ஊட்டி ஜெல் மெமோரியல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா

ஊட்டி:ஊட்டி ஜெல் மெமோரியல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடந்தது.
தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், ஊட்டி ஜெல் மெமோரியல் பள்ளி இணைந்து செயல்படுத்தும், குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா பள்ளியில் நடந்தது.
பள்ளியின் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜோஸ்வின் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியை ஷீலாபாப்பையா தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், மன்றத்தை துவக்கி வைத்து பேசுகையில், ""பள்ளி, மாணவ, மாணவியரை குறி வைத்தே, விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. மாணவர்கள் ஏமாறாமல் இருக்க, பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை துவக்கி, அதில் மாணவ, மாணவியர் இணைய வேண்டும்,'' என்றார்.
நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர் மேரி கிலாடி நன்றி கூறினார்.



ஊட்டி, ஜன. 12:ஊட்டியில் உள்ள ஜெல் மெமோரியல் பெண்கள் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியவை இணைந்து செயல்படுத்தும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா ஊட்டி ஜெல் நினைவு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது. பள்ளியின் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜொஸ்வின் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் ஷீலா பாப்பையா தலைமை வகித்தார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவரும், மாவட்ட அரசு நுகர்வோர் பாதுகாப்பு குழு பிரதிநிதியுமான சிவசுப்பிரமணியம் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தை துவக்கி வைத்து பேசுகையில், நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகப்படுத்தும் நோக்கில் பள்ளிகளில் குடி மக்கள் நுகர்வோர் மன்றங்கள் துவக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. தற்போதைய சூழலில் காலை முதல் இரவு வரை நாம் பயன்படுத்தும் பெரும்பான்மையான பொருட்கள் அனைத்தும் விளம்பரங் களை பார்த்தே தேர்வு செய்கிறோம். இதனால் நமது தேவையை விட அதிக செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளோம்.
தற்போது பள்ளி மாணவ, மாணவியர்கள், சிறுவர்கள், குழந்தைகளை குறி வைத்தே விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. மாணவர்கள் ஏமாறாமல் இருக்க நுகர்வோர் சார்ந்த விழிப்புணர்வை அடைய நுகர்வோர் மன்றத்தில் இணைந்து தகவல்களை அறிந்து குடும்பத்தார், உறவினர்களிடையே எடுத்து சொல்ல வேண்டும். தரமான பொருட்களை அடையாளம் கண்டு அவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து பள்ளி மாணவியர்கள் சார்பில் உணவு கலப்படம், தரமற்ற பொருட்கள், போலி விளம்பரங்கள், நுகர்வோர் ஏமாற்றங்கள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் மேரி கிலாடி நன்றி கூறினார்.




















குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்கம்

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...