வாக்காளர் விழிப்புணர்வு 2026


## **வாக்காளர் விழிப்புணர்வு**

 *கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்* 


**வாக்கு செலுத்துவது நம் உரிமை | வாக்களிப்பது நம் கடமை**

### **வாக்களிப்பதற்கு முன்:**
 * வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
 * வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என அறிய **1950** அழைக்கலாம்.
 * நமக்கான அரசை நாம் தேர்ந்தெடுக்கும் உரிமை.
 * வாக்களித்தபின் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய **VVPAT** மூலம் உறுதி செய்யும் வசதி.

**நல்லவருக்கு வாக்களிப்பீர் | நல்ல அரசை தேர்வு செய்வீர்**

### **பணத்திற்கு வாக்களிப்பது:**
 * உங்கள் உரிமையை அடகு வைப்பது போல.
 * ஊழலின் ஊற்றுக்கண் ஊழல் முறைகேடுகளுக்கு வழி வகுக்கும்.
 * யாரையும் பிடிக்காவிட்டால் கடைசி பட்டன் **நோட்டாவில் (NOTA)** வாக்கு பதிவு செய்யலாம்.
 * உங்கள் ஓட்டை வேறு ஒருவர் கள்ள ஓட்டாக போடாமல் தடுக்க முடியும்.

**சிந்தித்து வாக்களியுங்கள் | சிறந்த அரசை உருவாக்குவீர்**

### **வாக்கின் மதிப்பு:**
 * வாரத்திற்கு 7 நாட்கள்
 * மாதத்திற்கு 30 நாட்கள்
 * ஆண்டிற்கு 365 நாட்கள்
 * 5 ஆண்டுக்கு 1825 நாட்கள்
 * ஓட்டுக்கு வாங்கும் பணம் ரூ. 1000 எனில், ஒரு நாளைக்கு வெறும் **54 பைசா** மட்டுமே.
 * அற்ப காசுக்காக உங்கள் ஓட்டை விற்காதீர்கள்.

### **வாக்களிக்க தேவையான ஆவணங்கள்:**
 * பூத் ஸ்லிப் (Booth Slip)
 * வாக்காளர் அடையாள அட்டை
 * ஆதார் அட்டை
 * ஓட்டுநர் உரிமம்
 * பான் கார்டு
 * வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட புகைப்படத்துடன் கூடிய ஆவணங்கள்.

**வாக்களிப்பது மட்டும் நம் கடமையல்ல, நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்பதும் அரசின் திட்டங்களைக் கேட்டு பெறுவதும், குறைகளைச் சுட்டிக் காட்டுவதும் நம் கடமையே.**

**சிறந்த குடிமக்களால் சிறந்த ஆட்சி - சிறந்த ஆட்சியால் சிறந்த குடிமக்கள்**

**வெளியீடு:**

**கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்**
தமிழக அரசு மாநில அளவிலான அங்கீகாரம் பெற்றது.
பந்தலூர், நீலகிரி மாவட்டம் - 643233.

No comments:

Post a Comment

வாக்காளர் விழிப்புணர்வு 2026

## **வாக்காளர் விழிப்புணர்வு**  *கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்*  **வாக்கு செலுத்துவது நம் உரிமை | வாக்...