தேவாலா ஹோலிகிராஸ் உயர்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம்

பந்தலூர் அருகே தேவாலா ஹோலிகிராஸ் உயர்நிலைப்பள்ளியில் குடிமக்கள்
நுகர்வோர் மன்றம் துவங்கப்பட்டது.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில்
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள்
செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  அதன்படி நீலகிரி மாவட்ட முதன்மை
கல்வி அலுவலர் அவர்களின் உத்தரவுப்படி அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள்
நுகர்வோர் மன்றங்கள் ஆரம்பிக்கப்படுகின்றது.

இதன்படி கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய
வழிகாட்டலுடன் தேவாலா ஹோலிகிராஸ் உயர்நிலைப்பள்ளியில் குடிமக்கள்
நுகர்வோர் மன்றம் துவங்கப்பட்டது.  துவக்க விழாவிற்கு பள்ளி முதல்வர்
அனிஸ் ஜோர்ஜ் தலைமை தாங்கினார்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சி.
காளிமுத்து துவக்கி வைத்து பேசும்போது.
நுகர்வோர் விழிப்புணர்வு என்பது இன்று மிகவும் குறைவாக உள்ளது.  இதனால்
மக்கள் பெரும்பாலும் ஏமாற்றப்படுகின்றனர்.  அதனால் மாணவா்கள் மத்தியில்
நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.  பொருட்கள் மற்றும்
தரம் குறித்து மாணவர்கள் அறிந்து கொண்டு தரமான நுகர்வோர் சமுதாயம்
மேற்க்கொள்ள வேண்டும் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது
நுகர்வோர் உரிமைகள் எட்டு உள்ளன.  தரமான பொருட்களை வாங்கி உடலுக்கும்
உயிருக்கும் தீங்கு ஏற்படாமல் பாதுகாப்பு பெறும் உரிமை, பொருட்கள் பற்றிய
தகவல்கள் தெரிந்து கொள்வதற்கான உரிமை, நமக்கு பிடித்த தரமான பொருளை
தேர்வு செய்து பெறுவதற்கான உரிமை, குறைகளை சுட்டிகாட்டும் உரிமை,
குறைகளினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் பெறுவதற்கான உரிமை,
இயற்கையை பாதுகாப்பதற்கான உரிமை, நுகர்வோர் கல்வி விழிப்புணர்வு
பெறுவதற்கான உரிமை, மற்றும் அடிப்படை தேவைகளை கேட்டு பெறுவதற்கான உரிமை
என எட்டு உரிமைகளை அறிந்து கொண்டு அதற்கோற்றார்போல் நுகர்வோர்
தரமானவர்களாக மாற வேண்டும் என்றார்.

குடிமக்கள் நுகர்வோர் மன்ற உறுப்பினர்களான மாணவர்களின் சந்தேகங்களுக்கு
விளக்கம் அளிக்கப்பட்டது.

குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பள்ளி ஆசிரியர் ராஜன்
வரவேற்றார்,  நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை சுமித்திரா நன்றி
கூறினார்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...