பெயர் பதிவின் வரம்பு காலம்

பெயர் பதிவின் வரம்பு காலம்

01-01-2000-த்திற்குப் பிறகு நிகழ்ந்த பிறப்புக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 15 ஆண்டுகள்.01-01-2000-த்திற்கு முன்பு நிகழ்ந்த பிறப்புக்கு திருத்தியமைக்கப்பட்ட விதிகள் செயலாக்கத்திற்கு வந்த நாளிலிருந்து (01-01-2000) 15-ஆண்டுகள்.நிர்ணயிக்கப்பட்ட 15 ஆண்டுகள் காலக்கெடு முடிவுற்ற பின்னர் குழந்தையின் பெயரை பதிவு செய்ய விதிகளில் இடமில்லை.

ஓராண்டுக்குப் பின் மற்றும் 15-ஆண்டுகளுக்குள் பெயர் பதிவை மேற்கொண்டால் தாமதக் கட்டணம் ரூ.5 வசூலித்து, பதிவு மேற்கொண்டு அதிகாரம் பெற்ற அலுவலருக்கு தகவல் அனுப்ப வேண்டும்.ஒரு முறை பெயர் பதிவு மேற்கொள்ளப்பட்ட பின்பு பெயர் பதிவுகளை முழுவதும் எந்தச் சூழ்நிலையிலும் மாற்றலாகாது. ஆனால் எழுத்துப் பிழைகளை சரி செய்ய (Spelling Corrections) அதிகாரம் பெற்ற அலுவலர் அனுமதிக்கலாம்.

சாதிப்பெயர், குடும்ப பெயர் அல்லது வேறு அடையாளங்களைப் (Any other identification) பெயருடன் சேர்க்கவோ, நீக்கவோ முடியும் ஆனால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பெயரில் எந்த மாற்றமும் செய்யாமல் பெற்றோர் அல்லது காப்பாளரின் உறுதிமொழி அடிப்படையில் செய்யலாம்.பெயர் பதிவு மேற்கொள்ளக் கோருபவரின் உண்மைத்தன்மையை தொடக்கத்திலும் அல்லது பதிவு செய்யும்போதும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். 

பதிவாளர் மேற்கண்டபடி நிகழ்வின் உண்மைத் தன்மையை தன் மனநிறைவுப்படி உறுதி செய்து கொள்வது மிகவும் முக்கியம்.தமிழ்நாடு பிறப்புகள் மற்றும் இறப்புகள் (பிரிவு-15, விதி-11)-இன் படி வரையறுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பதிவாளர் பின்பற்றி, அதிகாரம் பெற்ற அலுவலரின் முன் அனுமதி பெற்று சரிசெய்தல் மற்றும் நீக்கம் செய்யலாம்.அதிகாரம் பெற்ற அலுவலரின் முன் அனுமதி பெற்று, மூலப்பதிவில் மாற்றம் ஏதும் செய்யாமல், பக்க ஓரத்தில் தகுந்த பதிவைச் சரிசெய்யலாம் அல்லது நீக்கம் செய்யலாம். பக்க ஓரப்பகுதியில் கையொப்பமிட்டு சரிசெய்த (அ) நீக்கம் செய்த தேதியை அதில் சேர்க்க வேண்டும்.
பிறப்பு - இறப்பு - பதிவேட்டில் திருத்தம் செய்யும் முன்பு கவனிக்க வேண்டியவை (Before Correction):

நம்பத்தகுந்த இரு நபரிடம் சான்றுகளைக் கண்டிப்பாக பெற வேண்டும்.பிரிவு – 21-இன் படி திருத்தங்களை உறுதி செய்வதற்குத் தேவையான வேறு ஏதாவது சான்று ஆவணங்கள் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தலாம்.

திருத்தங்கள் செய்வதற்காக வரும் நபர் உண்மையில் நிகழ்வுக்கு சம்பந்தப்பட்டவரா என்பதனையும், தரப்படும் விவரங்களை முற்றிலுமாக விசாரிக்க வேண்டும்.திருத்த நேர்வின் விவரங்களை உறுதிப்படுத்திக் கொண்டு அதிகாரம் பெற்ற அலுவலரின் எழுத்து மூலமான அனுமதி விதிகள் 11(1), 11(2) மற்றும் 11(3)-இன் படி பெற வேண்டும்.
பிறப்பு - இறப்பு திருத்தங்கள் மேற்கொள்ளும் போது கவனிக்க வேண்டியவைகள் (Effecting Corrections)

