போட்டி தேர்விற்கான விழிப்புணர்வு கூட்டம்

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களில் போட்டி தேர்விற்கான விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.
பந்தலூர் தாலுக்கா அத்திக்குன்னா அரசு உயர்நிலைப் பள்ளியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளியின் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில்  நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது. 
தரமான கல்வி மற்றும் அரசு தேர்வாணைய போட்டி தேர்வுகள் என்ற தலைப்பில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு பள்ளி ஆசிரியர் பிரதீப் தலைமை தாங்கினார். 
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சி. காளிமுத்து பேசும்போது மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மாணவர்கள் படிக்க வேண்டும்.  பொழுதுபோக்கு அம்சங்களின் அதிக ஈடுபாடு கொண்டால் படிப்பு வீனாகும். கல்வியே சிறந்த மூலதனமாகும்.  படித்தவர்கள் தான் இப்போது வெற்றி பெற முடிகின்றது.  பெண்களும் படிப்பினால்தான் பல துறைகளில் முன்னேறி உள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.  தரமான கல்வி எதிர்காலத்தை வளமாக்கும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது  அரசு சார்பில் போட்டி தேர்வுகள் நடத்தியே அரசு பணிகள் வழங்கப்படுகின்றது.  படித்த பட்டதாரிகள் அதிகம் இருப்பதால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றால் தான வேலை என்கிற நிலையில் சாதாரன படிப்புக்கான பணிக்கு கூடி முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  அரசு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடதிட்டங்களில் உள்ள கேள்விகளை தொகுத்து கேட்கப்படும் கேள்விகள் போட்டி தேர்வில் இடம்பெறுகிறது.  எனவே  மாணவர்கள் படிக்கும்போதே போட்டி தேர்வுகளுக்கு தயாராக வேண்டும்.  அதுபோல தினசரி செய்திதாள்கள் வாசிப்பதன் மூலம் பொது அறிவையும் வளர்த்துக் கொள்ளலாம். அப்போது தான் போட்டி தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற முடியும்.  என்றார்.  தொடர்ந்து மாணவர்களுக்கு போட்டி தேர்வு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
அதுபோல உப்பட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் போட்டி தேர்வு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.  பள்ளி தலைமை ஆசிரியர் கீவர்கீஸ் தலைமை தாங்கினார் மாணவர்களுக்கு போட்டி தேர்வின் அவசியம் மற்றும் போட்டி தேர்விற்கு தயாராகும் முறைகள் குறித்து கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசினார்கள்.  பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சேரம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியிலும் பள்ளி மாணவர்சகளுக்கு போட்டி தேர்வுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டு துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...