*ஒரே சொத்து, இரண்டு பத்திரம் என்ன* *செய்ய வேண்டும்*
*ஒரே சொத்தை இருவருக்கு விற்பது* *சட்டப்படி குற்றம் ஆகும்*
அவ்வாறு ஒருவர் விற்பனை செய்திருந்தால் இரண்டாவதாக செய்த விற்பனை செல்லாது. இருந்தாலும், அந்த சொத்தை முதலாவதாக வாங்கியவர் சட்டப்படி சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அந்த இரண்டாவது பத்திரத்தை முறைப்படி ரத்து செய்ய என்ன செய்ய வேண்டும்?
இரண்டாவதாக பதிவு செய்யப்பட்டுள்ள பத்திரத்தின் பதிவுகளை ரத்து செய்யக் கோரி, பதிவுச்சட்டம், 1908 - பிரிவு 82ன் கீழ் பதிவுத்துறைத் தலைவர் அவர்களுக்கு முதலில் உரிய ஆவண நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பதிவுத்துறைத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி தங்களின் விண்ணப்பமானது தங்களது மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அனுப்பப்படும்.
மாவட்டப் பதிவாளர் அவர்கள், சமபந்தப்பட்ட இரண்டு தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு ஆவணங்களை ஆய்வு செய்வார்.
உங்களது புகாரில் உண்மை இருப்பது மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களுக்கு தெரிய வந்தால், இரண்டாவதாக பதிவு செய்யப்பட்ட பத்திரஙளை ரத்து செய்ய சார்பதிவாளர் அவர்களுக்கு உத்தரவிடுவார்.
பதிவுச்சட்டம், 1908 - பிரிவு 83ன் கீழ் சட்டத்திற்கு புறம்பாக இரண்டு நபர்களுக்கு ஒரே சொத்தை விற்பனை செய்த நபர் மீது, காவல்நிலையத்தில் புகார் அளித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் சார்பதிவாளர் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் நீலகிரி மாவட்டம்
No comments:
Post a Comment