உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

20130119e_01810500301.jpg


தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்
சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டியில்
நடந்தது. இதில் நேரு யுவகேந்திரா மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்
ஜெயபிரகாஷ் பேசினார்.

உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஊட்டி, ஜன. 18:
தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்
சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டியில்
நடந்தது.



தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு நேரு யுவகேந்திரா, கூடலூர் நுகர்வோர்
மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் மற்றும் விழிப்புணர்வு சங்கம்
ஆகியவை சார்பில் உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஊட்டியில் உள்ள ரமணா கல்வி பயிற்சி மையத்தில் நடந்தது.

பயிற்சி மைய முதல்வர் சுரேஷ் வரவேற்றார். 

விழாவிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்து பேசுகையில், உடல் உறுப்புகளை தானம் செய்வதால் மரணத்தின் பிடியில் உள்ள ஒருவரை காப்பாற்ற முடியும். நம் உடலில் இருந்து சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், இதயம், கணையம், தோல், எலும்பு போன்ற உறுப்புகளை தானம் செய்யலாம். ஒருவர் தனது வாழ்நாளில் குறைந்தபட்சம் 100 முறையாவது ரத்த தானம் செய்து உயிர் காக்க முடியும்
என்றார்.



நேரு யுவகேந்திரா மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் பேசுகையில்,
�இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் நல்ல சமுதாயம் அமைய இணைந்து பாடுபட
வேண்டும். தற்போது இளைஞர்களிடையே போதை பழக்கம் பெருகி வருகிறது. இதில்
இருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும். இளைஞர் மன்றங்கள் சிறப்புடன் செயல்பட
நேரு யுவகேந்திரா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது� என்றார்.



இந்நிகழ்ச்சியில், விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன்,

மலைச்சாரல் கவிமன்ற தலைவர் சோலூர் கணேசன் மற்றும்
பயிற்சி நிலைய மாணவ, மாணவியர்கள்


உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.

19_01_2013_263_018.jpg


ஊட்டி:"உடல் உறுப்பு தானம் செய்ய, இளைஞர்கள் முன்வர வேண்டும்' என,
வலியுறுத்தப்பட்டது.



மத்திய அரசின் நேரு யுவகேந்திரா நீலகிரி கிளை,
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்,


ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் இணைந்து, ஊட்டி ரமணா பயிற்சி மையத்தில்,
தேசிய இளையோர் தின விழாவை நடத்தின.


பயிற்சி மைய முதல்வர் சுரேஷ் வரவேற்றார். 


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்து பேசுகையில், ""உடல் உறுப்பு தானம் செய்வது, மிகப் பெரிய தியாகம். ஒருவர் தன் வாழ்நாளில் 100 முறையாவது ரத்த தானம் செய்திருக்க வேண்டும்,'' என்றார்.



நேரு யுவகேந்திரா நீலகிரி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ்
பேசுகையில்,""இளைஞர் மன்றங்கள் சிறப்பாக செயல்பட, நேரு யுவகேந்திரா பல
உதவிகளை செய்து வருகிறது. போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் வெளிவர
வேண்டும்,'' என்றார்.



ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர்
ஜனார்த்தனன் பேசுகையில், ""இளைஞர்கள், அரசியல், ஜாதி, மதம், இனம், ரசிகர்
மன்றங்களை கடந்து, சேவை செய்ய வேண்டும்,'' என்றார். 


ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் நஞ்சன், "மலைச்சாரல்' கவிமன்ற தலைவர் சோலூர் கணேசன் பேசினர். 19_01_2013_263_019_001.jpg

மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 


ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...