பார்வை இழப்பு எனும் பெரும் அவலத்தை அதிகம் சுமக்கும் தேசமாக நம் தேசம் இருக்கிறது. இன்று, ஒரு கோடியே 50 லட்சம் பேர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 46 லட்சம் பேர், “கார்னியல்’ பார்வைக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 60 சதவீதம் பேர் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள். இவர்களுக்கு நம்மால் உதவ முடியுமா என்றால், நிச்சயமாக முடியும்; அதுவும், கண் தானத்தினால் மட்டுமே. மரணமடைந்தவர்களின் கண்களை ஆறு மணி நேரத்திற்குள், அருகில் உள்ள கண் மருத்துவமனை வங்கிக்கு சேரும்படி செய்து விட்டால் போதும்… இறந்தவர் கண்கள் இரண்டு பேருக்கு பொருத்தப்பட்டு பார்வை பெறுவர்.
இதற்கு தேவை மனப்பக்குவம் மட்டுமே. இறந்தவர்களின் உறவினர் சம்மதம் பெற்றே கண் தானம் செய்ய முடியும். ஆகவே, உறவுக்காரர்களிடம் கண் தானத்தின் மகத்துவத்தை விளக்கி, கண் தானம் செய்ய சம்மதம் பெறவேண்டும். சம்மதம் கிடைத்ததும், அருகில் உள்ள கண் மருத்துவமனைக்கு, போன் செய்தால் போதும். மருத்துவமனையில் இருந்து சம்பந்தபட்டவர்களே நேரில் வந்து, கண்களை எடுத்துச்சென்று விடுவர். ஒரு வயது நிரம்பிய குழந்தை முதல், எவ்வளவு வயதானவராக இருந்தாலும், அவரது கண்கள் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும். கண்களை எடுத்தபின் இமைகளை மூடி தைத்து விடுவதால், முகம் விகாரமாக தோன்றாது. அனைத்து ஜாதி, மதங்களும் கண் தானத்தை உயர்வான காரியமாகவே கருதுவதால், இது எந்த மத சம்பிரதாயத்திற்கும் எதிரானதல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இறந்த பிறகு, மண்ணால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்பட்டோ, எவ்வித பலனும் இல்லாமல் போகக்கூடிய இறந்தவரின் கண்கள் தானமாகக் கிடைத்தால், இருவர் கண்கள் ஒளி பெறுவதுடன், மூலம், இறந்த பிறகும் இவர்கள் மூலம் வாழ்கின்றனர் என்றே சொல்லலாம்.
அந்த வகையில், நம் மனதில் மனிதநேயம் நிறைந்து இருக்கும் பட்சத்தில், குடும்ப உறுப்பினர்களிடம், “நான் இறந்தால், என் கண்களை தானமாக கொடுத்து விடுங்கள்… அப்போதுதான் என் ஆன்மா சாந்தியடையும்!’ என்று சொல்லி வையுங்கள். அது ஒன்றே நிச்சய பலன் தரும். மற்றபடி, இறந்தவர்களின் வீடுகளில் இருப்பவர்களிடம் பேசி, கண்களை தானமாக பெறும் முயற்சியில் இறங்க வேண்டும். இந்த முயற்சி பலன் தந்தால், இரண்டு பேர் பார்வை பெறுவர் என்பதை எண்ணும் போது, அதற்காக எத்தகைய மான, அவமானங்களையும் பொறுத்துக் கொள்ளலாம்.
சரியாக சொல்வதானால் கண்களை தானமாக அளிப்பதன் மூலம், வாழும் வாழ்க்கை மட்டுமல்ல… வாழ்ந்த பிறகு கிடைக்கும் மரணம் கூட அர்த்தமுள்ளாதாகும். ***
இதில் இலங்கை முன்னோடி…
மக்கள் தொகையில் இந்தியாவை விட இலங்கை பல மடங்கு குறைவாக இருந்தாலும், இந்தியாவிற்கு தேவையான கண்கள் அதிகம் இலங்கையில் இருந்தே தானமாக பெறப்படுகிறது. இதற்கு காரணம், இலங்கையில் கண் தானம் என்பது கட்டாய தானம் போல! ஆனால், இங்கே இன்னும் அதற்கான விழிப்புணர்வு வரவில்லை. விழிப்புணர்வு வந்துவிட்டால், நம் தேவைக்கு போக, மற்ற நாட்டில் உள்ள கண் பார்வை இழந்தோருக்கு கூட தானம் செய்யலாம்.
