தையல் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்


பந்தலூர் : "தையல் தொழிலாளர்களுக்கு அரசு மூலம் வழங்கும் பல்வேறு சலுகைகளை பெறுவதில் ஆர்வம் காட்ட வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பந்தலூரில்   இந்திய அரசு நேரு யுவகேந்திர சார்பில், தையல் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சேரங்கோடு தையல் பயிற்சி மையத்தில் நடந்தது.

தையல் பயிற்சி ஆசிரியை மகேஷ்வரி வரவேற்றார். 

விஜயன் சாமுவேல் பேசுகையில்,"தற்போது பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. தொடர்ந்தும் தையல் பயிற்சி நடத்துவதுடன், ஏழை மாணவர்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் கம்ப்யூட்டர் பயிற்சி மையமும் துவக்கப்படும்,'' என்றார். 

பயிற்சி நிறைவு செய்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், "பொழுதுபோக்காக தையல் பயிற்சி பெற்றுவந்த காலம் மாறி, தற்போது குடும்பத்தையே காப்பாற்றும் அளவிற்கு தையல் தொழில் வளர்ந்துள்ளது. பயிற்சி பெற்றவர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை சார்பில் வழங்கப்படும் பல்வேறு சலுகைககளை பெறுவதற்கும் ஆர்வம் காட்ட வேண்டும்,'' என்றார். 

தலைமையாசிரியர் சமுத்திரபாண்டியன், குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் தண்டபானி, கவுன்சிலர்கள் சந்திரன், ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர். 

சுகாதார ஆய்வாளர் கனயேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். தையல் பயிற்சி  மைய ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...