப் பொருத்தவரையில் இசுலாமிய திருமண ரத்துச் சட்டம் (Dissolution of Muslim Marriages Act, 1939)மூலம் மணவிலக்குப் பெறலாம். அதே போன்று கிறித்துவர்கள் இந்திய மணவிலக்குச் சட்டம் (Indian Divorce Act, 1869) மூலம் மணவிலக்குப் பெறலாம். பார்சி மதத்தினர் பார்சி திருமண மற்றும் மணவிலக்குச் சட்டம் (The Parsi Marriage and Divorce Act, 1936) மூலம் மணவிலக்குப் பெறலாம்.
அதேபோன்று மணவிலக்குப் பெற விரும்பும் சாதி மற்றும் மத மறுப்பு திருமணம் செய்தவர்கள் சிறப்புச் சட்டம் (Special Marriage Act, 1954) மூலம் மணவிலக்குப் பெறலாம்.
இந்து திருமணச் சட்டத்தில் மணவிலக்கு பெறும் வழிமுறைகள்
இந்து திருமணச் சட்டம் (Hindu Marriage Act, 1955) மூலம் மணவிலக்குப்பெற கீழ்கண்டவற்றில் உள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நிலையினை நிரூபிக்க வேண்டும்.எதிர் மனுதாரர் கூடாஒழுக்கம் (Adultery) கொண்டவராக இருத்தல், கைவிடுதல் (Desertion), கொடுமைப்படுத்துதல் (Cruelty), இனப்பெருக்கத்திறனற்ற நிலை அல்லது ஆண்மையின்மை (Impotency) கொண்டவராக இருத்தல், நாள்பட்ட நோய் கொண்டு இருத்தல் (Chronic Disease).
கொடுமைப்படுத்துதல் (Cruelty)
கொடுமைப்படுத்துதல் (Cruelty) என்று வரும்போது, தொடர்ந்து இரண்டு வருடங்கள் மனுதாரரைப் பிரிந்து வாழ்ந்தால் அது கொடுமைப்படுத்துதல் என்ற விளக்கத்திற்குள் வரும். அதேபோல் இந்து மதத்தைத் துறந்து வேறு மதம் மாறியிருந்தாலும் அதுவும் கொடுமைப்படுத்துதல் என்ற விளக்கத்திற்குள் வரும்.
இந்து திருமணச் சட்டம் (Hindu Marriage Act )1955 மூலம் இருதரப்பும் மனமுவந்து மணவிலக்குப் பெறுவதும் சாத்தியமே. இதன் மூலம் ஆறு மாதங்களில் மணவிலக்கிற்கான விசாரணை முடிவுற்று பணமும்-நேரமும் வீணாக்கப்படுவதைத் தடுக்க முடியும். இந்து திருமணச் சட்டத்தின் படி 13-B மூலம் மணவிலக்கு பெறலாம்.
இதன்படி விருப்பப்பட்டு கணவனும், மனைவியும் மணவிலக்குப் பெற குறைந்தபட்சம் ஒரு ஆண்டு தனியாகப் பிரிந்து வாழ்ந்திருக்க வேண்டும். இருவரும் மனமுவந்து பிரியும் நிலையில் மாவட்ட நீதிமன்றத்தில் மனு போட வேண்டும். எழுத்துத் தரவுகளை உள்ளடக்கிய உறுதிமொழியும் உடன் இணைக்கப்பட வேண்டும் (affidavit).
முதல் மனு (First Motion Petition) போட்டு ஆறு மாதங்கள் கழித்து இரண்டாவது மனு (Second Motion Petition) போட வேண்டும் என்பது விதிமுறை.
நீதிபதி இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டப்பின்னர், இருவரும் சேர்ந்து வாழ வழியில்லை என்று உறுதி செய்த பின்னர் மணவிலக்கு உறுதி செய்யப்படும். இதன் கீழ் குழந்தை யாருடன் இருப்பது?, மனைவிக்கு வாழ்வாதார நிதி, திருமணத்தின்போது தரப்பட்ட சீதனத்தைத் திருப்பிக் கொடுத்தல், வழக்குச் செலவு என்று அனைத்தும் எழுதி மணவிலக்கினைப் பெற்றுக் கொள்ளலாம்.
சுயமரியாதை திருமணம்
தமிழ்நாட்டில் சடங்குகள், புரோகிதர், தாலி, அக்னி, சப்தபதி இல்லாத சுயமரியாதை திருமணங்கள் செல்லும் என்று அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது 1967 - இல் சட்ட வரைவு கொண்டுவந்து, பின் 1968 இல் அதனை சட்டமாக்கினார்.
கிறித்துவ மதத்தைப் பொருத்தவரை அவர்களின் வேதம், கடவுளால் இணைக்கப்பட்டவர்களை மனிதர்கள் பிரிக்கக் கூடாது என்று கூறி வந்தமையால், பல்வேறு சட்டச் சிக்கல்கள் அவர்கள் மணவிலக்கு பெறுவதில் இருந்து வந்தது. உயர்நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் வழங்கும் மணவிலக்கை உறுதி செய்தால் மட்டுமே மணவிலக்குச் செல்லும் என்ற நிலை இருந்தது.