மனிதா!
இரக்கப்படாதே
சுயநலவாதியாய் இரு
நம் கண்களை
மண்ணுக்கும் காற்றுக்கும்
பறவைக்கும் பூச்சிக்கும்
தானம் செய்தது போதும்
தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும்!
தானத்தில் சிறந்தது எது ???
ஒட்டிய வயிறோடு
எலும்பு கூடு தோற்றத்தில்
பெரியவர் ஐயா பசி
என்றபோது யோசித்தேன்
அன்னதானம் சிறந்ததோ
தானம் தந்த கண்கள்
ஒளிப்பெற்று உலகம் கண்டு
பூரித்தப்போது யோசித்தேன்
கண் தானம் சிறந்ததோ
தந்த ரத்தத்தில் உயிர்த்த
குழந்தை தத்தி தவழ்ந்து
அருகில் வந்து
கன்னத்தில் முத்தமிட்டப்போது
யோசித்தேன்
ரத்த தானம் சிறந்ததோ
கண்மங்கி உடல் உழைத்து
வறுமையில் உழன்று
படித்து சாதிக்க துடிக்கும் இளங்குருத்துகளுக்கு
கல்விக்கண் திறக்க அவசியமென்பதால்
யோசித்தேன்
கல்விதானம் தான் சிறந்தததோ
நிதானம் தவறி பலமுறை
கோபத்தில் அடித்தப்போதும்
கண்ணீரோடு எதிர்த்து பேசாத
என் அன்பு மனைவி
என் கடும்சொல் பொறுக்காது
எரிந்த அவள் உடல் சாம்பலாகி
எனக்கு உணர்த்தியது
தானத்தில் சிறந்தது நிதானம் என்று...
இது வரை இந்த வருடம் மூன்று ஜோடி கண்களை தனமாக பெற்று கோவை அரவித் கண் மருத்துவ மனைக்கு அளித்துள்ளோம்.
பார்வை இழப்பு எனும் பெரும் அவலத்தை அதிகம் சுமக்கும் தேசமாக நம் தேசம் இருக்கிறது. இன்று, ஒரு கோடியே 50 லட்சம் பேர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 46 லட்சம் பேர், “கார்னியல்’ பார்வைக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 60சதவீதம் பேர் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள். இவர்களுக்கு நம்மால் உதவ முடியுமா என்றால், நிச்சயமாக முடியும்; அதுவும், கண் தானத்தினால் மட்டுமே. மரணமடைந்தவர்களின் கண்களை ஆறு மணி நேரத்திற்குள், அருகில் உள்ள கண் மருத்துவமனை வங்கிக்கு சேரும்படி செய்து விட்டால் போதும்… இறந்தவர் கண்கள் இரண்டு பேருக்கு பொருத்தப்பட்டு பார்வை பெறுவர். இதற்கு தேவைமனப்பக்குவம் மட்டுமே. இறந்தவர்களின் உறவினர் சம்மதம் பெற்றே கண் தானம் செய்ய முடியும். ஆகவே, உறவுக்காரர்களிடம் கண்தானத்தின் மகத்துவத்தை விளக்கி, கண் தானம் செய்ய சம்மதம் பெறவேண்டும். சம்மதம் கிடைத்ததும், அருகில் உள்ள கண் மருத்துவமனைக்கு, போன் செய்தால் போதும். மருத்துவமனையில் இருந்து சம்பந்தபட்டவர்களே நேரில் வந்து, கண்களை எடுத்துச்சென்று விடுவர். ஒரு வயது நிரம்பிய குழந்தை முதல், எவ்வளவுவயதானவராக இருந்தாலும், அவரது கண்கள் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும். கண்களை எடுத்தபின் இமைகளை மூடி தைத்து விடுவதால், முகம் விகாரமாக தோன்றாது. அனைத்து ஜாதி, மதங்களும் கண் தானத்தை உயர்வான காரியமாகவே கருதுவதால், இது எந்த மத சம்பிரதாயத்திற்கும் எதிரானதல்ல என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும். இறந்த பிறகு, மண்ணால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்பட்டோ, எவ்வித பலனும் இல்லாமல் போகக்கூடிய இறந்தவரின் கண்கள் தானமாகக் கிடைத்தால், இருவர் கண்கள் ஒளி பெறுவதுடன், மூலம், இறந்த பிறகும் இவர்கள் மூலம் வாழ்கின்றனர் என்றே சொல்லலாம்.
