உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கலப்படங்களின்


உணவு, உடற்பயிற்சி மற்றும் அழுத்தமற்ற மனது ஆகிய மூன்றும் உடல் நலத்துக்கு தேவை. உடல் நலத்துக்கும், நோயற்ற வாழ்வுக்கும் பெரிதும் துணைபுரிவது தூய்மையான
சத்துமிக்க உணவு மற்றும் அதன் மூலம் கிட்டும் ஊட்டச்சத்து. மாறி வரும் உலக
சூழ்நிலையில், பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் உள்ள ரசாயன சேர்மானங்களால், உடல் நலத்துக்கு ஊறு விளைவிக்கும் சாத்தியக்கூறு அதிக அளவில் உள்ளன.மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு வகைகளால்,நம் உடல் நலத்துக்கு கேடு ஏற்படும். நொறுக்கு தீனி மற்றும் சாலையோர உணடு
விடுதிகளில் தயாரிக்கப்படும் உணவு பண்டங்களால் ஏற்படும் தீமை குறித்து
நுகர்வோர் இடையே விழிப்புணர்வு இல்லை.தற்போது, பல உணவுப்பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறது. அதை உட்கொள்பவர்கள் உடல் நலப்பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
கடலை பருப்பு, துவரம் பருப்பு ஆகியவைகளில் கேசரி பருப்பு கலப்படம்செய்யப்படுகிறது. இந்த கலப்பட பொருளை பயன்படுத்துவோருக்கு கீழ்வாதம் ஏற்படும்.
கடுகில் ஆர்ஜீமோன் விதை கலப்படம் செய்யப்படுகிறது. இது, தோல் நோயை ஏற்படுத்தும். உணவு எண்ணெயில் மினரல் ஆயில் சேர்க்கப்பட்டால், புற்றுநோய் ஏற்படும். மஞ்சள் தூளில் லெட்குரோமெட் சேர்க்கப்படுகிறது.
இது, ரத்த சோகை, குறை பிரசவம், மூளை பாதிப்பை ஏற்படுத்தும். பாலில் சுத்தமற்ற தண்ணீரைகலந்தால் வயிற்றுப்போக்கு ஏற்படும். தேயிலையில் முந்திரிதோல் செயற்கை சாயம் கலக்கப்பட்டு இருந்தால், புற்றுநோய், வயிறு எரிச்சல் ஏற்படும்.
பானங்கள், இனிப்புகளில் அனுமதிக்கப்படாத சாயங்கள் சேர்க்கப்பட்டு இருந்தால்புற்றுநோய் ஏற்படும்.

சில முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் உணவு பொருட்கள் மற்றும் நொறுக்குத்தீனிகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கலப்படங்களின் அளவு அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுக்குறித்து, டெல்லியில் உள்ள அரசு சாரா அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஒன்று மிகவும் பிரபலமான சில நிறுவனங்களின் தயாரிப்புக்களை ஆய்வக சோதனைக்கு தேர்ந்தெடுத்து சோதனை செய்தது.
அந்த ஆய்வில், குறிப்பாக மேகிடாப் ராமன் நூடுல்ஸ்மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ்,கே.எப்.சி பிரைட் சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த உணவுப் பொருட்களை சோதனை செய்த போது, அதில் அளவுக்கு அதிகமாக டிரான்ஸ்’ என்ற கொழுப்பு வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாக தெரிந்திருக்கிறது.
ஆனால், விளம்பரத்திற்காக இந்த நிறுவனங்கள் கூறும் முதல் வார்த்தை கொழுப்பற்றது, எந்த வித கலப்படமும் இன்று இயற்கையான மற்றும் 100% இயற்கையானது என்று பல்வேறு தகவல்களை கூறி விற்பனை செய்கிறது.
மேலும், இந்த பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு என்பது இதயத்தில் உள்ள வால்வுகளின் பாதையை குறுகலாக்குகிறது. இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவற்கான வாய்ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது.
இளம் வயதிலேயே நிறைய பேர் எடை அதிகமாவது, நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு ஆளாவதில் இந்த கலப்படங்கள் பங்கு வகிப்பதால் இயன்ற வரை இது போன்ற உணவு பொருட்களை தவிர்க்க முயலவேண்டும் என்று அந்த நிறுவனம் அறிவுரை கூறியிருக்கிறது.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...