ஆனால் இந்திய மணவிலக்குச் சட்டம் (திருத்தம்) 2001 இன் படி மாவட்ட நீதிமன்றங்கள் வழங்கும் மணவிலக்கை உயர்நீதிமன்றம் உறுதி செய்யத்தேவை இல்லை என்று திருத்தியது
இசுலாமிய மணவிலக்கு முறை
இசுலாமிய திருமணம் என்பது ஒப்பந்தம். நிக்காஹ் எனப்படுவது இரண்டு பேரை இணைக்கின்றது.கணவன் நீதிமன்றம் செல்லாமலேயே மனைவியை மணவிலக்கு செய்யலாம். அதற்கு எந்தக்காரணமும் தேவையில்லை. தலாக் என்ற சொல்லை கணவன் மூன்று முறை கூறி விட்டால் (முத்தலாக்கு) அந்தத் திருமணம் ரத்து செய்யப்படும். தலாக் என்றால் திருமண ஒப்பந்தத்திலிருந்து மனைவி விடுவிக்கப்படுகிறாள் என்று பொருள்.
தலாக் சொல்லப்படும் முறைகள்
அஹ்சான் ஒரு முறை தலாக் சொல்வது. இந்தக் காலத்தில் மாற்றிக் கொள்ளலாம்.ஹஸ்ஸான் 3 முறை கால இடைவெளி கொடுத்து சொல்வது. 3வது முறை சொல்வது இறுதியானது.தலாக் – ஏ- பித்தத் – ஒரே நேரத்தில் 3 முறை தலாக் சொல்வது.தலாக்- ஏ-தஃப் வீத் – கணவன் தன் சார்பாக தலாக் சொல்ல வேறு ஒருவருக்கு அதிகாரமளிப்பது.முபாரா – கணவன் – மனைவி இருவரும் ஒப்புக் கொண்டு மணவிலக்கு செய்தல்.குலா – மனைவி மணவிலக்கு கோருதல். குலா முறைப்படி மணவிலக்கு பெற்றால் மனைவி மெஹர் தொகையை இழக்க நேரிடும்.
அறிமுகம்
பணமில்லாத ஏழை மக்கள், தங்கள் வழக்கை நடத்த சட்ட உதவி அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகின்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையினால் எந்தவொரு இந்திய குடிமக்களுக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது என்று இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 39-A வலியுறுத்துகின்றது.
ஒரு அரசின் கடமை, அதன் குடிமக்கள் அனைவரும் சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்பட வேண்டும் மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கிட உறுதி செய்ய வேண்டும் என்பதே என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 14 மற்றும் 22(1) வலியுறுத்துகின்றது.
குற்றவியல் நடைமுறை 304 இன் படி குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவியல் நடுவர் முன் நிறுத்தப்படும் அந்த நேரத்தில் இருந்தே, அவருக்கு பண வசதி இல்லாத நிலையில் சட்ட உதவி வழங்கிட வேண்டும் என்றும், பின் எப்போதெல்லாம் அந்த குற்றம் சாட்டப்பட்டவர் காவல் நீட்டிக்கப்படுகின்றதோ, சட்ட உதவி தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
1980-இல் உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் திரு. P.N. பகவதி அவர்கள் தலைமையில் தேசிய அளவில் சட்ட உதவிகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு “CILAS “(Committee for Implementing Legal Aid Schemes) என்னும் பெயரால் வழங்கப்பெற்றது.
1987 இல் Legal Services Authorities Act என்ற சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள சட்ட உதவி மையங்கள் ஒரே வடிவங்களில் செயல்பட வழிவகுத்தது. இந்தச் சட்டம் இறுதியாக 1995 நவம்பர் ஒரு சில திருத்தங்களுக்குப் பின் செயல்பாட்டிற்கு வந்தது.
free legal advice 1972 ஆம் ஆண்டு நீதியரசர் கிருஷ்ணா ஐயர் தலைமையில் சட்ட உதவி யாருக்கெல்லாம் வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது.
சட்ட உதவிகள் பெறுபவர்கள்
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள்மலைவாழ் மற்றும் பழங்குடி மக்கள்விவசாய மக்கள்எல்லையில் நெடுங்காலம் பணியாற்றும் இராணுவ சிப்பாய்கள்சமூகத்தில் பின்தங்கிய மகளிர் மற்றும் குழந்தைகள்தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்கள்
இவர்கள் அனைவருக்கும் சட்ட உதவி வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது. உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகள் மூலம் சட்ட உதவி வறியவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று உறுதி செய்தது.
வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் வறுமையில், தனிக்காவலில் இருக்கும் நிலையில் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள அவருக்கு உரிமை இருக்கின்றது. அந்த உரிமையை அரசு அவருக்கு வழங்க வேண்டும்.
இலவச சட்ட உதவி ஒருவருக்கு மறுக்கப்படுவது என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 21 க்கு எதிரானது என்று கூறியது.
சட்டத்தின் ஆட்சி என்பது தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அமைப்பு. ஒருவருக்கு சட்ட உதவி வழங்கப்படவில்லை என்றால், ஒரு வழக்கின் விசாரணையே சீர்குலைக்கப்படுகின்றது என்று கூறியது.
National Legal Services Authority (NALSA) – என்ற ஆணையம் தேசிய அளவில் நிறுவப்பட்டு பொருளாதரத்தில் பின் தங்கியவர்களுக்காக சட்ட உதவி வழங்கிடவும், விரைவாக நீதி வழங்கும் லோக் அதாலத் (Lok Adalat) ஏற்படுத்தவும் செயல்படுகின்றது.
சட்ட உதவி வேண்டி தரப்படும் மனு, மனு தந்த நபருக்கு போதிய பண வசதி இருக்கின்றது என்று தெரியவரும் பட்சத்தில் நிராகரிக்கப்படலாம். அப்படி நிராகரிக்கப்பட்ட மனுவின் மீது மனுதாரர் மேல்முறையீடும் செய்யலாம்.
வழக்குகள்
அவதூறு வழக்கு,பழிவாங்கும் வழக்கு,நீதிமன்ற அவமதிப்பு,உறுதி மொழியில் பொய் கூறுதல்,தேர்தல் தொடர்பான வழக்குகள்,அபராதம் 50 ரூபாய் மேல் இல்லாத வழக்கு,பொருளியல் சார்ந்த குற்றங்கள்
போன்ற குற்றங்களுக்கு இலவச சட்ட உதவி பொருந்தாது. சட்ட உதவி என்பது பிச்சை அல்ல அது உரிமை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே அதன் இலக்கு.
கிராமப் பஞ்சாயத்துக்கான பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளராக கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.பிறப்பு / இறப்புக்கானப் பதிவுகள் – மேற்கொள்ள கிராம நிர்வாக அலுவலர் அதற்கான சட்டம் மற்றும் விதிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
பிறப்பு
ஒரு குழந்தையின் முதல் உரிமை, பிறப்பு பதிவுதான்
பிறப்பு / இறப்புக்கான சட்டம்
1969-ஆம் ஆண்டின் பிறப்புகள் மற்றும் இறப்புகள் சட்டம் (மத்தியச் சட்டம் 18/1969)தமிழ்நாட்டில் 2000-ஆம் ஆண்டில் பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது,தமிழ்நாட்டில் திருத்தியமைக்கப்பட்ட புதிய செயல்திட்டம் (Revamped system). தமிழ்நாட்டில் 01-01-2000 முதல் செயல்பட்டு வருகிறது.
: 2000-ஆம் ஆண்டில் பிறப்பு / இறப்பு பற்றி புதிய திட்டத்தின் நோக்கங்கள்
பதிவேடுகள், அறிக்கை செய்யும் படிவங்கள் மற்றும் மாதாந்திர அறிக்கை படிவங்களை ஒன்று படுத்துதல்.பிறப்பு, இறப்பு பதிவேடுகளை எளிதில் பராமரித்தல்.அடிப்படை பதிவாளர்களின் (Primary Registrars) வேலைப்பளுவினைக் குறைத்தல்.மாதாந்திர அறிக்கைகளை எளிதில் தொகுப்பதற்கும் மற்றும் அனுப்புவதற்கும் 2000-ஆம் ஆண்டு பிறப்பு, இறப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.
பிறப்பு இறப்பு பதிவு செய்ய அதிகாரம் பெற்ற துறைகள்
1969-ஆம் ஆண்டில் பிறப்பு, இறப்பு பதிவுச்சட்டம் செயல்படுத்தும் துறை, பொதுச் சுகாதாரத்துறையாக இருந்தது.பொதுச் சுகாதாரம் மற்றும் காப்பு மருந்து இயக்குநர், தமிழகத்தின் பிறப்பு, இறப்பு, பதி முதன்மைப் பதிவாளர் ஆவார்.தற்போது பிறப்பு, இறப்பு பதியும் துறைகள்கிராமப் பஞ்சாயத்து – வருவாய்த் துறை (கிராம நிர்வாக அலுவலர்).சிறப்பு ஊராட்சி – சிறப்பு ஊராட்சித் துறை.நகராட்சி / மாநகராட்சி – நகராட்சி நிர்வாகத் துறை / மாநகராட்சி ஆணையர்
பிறப்பு / இறப்பு பதிவு செய்யும் இதர துறைகள் : (Supporting Role)
மருத்துவப் பணிகள்மருத்துவக் கல்விபதிவுத் துறைகாவல்துறைநீதித்துறை