சில தீர்ப்புகள்

 ஒரு கட்சிக்காரருக்காக வக்காலத்து தாக்கல் செய்த வழக்கறிஞர் , தனக்கு வழக்குரைஞர் கட்டணம் கொடுக்கவில்லை என்பதற்காக வழக்கில் ஆஜராக மறுக்க முடியாது. கட்சிக்காரரின் வக்காலத்தை ஏற்றுக் கொண்ட வழக்கறிஞக்கு அக்கட்சிக்காரர் சேவை கட்டணம் கொடுத்தாலும் கொடுக்கா விட்டாலும் அவருக்காக வாதாட வேண்டியது அவ்வழக்கறிஞரின் கடமை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

Ali Mohammed Kashmiri case - AIR 1960 AII (FB) P 660

 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் ஆவணங்களை, பொது ஆவணங்களாக கருத வேண்டும். ஆகவே அந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் சான்றாவணங்களாக குறியீடு செய்யலாம். 


(2009) 4 MLJ (Crl) Rakkappan Vs. State rep. By Inspector of Police, Cherambadi Police Station, Uthagamandalam District 


and 2011-1-LW (Crl) 335 S.Ramkumar Vs. State and Ors.

 புதிதாக தொழில் துவங்குவதற்கு தன் மனைவியின் வீட்டிலிருந்து பணம் வாங்கி வரும்படி கணவர் கூறினால் அதனை வரதட்சணை கொடுமையாக கருத முடியுமா? 

சென்னை உயர்நீதிமன்றம் " மந்திரன் கோனான் Vs காவல் துணை கண்காணிப்பாளர், திருச்செந்தூர் (2006-2-MWN-CRL-356)" என்ற வழக்கில், திருமணம் சம்மந்தமாக இல்லாமல் எதிரி தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக மனைவியிடம் பணம் கேட்டால் அதனை இ. த. ச பிரிவு 498 A ன் கீழான குற்றமாக கருத முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது. 


அதேபோல் உச்சநீதிமன்றம் " பிரீத்தி குப்தா Vs ஜார்க்கண்ட் மாநில அரசு (2010-7-SCC-667)" என்ற வழக்கில், ஒரு கணத்தில் ஏற்படுகிற கோபத்தின் காரணமாக பெரும்பாலான புகார்கள் இ. த. ச பிரிவு 498 A ன் கீழ் கொடுக்கப்படுகிறது. ஒரு சிறு விசயத்தை மிகவும் பெரிதுபடுத்தி அது சம்பந்தமாக புகார் அளிக்க கூடாது. வழக்கறிஞர்கள் இ. த. ச பிரிவு 498 A ன் கீழான பிரச்சினையை ஒரு அடிப்படை சமூக பிரச்சினையாக கருதி அதனை தீர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதனை விடுத்து பொய் புகார் கொடுக்க உடந்தையாக இருக்கக்கூடாது. பல பொய் புகார்கள் உருவாக வழக்கறிஞர்கள் காரணமாக இருக்கக்கூடாது. எனவே பொய்யான வரதட்சணை வழக்குகளை ஏற்க முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது. 


இதே கருத்தை உச்சநீதிமன்றம் " பஸ்கான் குமார் மீன் Vs பஞ்சாப் மாநில அரசு"  என்ற வழக்கில் வலியுறுத்தியுள்ளது. 


எனவே புதிதாக தொழில் துவங்குவதற்கு தன் மனைவியின் வீட்டிலிருந்து பணம் வாங்கி வரும்படி கணவர் கூறினால் அதனை வரதட்சணை கொடுமையாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

 RSO 31 - 5(ii) மற்றும் 8 ன்படி புல உட்பிரிவுக்கு உட்படாத இனங்கள் மற்றும் பிரச்சினைக்குரியவை இல்லாத இனங்களில் பட்டாதாரர் இறந்தால் அவரது வாரிசுகளுக்கு வருவாய் ஆய்வாளரால் பட்டா மாறுதல் செய்யும் நடைமுறை தற்போது இல்லை. பட்டா வழங்குதல் கணினி மயமாக்கப்பட்டதால் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியரால் பட்டா மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும் (CLA Lr. K4/369/2013, DT - 5.2.2013)