பதியப்பட்ட பதிவினை அழித்துவிடுவதோ அல்லது அழித்துவிட்டு திருத்தங்கள் மேற்கொள்வதோ கூடாது, ஆனால் முதலாம் பதிவுகளை மையினால் சுழித்துவிட்டு (Rounded by ink) சரியான விவரங்களை பதிவின் ஓரமாக எழுத வேண்டும்.செய்யப்பட்ட திருத்தங்களுக்குப் பதிவாளர் தன் கையொப்பம் மற்றும் திருத்தம் செய்யப்பட்ட தேதியிட்ட மேற்குறிப்பு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பதிவேட்டின் முதல் பக்கத்தில் ஆண்டு எண் விவரங்கள் மற்றும் செய்யப்பட்ட திருத்தங்களின் விவரங்களை வரிசைப்படி காண்பிக்கப்பட வேண்டும் அவ்வப்போது செயலாட்சி அதிகாரம் (Executive authority) கொண்ட அலுவலரின் கையொப்பத்தை பெற வேண்டும்.சான்றுகள் வழங்கப்பட்ட பின் திருத்தங்கள் ஏதேனும் மேற்கொண்டால் அதனின் விவரம் பதிவேட்டிலும் அதே போன்று சான்றிலும் திருத்தங்களுக்குப் பின் பதியப்பட வேண்டும்.

திருத்தங்கள் தேவையான ஆவணச் சான்றுகள் முழுமையான விசாரணையின் அடிப்படையில் செயல்படுத்தல் வேண்டும். மேற்கொண்டு அதே இனத்தில் திருத்தங்களை அனுமதித்தல் ஆகாது. ஏனெனில் மேற்கொண்ட விசாரணை மற்றும் பரிசீலிக்கப்பட்ட சான்றாவணங்களின் செல்லத்தக்க (Validity) நிலைக்கு எதிராகக் கொண்டுசெல்ல இயலும்.
அயல்நாட்டிலுள்ள இந்திய குடிமக்களின் பிறப்புகள் மற்றும் இறப்புகளின் பதிவு (பிரிவு 20)

இந்திய தலைமைப் பதிவாளர் விதிக்கு உட்பட்டு அயல்நாட்டிலுள்ள இந்திய தூதரகங்களில் இந்தியாவுக்கு வெளியே வாழ்கின்ற இந்தியக் குடிமக்களைப் பதிவு செய்ய வேண்டும்.குடிமைச்சட்டம் 1955-இன் படி பிறப்பு – இறப்புகளை பதிவு செய்ய வேண்டும் என பிரிவு 20 கூறுகிறது.

வெளிநாட்டில் “பிறந்து” பிறப்பு பதியப்படாமல் இந்தியாவில் நிலையாக தங்கியிருக்கும் நோக்குடன் வந்து இந்தியாவில் தங்கிய நாளிருந்து 60 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.இந்தியாவில் வந்து தங்கிய 60 நாள்களுக்கு மேல் பிறப்பினை பதிவு செய்யும் போது பிரிவு-13-இன் ஷரத்தின் படி பின்பற்ற வேண்டும்.
விபத்தினால் நிகழும் இறப்பின் பதிவுகள்

இறப்புகள் இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை, கொலை, விபத்துகள் அல்லது வன்முறை போன்றவற்றால் மருத்துவமனைகளில் சேர்த்த பின்பு ஏற்படும் இறப்புகள்.பொது இடங்களில், சிறைச்சாலைகளில் ஏற்படும் இறப்புகள். தற்கொலை, கொலை, விபத்துகள் அல்லது வன்முறை போன்றவை மூலம் ஏற்படும் இறப்பை மருத்துவமனை பொறுப்பாளர்கள் பிரிவு 8(1) (b)-இன் படி பதிவாளருக்கு பதிவு செய்ய தகவல் அளிக்க வேண்டும்.

விசாரணை, அல்லது பிரேத விசாரணை மேற்கொள்ளும் நிலையில் விசாரணை அதிகாரி அல்லது காவல்துறை பதிவாளருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

பொது இடங்களில், சிறைச்சாலையில் இருக்கும் போது ஏற்படும் இறப்புகள் பற்றி விசாரணை செய்யும் அலுவலர் குறிப்பிட்ட காலத்துக்குள் பதிவாளருக்கு இறப்பு அறிக்கை அனுப்ப வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் பிறப்பு / இறப்பு காலமுறை அறிக்கை அனுப்புதல் : (விதி-14-இன் படி).


