லாக்டாலிஸ் ((Lactalis)), குழந்தைகள் பால்பவுடரில்

பிரான்சு நாட்டைச் சேர்ந்த பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான லாக்டாலிஸ் ((Lactalis)), குழந்தைகள் பால்பவுடரில் சால்மொனேல்லா ((Salmonella )) என்ற கிருமி கலப்பு புகார் காரணமாக 7 ஆயிரம் டன் எடையுள்ள பால்பவுடரை திரும்பப் பெற்றுள்ளது.
சால்மொனேல்லா என்பது ஃபுட் பாய்சனிங் எனப்படும் உணவு நச்சுத் தன்மை ஏற்படுத்தும் கிருமியாகும். வடமேற்கு ஃபிரான்சின் க்ரான் ((Craon)) நகரில் உள்ள லாக்டாலிஸ் நிறுவன தொழிற்சாலையில் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் உற்பத்தி செய்யப்பட்டு பிரிட்டன், சீனா, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை உள்பட அனைத்து பால்பொருட்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் முதல் 6 மாதத்துக்குட்பட்ட குழந்தைகள் உட்பட பல்வேறு குழந்தைகள் லாக்டாலிஸ் பால் பவுடரால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து ஃபிரான்ஸ் நுகர்வோர் நல அமைப்பு பால் பவுடரை திரும்பப் பெற உத்தரவிட்டது. இதையடுத்து அவை திரும்பப் பெறப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...