கூட்டுறவு சங்கங்கள் இணைப்ப பதிவாளர் அலுவலகத்தில் துறை சார்பான நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் இம்தியாஸ் தலைமை தாங்கினார்.
அங்கிகரிக்கபட்ட நுகர்வோர் அமைப்புகள் சார்பில் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், கோத்தகிரி ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் . தலைவர் வாசுதேவன் செயலாளர் முகமது சலீம் கூடுதல் செயலாளர் பீட்டர், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன், செயலாளர் ஹால்துரை, உதகை நுகர்வோர் சங்க தலைவர் அமீர்கான் ஆகியோர் பங்கேற்று பேசும்போது
கூட்டுறவு கடைகளில் போதிய பணியாளர்கள் இல்லாத சூழல் உள்ளது ஏற்கனவே பலரும் பணி கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் சூழலில் சிலருக்கு மட்டும் பணி வழங்கி பல இடங்களில் காலியாகவே வைக்கப்பட்டுள்ளது.
இதனால் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது ஒரே நபர் எடை போடுவது பொருட்கள் வழங்கும் சூழலும் உள்ளது .
இதை தவிர்க்க அனைத்து கடைகளிலும் விற்பனையாளர் மற்றும் எடையாளர் என இரு பணியிடங்களை நிரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து நியாய விலை கடைகளிலும் அயோடின் கலந்த உப்பு விற்பனை செய்வதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
ரேஷன் கடைகளில் வழங்கும் இதர பொருட்கள் தரமானதாகவும் இருப்பதை உறுதி படுத்தவும், அதனை விருப்பம் இன்றி கட்டாயபடுத்தி விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். அதுபோல உள்ளூர் மளிகை கடைகளை விட விலை குறைவாகவும் வழங்குவது உறுதிப்படுத்த வேண்டும்.
ஏற்கனவே தேவாலாவின் செயல்பட்டு வந்த கூட்டுறவு சிறப்பு அங்காடி மீண்டும் செயல்படுத்த வேண்டும் அல்லது பந்தலூரில் கூட்டுறவு சிறப்பங்காடி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு வழங்கும் பாரத் அரிசி அனைத்து நியாய விலை கடைகளிலும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளின் செயல்படும் மகளிர் குழுக்களுக்கு அரசு மூலம் வழங்கும் செறிவூட்டப்பட்ட அரிசி, அயோடின் உப்பு செறிவூட்டப்பட்ட பாமாயில் பயன்களை குறித்தும் விளக்கம் அளித்து ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வழங்கும் மளிகை பொருட்களை வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் செயல்படுத்த படும் இ சேவை மையங்களில் முறையான சேவை வழங்குவதை உறுதி படுத்தவும் , ஆதார் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவையையும் விரிவுபடுத்த வேண்டும். கடைகள் அடைத்து இருக்கும்போது அதற்கான தகவல் தெரிவிக்க படவேண்டும். மண்ணெண்ணெய் வழங்கும் நாள் குறித்து முறையான அறிவிப்பு இல்லத்தினால் மக்கள் மண்ணெண்ணெய் பெறுவது முறைப்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் உள்ளிட்ட கடன்கள் பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்தியும், கடன் தள்ளுபடி செய்த பின்னரும் கடன் பெற்றபோது பிடித்தம் செய்த பணம் திருப்பி வழங்காமல் உள்ளது அவற்றை முறைப்படுத்தி மீண்டும் கடன் பெறாதவர்களுக்கு வழங்க வேண்டும். தேவாலா, பந்தலூர் பகுதிகளில் செயல்பட்ட கூட்டுறவு மருந்து கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தினர்.
அதற்கு பதில் அளித்த துணை பதிவாளர் இம்தியாஸ் பேசும்போது.
ரேஷன் கார்டுகள் குறைவாக உள்ளதால் கூடுதல் பணியாக நியமனம் செய்வதில் வாய்ப்புகள் குறைவாக உள்ளது எனினும் பொது மக்களுக்கு இடையூறு இன்றி பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு சார்பில் வழங்கப்படும் அரசு உப்பு அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது கூடுதல் தேவைக்கு பொதுமக்கள் கேட்பதற்கு இணங்க கூடுதலாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது விநியோகம் அல்லாத பொருட்கள் கட்டாயமாக விற்பது கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது மீண்டும் புகார் விருது பட்சத்தில் சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பெரும்பான்மையான பொருட்கள் மளிகை கடைகளை விட குறைவாக வழங்கப்படுகிறது எனினும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பாரத் அரிசி ரேஷன் கடைகளில் விற்பனை செய்வது குறித்து அரசு எடுக்கும் முடிவை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் நிலுவையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் கடன் பெற்றவர்களின் தொகைகள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மூடப்பட்ட சிறப்பு அங்காடி மற்றும் மருந்தகங்கள் மீண்டும் திறக்க சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment