கூடலூர் அருகே சூண்டி அரசு ஆரம்ப பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பேஷன் க்ரூப்ஸ் கூடலூர், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் ஆகியன சார்பில் சூண்டி அரசு ஆரம்ப பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது
முகாமுக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்.
பேஷன் க்ரூப்ஸ் மேலாளர் ஜபார், ஒவேலி சுகாதார ஆய்வாளர் மோகன் குமார், நுகர்வோர் மைய பொறுப்பாளர்கள் குருஞ்சி வேலுபிள்ளை. தனிஸ்லாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் t
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளரும் உதகை அரசு மருத்துவமனை மருத்துவருமான அமராவதி ராஜன், கண் தொழில் நுட்புனர் முத்துராஜ் ஒருங்கிணைப்பாளர் மங்கை ஸ்ரீதர் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பங்கேற்று கண் சம்மந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
முகாமில் பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த 120 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கண் புரை அறுவை சிகிச்சைக்காக 20 க்கும் மேற்ப்பட்டோர் பரிந்துரை செய்யப்பட்டனர். விருப்பத்தின் அடிப்படையில் 12 பேர், ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கான எற்பாடுகளை கூடலூர் நுகர்வோர் மைய நிர்வாகிகள் செய்திருந்தனர்
No comments:
Post a Comment