உலக சுகாதார அமைப்பு அறிவித்த நாள்: 9-12-1979*

📮 *இந்த நாளில் அன்று* 📮

*பெரியம்மை நோய் முற்றிலும் அழிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்த நாள்: 9-12-1979*

பெரியம்மை மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத் தன்மை கொண்ட நோயாகும்.

இது Variola major மற்றும் Variola minor ஆகிய இரு அதி நுண் நச்சுயிர்களால் உண்டாகிறது.

இவற்றுள் V. major அதிக உயிர்ப்பலிகளை உண்டாக்க வல்லதாகும்.

இக்கிருமி தாக்கியவர்களுள் 20 முதல் 40 விழுக்காட்டினர் இறந்து விடும் நிலை உருவாகியது.

உயிர் பிழைத்தவர்களில் பெரும்பாலனவர்கள் முகத்தில் நீங்காத தழும்புகளால் காணப்பட்டனர்.

20-ம் நூற்றாண்டில் இந்நோய் காரணமாக 300- 500 மில்லியன் மக்கள் இறந்தனர்.

1967-ல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி அந்த ஆண்டு மட்டும் 15 மில்லியின் மக்கள் அந்நோய் தாக்கப்பட்டு அவர்களுள் இரண்டு மில்லியன் மக்கள் இறந்தனர்.

எட்வர்ட் ஜென்னர் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை 1796-ம் அண்டு கண்டுபிடித்தார்.

1978-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய இராச்சியத்தில் ஜேனட் பார்க்கர் என்பவர் இந்நோய் தாக்கி இறந்தார்.

அதன் பின் இந்நோயின் தாக்குதல் எங்கும் அறியப்படவில்லை.

அதனால் 1979-ம் ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி இந்நோய் உலகத்தில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

┈┉┅━❀••🌺🌳🇮🇳🌳🌺••❀━┅┉┈

No comments:

Post a Comment

அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்*

 அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்* இந்திய அரசியல் சாசனம் இந்திய தண்டனை சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் முதல் தகவல் அறிக்கை (F.I.R.)...