2.  RSO 31-6(ii) ன்படி 7 ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போனவர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று நிரூபிக்கப்படும் நிலையில் அவரது வாரிசுகள் அல்லது அனுபவதாரர் பெயரில் உரிமையியல் நீதிமன்றங்களின் தீர்ப்பாணைகளின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்யப்படும் (CLA. Lr. K4/369/2013, DT - 5.2.2013)


3. RSO 31-7 ன்படி 12 ஆண்டுகளாக நிலத்தின் சுவாதீனம் தன்னிடம் உள்ளது என்று நிரூபிப்பவரின் பெயரில் உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்யப்படும் (CLA. Lr. K4/369/2013, DT - 5.2.2013)


4.  கிரையம் பெற்றவரின் சொத்து விற்றவரின் பெயரில் கிராம கணக்கில் இருந்தால், கிரைய ஆவணத்தின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்யலாம். (CLA. Lr. K4/369/2013, DT - 5.2.2013)


5.  நிலத்தை மாற்றம் செய்பவர் பெயரும் 10(1) சிட்டாப்படி பதிவு செய்யப்பட்டவர் பெயரும் வெவ்வேறாக இருந்தால் நிலத்தை வாங்குபவர் மற்றும் விற்பவரை அலுவலகத்தில் விசாரிக்க வேண்டும். ஆவணச் சான்றுகள், முந்தைய விற்பனை பத்திரங்கள், கிஸ்தி ரசீதுகள், கிராம நிர்வாக அலுவலரின் நேர்முக சாட்சியங்கள் முதலியவற்றை பரிசீலனை செய்து 10(1) சிட்டாப்படி பதிவு பெற்ற நிலச்சுவான்தாரர் மற்றும் நிலத்தை தன் பெயருக்கு பதிவு மாற்றம் கோருபவர்களுக்கிடையே உள்ள தொடர்பை கண்டறிந்து ஆணை பிறப்பிக்க வேண்டும். (நிலவரித் திட்ட இயக்குநரின் கடிதம் H 1.113.287/1981, dt - 4.4.1981)


6.  பட்டா மாற்றத்தை ரத்து செய்யப்படும் மனுக்களில் அதற்கான காரணங்களை தெளிவாக குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் அனுப்பி அவர்கள் பெற்றுக் கொண்டதற்கான அஞ்சல் ஒப்புதல் அட்டையை சம்பந்தப்பட்ட கோப்பில் வைக்க வேண்டும் (நிலவரித் திட்ட இயக்குநரின் கடிதம் எண். K4. 16014/1985(சர்வே) dt - 8.2.1986)


VAO-க்கள் மீதான புகார்களை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும், தவறு செய்யும் VAO-க்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் உயர் நீதிமன்றம்.


CASE: W. P. No – 13916/2019, DATE – 1.7.2019.

 வண்டி சாவியை எடுக்க காவலர்களுக்கு அதிகாரம் உள்ளதா?

- May 24, 2021


பவன் பாரிக் (Pawan Parikh) என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த (தகவல் அறியும் உரிமை) ஆர்.டி.ஐ'ன் படி, மதுபோதையில் வண்டி ஓட்டுதல், திருட்டு வண்டி, தேடப்படும் குற்றவாளி மற்றும் சோதனைக்கு உட்படாமல் தப்பிக்க முயலுதல் போன்ற எந்தவொரு காரணமும் இல்லாமல் வாகனத்தின் சாவியைப் எடுக்க, எந்த அதிகாரிக்கும் உரிமை இல்லை.


காவலர் வண்டியை நிறுத்த சொல்லும்போது, நிறுத்தி..அவரின் கேள்விகளுக்கு முறையாக பதில் சொல்ல வேண்டும். இல்லையெனில், மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 179ன் படி 1 மாதம் வரையிலான சிறைத்தண்டனையோ அல்லது 500.ரூ வரையிலான அபராதமோ விதிக்க முடியும்.


சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு கீழே உள்ள காவலர்க்கு வாகனத்தின் ஆவணங்களை கேட்கவும் மற்றும் அபராதம் விதிக்கவும் அதிகாரம் இல்லை.  


இதனை மீறிச் செயல்படும் காவலர்க்கு எதிராக, 100'ஐ தொடர்பு கொண்டு, காவலரின் பெயர் - இடத்தினை குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுப்பார்கள்.


கிராமப்புறங்களில் சட்ட ஒழுங்கு காவலரே, போக்குவரத்து காவலராகவும் செயல்படுவார்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...