கிராம நிர்வாக அலுவலர் ஒவ்வொரு மாதமும் பதிவுகளை முடித்த பின் புள்ளி விவரங்களடங்கிய புள்ளி விவரத் தகவல்களை(Statistical parts of the reporting terms) மாதாந்திர சுருக்க அறிக்கைகள் (படிவம் 11, 12 மற்றும் 13) ஆகியவற்றை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பிறப்பு, இறப்பு முடிந்த அடுத்த மாதம் 5-ஆம் தேதிக்குள் அனுப்புதல் வேண்டும்.வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பிறப்பு / இறப்பு அறிக்கை சுருக்கத்தை பிரதிமாதம் 10-ஆம் தேதிக்குள் மாவட்ட தலைமையிடத்தில் உள்ள சுகாதாரப் பணி இணை இயக்குநருக்கு காலமுறை அறிக்கைகளை (Report) அனுப்ப வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் பிறப்பு – 

இறப்பு பதிவேடுகளைப் பராமரித்தல் (விதி-17):

கிராம நிர்வாக அலுவலர் பாதுகாக்கும் இப்பதிவேடுகளை (மூன்று) பிரிவாக பாதுகாப்பர்.

i) பிறப்புப் பதிவேடுகள்

ii) இறப்புப் பதிவேடுகள்

iii) உயிரற்ற பிறப்புப் பதிவேடுகள்

இம்மூன்றும் நிரந்தரப் பதிவேடுகள் ஆகும்.

இவைகளை அழித்துவிடக் கூடாது. ஏனெனில் விதி 13-இன் படி நீதிமன்றங்கள் மற்றும் அதிகாரம் அளிக்கப்பட்ட இதர அலுவலரின் அறிவுறுத்தல் மூலம் காலதாமதம் பிறப்பு / இறப்பு பதிவுகளை மேற்கொள்வதற்காக பதிவேடுகளை பாதுகாக்க வேண்டும்.வட்டாட்சியர் அளவில் 2 - ஆண்டுகள் பாதுகாத்து காப்புறு சார்பதிவாளரிடம் (Sub Registrar) ஒப்படைக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலரின் முக்கியக் கடமைகள்:

தனது அலுவலகத்தில் பிறப்பு – இறப்பு பதிவாளர் என்ற ”விளம்பரப் பலகை” வைத்து நேரம் மற்றும் VAO வின் பெயர் குறிப்பிடப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.பிறப்பு / இறப்பு பதிவுகள் மேற்கொள்ள போதிய படிவம் வைத்திருக்க வேண்டும்.பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்.பிறப்பு / இறப்பு உரிய காலத்துக்குள் பதிவை செய்ய வலியுறுத்த வேண்டும்.

பிறப்பு / இறப்பை நாட்காட்டி மாதத்தில் முன், பின்னாக மாறாமல் நாள் வரிசைப்படி பதிவை மேற்கொள்ள வேண்டும்.பிறப்பு / இறப்பை பதிய தவறியவர்களுக்கு குறிப்பாணை வழங்கி இப்பதிவை மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.மருத்துவமனையில் இறப்பு நிகழ்ந்தால் மருத்துவ அலுவலரிடம் 

படிவம் 4 (இறப்புக்கான காரணம்) சான்று பெற்றுப் பதிய வேண்டும்.பிரதிமாதம் 5-ஆம் தேதிக்குள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பிறப்பு / இறப்பு பதிவினை அனுப்ப வேண்டும்.பிறப்பு / இறப்பு மேற்கொண்டவுடன் பிரிவு – 12 - இன் படி பதிவு நகல் தகவல் அளிக்கும் நபருக்கு வழங்க வேண்டும்.

பிறப்பு / இறப்பு பதிவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவை, கீழ்க்கண்டவாறு அமைய வேண்டும்.பிறப்பு பதிவு – குழந்தையின் முதல் உரிமையாகும்.

வீட்டில் நிகழும் பிறப்பு / இறப்பை 21 நாள்களுக்குள் VAO விடம் பதிவு செய்ய வேண்டும்.பிறப்பினை பதிந்தவுடன் குழந்தையின் பெயரையும் பதிய வேண்டும்.குழந்தையின் பெயரை பதிவு செய்வது பெற்றோரின் கடமையாகும்.ஒருமுறை பதிவுசெய்த பெயரை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது.பிறப்பு / இறப்பு பதிவு முடித்தவுடன் இலவசச் சான்று பெற வேண்டும்.

பிறப்பு/இறப்பு பதிவு செய்வதின் நன்மைகள்
பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்திற்கான அத்தாட்சி இதுவே ஆகும்.குடியுரிமைக்கான அத்தாட்சியும் ஆகும்.

வாரிசுரிமைக்கான அத்தாட்சியும் ஆகும்.
கடவுச்சீட்டு விண்ணப்பிக்க ஆதாரம் இதுவேயாகும்.

வயதை நிரூபிக்க இறுதிச்சான்று இதுவே ஆகும்.

ஓட்டுநர் உரிமம் பெற மற்றும் இதர நன்மைகளுக்காகவும் இச்சான்று முக்கியத் தேவையாகும்

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...