அந்த வகையில், நம் மனதில் மனிதநேயம் நிறைந்து இருக்கும் பட்சத்தில், குடும்ப உறுப்பினர்களிடம், “நான் இறந்தால், என் கண்களை தானமாக கொடுத்து விடுங்கள்… அப்போதுதான் என் ஆன்மா சாந்தியடையும்!’ என்று சொல்லி வையுங்கள். அது ஒன்றே நிச்சய பலன் தரும். மற்றபடி, இறந்தவர்களின் வீடுகளில் இருப்பவர்களிடம் பேசி, கண்களை தானமாக பெறும் முயற்சியில் இறங்க வேண்டும்.இந்த முயற்சி பலன் தந்தால், இரண்டு பேர் பார்வை பெறுவர் என்பதை எண்ணும் போது, அதற்காக எத்தகைய மான, அவமானங்களையும் பொறுத்துக் கொள்ளலாம்.
சரியாக சொல்வதானால் கண்களை தானமாக அளிப்பதன் மூலம்,வாழும் வாழ்க்கை மட்டுமல்ல… வாழ்ந்த பிறகு கிடைக்கும் மரணம் கூட அர்த்தமுள்ளாதாகும். ***
இதில் இலங்கை முன்னோடி…
மக்கள் தொகையில் இந்தியாவை விட இலங்கை பல மடங்கு குறைவாக இருந்தாலும், இந்தியாவிற்கு தேவையான கண்கள் அதிகம் இலங்கையில் இருந்தே தானமாக பெறப்படுகிறது. இதற்கு காரணம்,இலங்கையில் கண் தானம் என்பது கட்டாய தானம் போல! ஆனால்,இங்கே இன்னும் அதற்கான விழிப்புணர்வு வரவில்லை. விழிப்புணர்வுவந்துவிட்டால், நம் தேவைக்கு போக, மற்ற நாட்டில் உள்ள கண் பார்வை இழந்தோருக்கு கூட தானம் செய்யலாம்.
பார்வை இழப்பு எனும் பெரும் அவலத்தை அதிகம் சுமக்கும் தேசமாக நம் தேசம் இருக்கிறது. இன்று, ஒரு கோடியே 50 லட்சம் பேர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 46 லட்சம் பேர், “கார்னியல்’ பார்வைக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 60 சதவீதம் பேர் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள். இவர்களுக்கு நம்மால் உதவ முடியுமா என்றால், நிச்சயமாக முடியும்; அதுவும், கண் தானத்தினால் மட்டுமே. மரணமடைந்தவர்களின் கண்களை ஆறு மணி நேரத்திற்குள், அருகில் உள்ள கண் மருத்துவமனை வங்கிக்கு சேரும்படி செய்து விட்டால் போதும்… இறந்தவர் கண்கள் இரண்டு பேருக்கு பொருத்தப்பட்டு பார்வை பெறுவர். இதற்கு தேவை மனப்பக்குவம் மட்டுமே. இறந்தவர்களின் உறவினர் சம்மதம் பெற்றே கண் தானம் செய்ய முடியும். ஆகவே, உறவுக்காரர்களிடம் கண் தானத்தின் மகத்துவத்தை விளக்கி, கண் தானம் செய்ய சம்மதம் பெறவேண்டும். சம்மதம் கிடைத்ததும், அருகில் உள்ள கண் மருத்துவமனைக்கு, போன் செய்தால் போதும். மருத்துவமனையில் இருந்து சம்பந்தபட்டவர்களே நேரில் வந்து, கண்களை எடுத்துச்சென்று விடுவர். ஒரு வயது நிரம்பிய குழந்தை முதல், எவ்வளவு வயதானவராக இருந்தாலும், அவரது கண்கள் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும். கண்களை எடுத்தபின் இமைகளை மூடி தைத்து விடுவதால், முகம் விகாரமாக தோன்றாது. அனைத்து ஜாதி, மதங்களும் கண் தானத்தை உயர்வான காரியமாகவே கருதுவதால், இது எந்த மத சம்பிரதாயத்திற்கும் எதிரானதல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இறந்த பிறகு, மண்ணால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்பட்டோ, எவ்வித பலனும் இல்லாமல் போகக்கூடிய இறந்தவரின் கண்கள் தானமாகக் கிடைத்தால், இருவர் கண்கள் ஒளி பெறுவதுடன், மூலம், இறந்த பிறகும் இவர்கள் மூலம் வாழ்கின்றனர் என்றே சொல்லலாம்.
அந்த வகையில், நம் மனதில் மனிதநேயம் நிறைந்து இருக்கும் பட்சத்தில், குடும்ப உறுப்பினர்களிடம், “நான் இறந்தால், என் கண்களை தானமாக கொடுத்து விடுங்கள்… அப்போதுதான் என் ஆன்மா சாந்தியடையும்!’ என்று சொல்லி வையுங்கள். அது ஒன்றே நிச்சய பலன் தரும். மற்றபடி, இறந்தவர்களின் வீடுகளில் இருப்பவர்களிடம் பேசி, கண்களை தானமாக பெறும் முயற்சியில் இறங்க வேண்டும். இந்த முயற்சி பலன் தந்தால், இரண்டு பேர் பார்வை பெறுவர் என்பதை எண்ணும் போது, அதற்காக எத்தகைய மான, அவமானங்களையும் பொறுத்துக் கொள்ளலாம்.
சரியாக சொல்வதானால் கண்களை தானமாக அளிப்பதன் மூலம், வாழும் வாழ்க்கை மட்டுமல்ல… வாழ்ந்த பிறகு கிடைக்கும் மரணம் கூட அர்த்தமுள்ளாதாகும்
"கண்களின் வார்த்தைகள் புரியாதா" என்று கண்கள் நமது உணர்ச்சிகளை வெளிகாட்டும் ஒரு உறுப்பாக இருக்கிறது. கண்களை பராமரிப்பது என்பது மிகவும் கவனமாக செய்யவேண்டிய ஒன்று. கண்களை சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. எந்த கெமிக்கலையும் உபயோகிக்கும் முன் அது தரமானதா என்று பரிசோதித்துவிட்டு கண்களுக்கு போடுவது மிகவும் அவசியம். கண்கள் என்றதும் கருவளையம்தான் பலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கண்களைச் சுற்றி கரு வளையம் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் சரியான தூக்கம் இல்லாததே முழு முதற்காரணம் என்று சொல்லலாம். நல்ல தூக்கம் மிகவும் அவசியம். பகல் தூக்கத்தை விட இரவு தூக்கம் மிகவும் முக்கியம். இரவு தூக்கம் என்பது தொடர்ச்சியாக 8 மணி நேரமாவது இருக்குமாறு உங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுங்கள். கருவளையம் போக்குவதற்கு இயற்கை மருத்துவத்தில் தயிர் பரிந்துரைக்கப்படுகிறது. தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனம் கலந்து தினமும் கண்ணுக்கு அடியில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கண்ணின் கருவளையம் நீங்கும். உருளைக்கிழங்கின் சாறும் நல்ல பலன் தரும். உருளைக்கிழங்கை கண்ணிற்கு மட்டுமல்ல முகத்திற்கு தடவினாலும் கருமை நீங்கி சருமம் வெளுப்பாகும். பன்னீரை பஞ்சில் தோய்த்து இரவு படுக்கும் முன் கண்ணில் வைத்துக் கொண்டால், நாளடைவில் கருமை நீங்கி கண்கள் பளிச்சென்று இருக்கும். அதே போல் தரமான Under Eye க்ரீம்களும் நல்ல பலனை தரும். வயதானால் வரக்கூடிய கருவளையத்திற்கும் இப்போது தரமான க்ரீம்கள் மார்க்கெட்டில் இருக்கின்றன. பிரபலமான பிராண்டுகளில் இருக்கும் க்ரீம்களாக வாங்குவது நல்லது. தரக்கட்டுப்பாடு, பரிசோதனை என்று எல்லா கட்டங்களையும் தாண்டி வருவதால் கெடுதல் விளைவிக்க வாய்ப்பில்லை.
நன்றி : அறுசுவை.com
No comments:
Post a Comment